114. இல்லை, சகோதரனே; இல்லை, நிச்சயமாக இல்லை. பாருங்கள், "தேவனுக்கு பேரப்பிள்ளைகள் கிடையாது (பாருங்கள்?), குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமே" என்று டேவிட் டூப்ளெஸிஸ் குறிப்பிட்டதை நான் அடிக்கடி எடுத்துக் கூறுவது வழக்கம். பாருங்கள், அவர்களும் தங்கள் தாய் தந்தையர் ஆவியில் பிறந்தது போலவே பிறக்க வேண்டும். பாருங்கள்? அதுதான் ஒருவனை புது மனிதனாக்குகிறது - அவன் மறுபடியும் பிறப்பதனால். அவனுடைய முதல் பிறப்பு மாம்ச மனிதனை பூமிக்கு கொண்டு வருகிறது; அவனுடைய இரண்டாம் பிறப்பு பரலோகத்தின் ஆவிக்குரிய மனிதனை அவனுக்கு கொண்டு வருகிறது. பாருங்கள்? அது அவனை மாற்றுகிறது, அவனுடைய ஆத்துமாவை, அவனுடைய வெளிப்புற மனச்சாட்சியையோ, வெளிப்புறத் தோற்றத்தையோ, அவனுடைய புலன்களையோ அல்ல. அவன் இன்னும் உணருகிறான், முகர்கிறான், ருசிக்கிறான், கேட்கிறான். ஆனால் அவனுடைய உள்ளான பாகங்கள், அவனுடைய விருப்பங்கள், அவனை இயக்குபவை, தேவனுக்காக மாறி விடுகிறது. பாருங்கள்?
115. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இது நடக்கக் கூடிய ஒரே வழி இதுதான்; ரோம் நூற்றுக்கதிபதியின் காலத்தில்; தேவன் சிறைச் சாலையை பூமியதிர்ச்சியினால் அசைத்த காரணத்தால், அந்த ரோமப் போர்ச்சேவகன் கத்தியை உருவி தன்னைக் கொலை செய்து கொள்ள முயன்ற போது, பவுல் - பவுலும் சீலாவும் - அவனிடம், "உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே, நாங்கள் இங்கே தான் இருக்கிறோம், எழுந்திரு" என்று சொன்னது போல. அவன் என்ன செய்ய வேண்டுமென்று அறிய விரும்பினான். அப்பொழுது பவுல், "நீ எழுந்து ஞானஸ்நானம் பெற்று, கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடு. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்றான். பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப். 16:31).
116. இப்பொழுது, எப்படி? உன் வீட்டார் நீ விசுவாசிக்கும் விதமாகவே விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? நீங்கள் ஜெபித்து உங்கள் பிள்ளைகளை தேவனிடத்தில் ஒப்புவித்து, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று விசுவாசித்து தேவனைப் பற்றிக் கொண்டிருங்கள்.
117. என் மகள் ரெபேக்காள் விஷயத்தில் சற்று முன்பு தான் அந்த அனுபவத்தைக் கடந்து வந்தேன். பாருங்கள்? தேவனிடத்தில் ஒப்புவியுங்கள். அவளுக்கு பதினேழு வயதான போது, அவள் வேறொரு பெண்ணுடன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று இசை பயின்று வந்தாள். இந்த பெண்... ஒரு நாள் வீட்டுக்கு வந்த போது, இந்த பெண் பியானோவில் 'ராக் அண்டு ரோல்' இசை வாசித்துக்கொண்டிருந்தாள். அது ஒன்று எனக்கு போதுமானதாயிருந்தது. எனவே நான் ரெபேக்காளிடம் இனிமேல் அங்கு போகக் கூடாது என்று சொல்லிவிட்டேன். பாருங்கள்? அப்பொழுது அவள், "இசை பயில அது ஒரு இடம் தான் உள்ளது" என்றாள் (இளம் பருவத்தினர் எப்படி உணர்ச்சிவசப்படுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும்).
