103. அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. அது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி. இந்த இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? நமக்குத் தெரிந்த வரையில், ஆதாம் ஒரு இராட்சதன் அல்ல. அவன் இராட்சதனாயிருந்தால், வேதம் கூறியிருக்கும். அவன் ஒரு சாதாரண மனிதன். இராட்சதர் எங்கிருந்து வந்தனர்? இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். இப்பொழுது தான் இது என் கையில் கொடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய கறுப்பு தாளில் உள்ளது, இல்லை, வெள்ளைத் தாளில் பெரிய கறுப்பு எழுத்துக்களில்.
104. இப்பொழுது, இந்த இராட்சதர்... நான் நினைக்கிறேன் அண்மையில் யாரோ ஒருவர் இங்கு... அது ஜோசியஸாக இருக்கக்கூடும். என் ஊழியக்கார சகோதரர்களே, அது ஜோசியஸ் என்று நான் நிச்சயமாக கூறவில்லை. அது அவராக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது, அல்லது டாக்டர் ஸ்கோஃபீல்ட், அல்லது வேறு யாரோ, தேசத்திலிருந்த இந்த இராட்சதர் பரலோகத்தில் சாத்தான் சொன்ன கதையைக் கேட்டு விழுந்து போன தேவனுடைய ஆவிகள் என்று கூறியுள்ளார். அது மிகாவேல்... பரலோகத்தில் மிகாவேலுக்கு எதிராக யுத்தம் செய்து... கீழே தள்ளப்பட்டனர். இந்த தேவபுத்திரர் மனுஷகுமாரத்திகளைக் கண்டனர். அவர்கள் அந்த சமயத்தில் இராட்சதர்களாக மாம்ச உருவெடுத்து வந்தனர் என்கின்றனர். அவ்விதம் நீங்கள் செய்தால், நீங்கள் சாத்தானை சிருஷ்டிகராக ஆக்கிவிடுவீர்கள். நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது.
105. ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தாரைச் சேர்ந்த டாக்டர் ஸ்மித் பலி ஆட்டைக் குறித்துக் கூறினது போல. அவர் சொன்னார் ஒரு ஆடு... அவர்கள் பலியிடும் நாளில் - அதாவது பாவநிவிர்த்தி நாளின்போது - ஒரு ஆடு கொல்லப்பட்டது. மற்ற ஆடு அவிழ்த்துவிடப்பட்டது. கொல்லப்பட்ட ஆடு நமது பாவங்களைச் சுமந்து மரித்த இயேசுவுக்கு அடையாளமாயுள்ளது என்றும், அவிழ்த்து விடப்பட்ட ஆடு பிசாசைக் குறிக்கிறதென்றும், அது நமது பாவங்களை சுமந்து கொண்டு அதனுடன் நித்தியத்துக்கு செல்கிறதென்றும் அவர் கூறினார். இப்பொழுது, பாருங்கள், எந்த... என் கருத்தின்படி... இது ஏழாம் நாள் ஆசரிப்பு சகோதரனுக்கு கிடைக்க நேர்ந்தால், நான் அந்த மேதை டாக்டர் ஸ்மித்தைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஓ, அவர் சாமர்த்தியமுள்ள, புத்திசாலியான, அருமையான, பண்புள்ள கிறிஸ்தவர், ஒரு விசுவாசி; ஆனால் என்னைப் பொறுத்த வரையில், பாருங்கள், அது அர்த்தமற்றது. அவ்விதம் நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் பிசர்சுக்கு பலி யிடுகின்றீர்கள். அந்த இரண்டு ஆடுகளுமே கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளன. அவர் நமது பாவங்களுக்காக மரித்து, நமது பாவங்களை வெகு தூரம் சுமந்து சென்று விட்டார்; இரண்டுமே கிறிஸ்துதான்.
109. எனவே இந்த இராட்சதர் மாம்ச உருவெடுத்து இங்கு தோன்றினவர்கள் அல்ல. அவர்கள் காயீனின் புத்திரர், காயீனின் தகப்பன் சர்ப்பம். அவன் எல்லா வகையிலும் மனிதனைப் போலவே காணப்பட்டான். ஆனால் அவன் மிகப் பெரிய உருவம் கொண்டவன், மனிதனைக் காட்டிலும் பெரிய உருவம் படைத்தவன். அங்கிருந்து தான் அந்த குமாரர் தோன்றினர், அவர்கள் காயீனின் புத்திரர். அவர்கள் கானான் தேசத்திலிருந்த கானானியர். அங்கிருந்து தான் அவர்கள் தோன்றினர். அங்குதான் காயீன் சென்றான். அது பாருங்கள், அது சர்ப்பத்தின் வித்தையும் நிரூபிக்கிறது. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான ஜாதியார். அவர்கள் சர்ப்பத்தின் வித்துக்கள். பாருங்கள்?