118. நான் சொன்னேன்... ஒவ்வொரு வாலிபப் பிள்ளையும் அதை கடக்க வேண்டியவர்களாயுள்ளனர். ஏறக்குறைய நாம் எல்லோருமே அந்த வயதை கடந்து வந்திருக்கிறோம். நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள், நானும் கடந்து வந்திருக்கிறேன். அந்த வயதில் அவர்களுக்குள்ள சிந்தனைகள் என்னவென்று நாம் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.
119. எனவே, இது நடந்து சில நாட்கள் கழித்து அவள் தாய் அவளை ஏதோ ஒன்றுக்காக அதட்டினாள். அது ரெபேக்காளின் குணமே அல்ல. அவள் கதவை படாரென்று மூடி, பொருட்களை சுவற்றிலிருந்து கீழே தள்ளி பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டாள்.
120. நான் என் பெல்ட்டைக் கழற்றி அவளுக்குப் பின்னால் முற்றத்துக்கு சென்று, அவளை இழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். பாருங்கள்? ஆனால் நான் நினைத்தேன், "ஒரு நிமிடம். பொறு, பதினெட்டு வயது பெண்ணின் சிந்தனைகளை நான் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பாருங்கள்? மேடா அழத் தொடங்கினாள். நான் அவளிடம், "உன்னால் முடிந்த எல்லாவற்றையும் நீ செய்து விட்டாய். நானும் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டேன். அது நம்முடைய கைகளை மீறிப் போய்விட்டால், நாம் அடுத்த நடவடிக்கை தான் எடுக்க வேண்டும்" என்றேன்.
121. அன்றொரு நாள் ஒரு அம்மணி மிகவும் இனிமையாக எழுதியிருந்தார்கள் (அது இங்குள்ள கேள்விகளில் ஒன்று. அவர்கள், "சகோ. பிரன்ஹாமே, நீர் மேசியா அல்லது அல்லவா?" என்றார்கள்.
நான், "இல்லை, அம்மணி" என்றேன். - அவர்கள், "நீர் எங்கள் மேய்ப்பன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆனால் நீர் எப்பொழுதுமே அந்த மகத்தான மேய்ப்பரை சுட்டிக் காட்டுகிறீர்" என்றார்கள்.
நான், "அது உண்மை, அது உண்மை" என்றேன்.
122. நான் மேடாவிடம், "நல்லது, தேனே, பார், நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அவ்விதம் செய்வது உனக்குக் கடினம்; நான் உன் கணவன். ஆனால் சில ஆலோசனையான வார்த்தைகளுக்காக ஜனங்கள் தேசம் எங்கிலுமிருந்து காரோட்டி வருகின்றனர். இப்பொழுது, நீ... அன்றொரு நாள் நான் அவளிடம் பேசினேன், அவளோ என்னிடமிருந்து நடந்து சென்று விட்டாள்" என்றேன்.
123. இப்பொழுது, பெக்கி அவ்விதம் என்னிடம் நடந்து கொண்டதேயில்லை. பாருங்கள்? அவளுடைய தாய் அதைக் குறித்து ஏதோ ஒன்றை சொன்னபோது, அவள், "என் வாழ்நாள் முழுவதும் நான் சுவற்றில் வைக்கப்பட்டுள்ள மலரைப் போல் இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?" என்று சொல்லிவிட்டு கதவை படாரென்று மூடினாள். அவள் படாரென்று கதவை மூடிவிட்டு வெளி நடந்தாள். அது பிசாசு.
124. அவள் இரண்டு வயது வரைக்கும் அழுது கொண்டேயிருப்பது எனக்கு ஞாபகம் வருகிறது. நாங்கள் உண்பதற்கு உணவு விடுதிக்குப் போனால், மேடா உண்ணும்போது, நான் அவளைதெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பேன். நான் உண்ணும் போது, மேடா அவளைத் தெருவில் நடக்க வைத்துக் கொண்டிருப்பாள். அவள் எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பாள். ஒரு நாள் கனடாவில் அவள் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள், எனக்கு ஓய்வெடுக்க முடியவேயில்லை; நான் அங்கு நின்று கொண்டு... ஏதோ ஒன்று என்னிடம், "அது உன் ஊழியத்தை கெடுக்க வந்த பிசாசு" என்றது,
125. நான், "அந்த குழந்தையை என் கையில் கொடு" என்று சொல்லி அவளைக் கையில் வாங்கிக் கொண்டு, "சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன் கரங்களை அவளை விட்டு நீக்கிப் போடு" என்றேன். அவள் உடனே அழுகையை நிறுத்தினாள், அதன் பிறகு அவள் அழுவதேயில்லை. எனக்கிருக்கும் மிகவும் அமைதியான பிள்ளை அவளே. அந்த நேரம் முதற்கொண்டு அது போய் விட்டது. நீங்கள் அதை செய்ய வேண்டும். நீங்கள் அதை செய்வதற்கு முன்பு அதை உங்களுக்குள் பெற்றிருக்க வேண்டும்.
அதன் பிறகு அவள் - அவள் அதை தொடங்கினாள். நான் மேடாவை ஒரு மணிநேரம் தனியே அழைத்துச் சென்றேன். நான், "மேடா, அதை நிறுத்து" என்றேன்.
"நானா? அவள் என் மகள்" என்றாள்.
126. நான், "அவள் என் மகளும் கூட அல்லவா? சரி, அவள் இக்காலை வேளையில் மரணத்தருவாயில் இருந்தால் அவள் போய் சேர வேண்டிய நித்திய ஸ்தலத்துக்காக அவளை நீ தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்திருப்பாய் அல்லவா? அவள் உலகத்தில் செய்ய வேண்டிய பயணத்துக்காக தாம் ஏன் அவளை தேவனிடம் இப்பொழுது ஒப்புவிக்கக் கூடாது?" என்றேன்.
அவள், "நல்லது. அவள் என் மகள்" என்றாள். நான், "அவள் என் மகளும் கூட" என்றேன். நான், "இப்பொழுது நீ உன்னுடைய..." என்றேன்.
அவள், "நான் அவளிடம் ஒன்றும் சொல்லக் கூடாதா என்ன? என்றாள்.
127. நான், "நான் அப்படிச் சொல்லவில்லை. அவளைத் திட்டுவதை நாம் நிறுத்தி விடுவோம். அவளுக்கு புத்திமதி மட்டும் கூறுவோம். அவளுக்கு ஒரு நண்பர் தேவை. நீயும் நானும் தான் அவளுக்கு நண்பர்கள். நாம் அவளுடைய பெற்றோர்" என்றேன்.
128. இந்த பிள்ளைகளுக்கு இன்று தேவை நண்பர்கள். அவர்களுக்கு ஒரு தாயாரும், இரவு முழுவதும் மதுக்கடைகளுக்கு ஓடுவதற்கு பதிலாக வீட்டில் தங்கி அவர்களைப் பேணிக் காக்கும் தந்தையும் இருப்பார்களானால், இளைஞர்களின் குற்றம் (juvenile delinquency) என்று ஒன்று இருக்கவே இருக்காது. பாருங்கள்?
129. அவர்கள் வேதத்தை விட்டு விலகி விட்டனர்; அவர்கள் எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று 'பங்கோ' விளையாட்டுகள் போன்றவைகளை விளையாடுகின்றனர்... பாருங்கள்? நீங்கள் சாத்தானின் இருப்பிடமாகிய ஹாலிவுட்டைப் போல் உங்களை மெரு கேற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் ஹாலிவுட்டை சபைக்குள் கொண்டு வரக் கூடாது. அதாவது நீங்கள் சபையை ஹாலிவுட் உள்ள நிலைக்குக் கொண்டு வரக்கூடாது, ஹாலிவுட்டை உங்கள் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பாருங்கள்? அவர்களுடைய நிலைக்கு நீங்கள் செல்லக் கூடாது, அவர்கள் உங்கள் நிலைக்கு வரட்டும். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒன்று நம்மிடம் உள்ளது.