107. சர்ப்பத்தின் வித்தைப் பற்றிய ஒரு கேள்வி இங்குள்ளது. எனவே அதற்கு நாம் வரப்போகிறோம். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? இது உங்களுக்கு ஒரு பின்னணியை அளிக்கும்.
108. பாருங்கள், அவர்கள் கானானியர், இந்த இராட்சதர்; அவர்கள் காயீனின் புத்திரர், காயீன் சர்ப்பத்தின் குமாரன். சர்ப்பம் ஒரு இராட்சத மனிதன், பெரிய பயங்கரமான உருவம் படைத்தவன், அவன் ஊரும் பிராணி, அல்ல, அழகுள்ளவன். அவன் எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அவன் ஒருவன் மாத்திரமே...
109. பாருங்கள், ஒரு மிருகத்தின் மரபு அணுக்கள் (genes) ஒரு ஸ்திரீயில் செலுத்தப்பட்டால், அது கருத்தரிக்காது. அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்று பார்த்து விட்டனர்; அது ஸ்திரீயின் முட்டையுடன் சேர முடியாது. இப்பொழுது, அவர்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வாலில்லாக் குரங்கை (chimpanZcc) எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதக் குரங்கை (go) - Tilla): அவை மனித உருவுக்கு மிகவும் நெருங்கினவைகளாக உள்ளன். தேவன் தமது மகத்தான படிப்படியான சிருஷ்டிப்பில், "முதலில் மீனை உண்டாக்கினார்; அதன் பிறகு பறவைகளை உண்டாக்கினார்; அதன் பிறகு மிருகங்களை உண்டாக்கினார். அவை படிப் படியாக உயர்ந்து கொண்டே வந்து, வாலில்லாக் குரங்கு, பிறகு மனிதக் குரங்கு, அதன் பிறகு சர்ப்பத்தின் உருவம், பிறகு சர்ப்பத்திலிருந்து மனிதன்".
110. மனிதனுக்கு அடுத்தபடியாக இருந்த இந்த மிருகம் எது என்று கண்டறிய மனிதகுலம் - விஞ்ஞானம் - எலும்புகளை தேடிப் பார்க்க முயன்றது. மனிதனும் ஒரு மிருகமே. மனிதனின் மாம்ச பாகம் மிருகத்தின் மாம்சமே. அது நமக்குத் தெரியும். நாம் குட்டிப் போட்டு பாலூட்டும் மிருக இனத்தை (marmmal) சேர்ந்தவர்கள். அது சூடான இரத்தம் கொண்ட மிருகம். அது நமக்குத் தெரியும். ஆனால் வித்தியாசத்தை உண்டு பண்ணுவது எது? மிருகத்துக்கு உள்ளில் ஆத்துமா கிடையாது, ஆனால் மனிதனுக்கோ உண்டு. மிருகத்துக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியாது."
111. ஒரு பெண் நாய்க்கு அது உடை உடுக்க வேண்டுமென்று தெரியாது. அப்படி தெரிந்திருந்தாலும் அது குட்டை கால் சட்டையை உடுக்காது. அப்படியே ஒரு பெண் பன்றியும். நாமோ விழுந்து போன மானிட வர்க்கம். பாருங்கள்?
112. இப்பொழுது, அங்கிருந்து தான் அது வருகிறது. அங்கிருந்து தான் இந்த இராட்சதர் தோன்றினர். அவர்கள் சர்ப்பத்தின் புத்திரர்.
113. பாருங்கள், அவன் ஏவாளை அந்த நிலையில் கண்டபோது, சாத்தான் சர்ப்பத்துக்குள் புகுந்து அதை செய்யத் தூண்டினான். பாருங்கள், ஆதாம் அதை அதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சொற்களை எவ்விதம் உபயோகிப்பதென்று எனக்குத் - தெரியவில்லை. இங்குள்ள உங்கள் மத்தியில் அதை கூறினால்பாதகமில்லை, ஆனால் யாராகிலும். ஒருவர் அதை குறை கூற வாய்ப்புண்டு. பாருங்கள், குறை கூற அவர்கள் ஏதாகிலும் ஒன்றைக் கண்டுபிடிக்க எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் பாருங்கள், ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியவில்லை. அவன் அந்த இடத்துக்கு வரவில்லை. சாத்தான் அங்கே அவனை மடங்கடித்தான். பாருங்கள்? அவள் கர்ப்பம் தரித்த பிறகு, ஆதாம் அவளை அறிந்தான். அடுத்த கேள்வியில், அல்லது இக்கேள்விகளில் ஒன்றில், அதற்கு நாம் வருவோம். அந்த கேள்வி எங்குள்ளதென்று எனக்குத் தெரியவில்லை; அதை இப்பொழுது இங்கு சற்று முன்பு கண்டேன். ஆனால் அதிலிருந்து தான் இராட்சதர் தோன்றினர்.