130. எனவே நாங்கள் அங்கேயே முழங்கால்படியிட்டு, அவளை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தோம், நான், "அவளுக்கு இன்னும் சில நாட்களில் பதினெட்டு வயதாகிறது, அந்த வயதுள்ள ஒரு பெண் ஆண் நண்பர்களை (boy friends) குறித்து சிந்திக்கத் தலைபடுவாள். நாமோ அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம். அவள் இப்பொழுது மணம் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. அவளை இங்குள்ள அலுவலகத்தில் சேர்த்து, அவள் வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் ஆவியில் நிறைந்திருப்பதைக் காண விரும்புகிறேன் - அவ்விதமாக வாழ" என்றேன். - அவள்... நல்லது, நாங்கள் எல்லோரும் அதையே விரும்பினோம். மேடா, "அவள் அதைச் செய்ய மாட்டாள். அவள் கேட்க மாட்டாள்" என்றாள்.
131. நான், "ஒரு நிமிடம் பொறு! நம்மால் முடிந்த வரை அவளை நாம் வளர்த்து வந்தோம். இப்பொழுது அவளைத் தேவனுடைய கரங்களில் வைப்போம் - அவளை அவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவள் ஏதாவதொன்றைச் செய்தால் நீ அவளிடம், 'பெக்கி, அன்பே, நீ அதைச் செய்வதை உன் அம்மா விரும்பவில்லை, இருந்தாலும் நான் உனக்கு சிநேகிதி; நான் உன் கூடவே இருப்பேன்' என்று சொல். பார்? நீ அவளை நேசிக்கிறாய் என்பதை அவள்அறியட்டும். அவள் வேறு யாரையாகிலும் நேசிக்கத் தலைப்பட்டால், அது ஒருவேளை தவறான ஸ்திரீயாக இருக்கக் கூடும். பார்? அவளை சிநேகிக்கும் ஸ்திரீ நீயாக இருக்கட்டும். தேனே, இது கொடூரமாக, தொனிக்கலாம், ஆனால் ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்து தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்கின்றனர். நான் உனக்கு மிகவும் பழகினவனாகி விட்டேன். நாம் கணவனும் மனைவியுமாயிருப்பதால், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பழகினவர்களாகி விட்டோம். ஆகவே நாம் ஆலோசனை கேட்பதில்லை. இது கர்த்தருடைய நாமத்தில் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்" என்றேன்.
அவள், "சரி" என்றாள்.
நாங்கள் முழங்கால்படியிட்டு அவளைத் தேவனிடம் ஒப்புக் கொடுத்தோம். அவளை நாங்கள் இனிமேல் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று கூறினோம்.
அன்று பிற்பகல் அவள் உள்ளே வந்தாள். அவள், "நல்லது, அங்கே நான் போகக் கூடாது என்று நீங்கள் இப்பொழுதும் சொல்லுகிறீர்களா?" என்று கேட்டாள்.
132. அதற்கு மேடா, "இல்லை, நான் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நீ அதை செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த பெண்ணுடன் நீ "பூகி ஓகி" இசை வாசித்துக் கொண்டிருந்ததை உன் அப்பா கேட்ட போது, அது அவரை கொன்று விட்டது என்று உனக்குத் தெரியும். அதை நீ செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை, எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஆனால், பெக்கி, அதை நாங்கள் கர்த்தரிடம் சமர்ப்பித்து விட்டோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்பதை நீ அறிய வேண்டும். நீ என்ன செய்த போதிலும், நாங்கள் உன்னை அப்பொழுதும் நேசிப்போம்" என்றாள்.
பெக்கி, "நான் எப்படியும் போகத்தான் போகிறேன்" என்றாள்.
மேடா, "சரி, அன்பே" என்றாள். பெக்கி போகப் புறப்பட்டாள். மேடா, "சரி, நீ திரும்பி வரும்போது, இரவு உணவை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்" என்றாள். அவள் போகவேயில்லை. இல்லை, அன்று முதல் அவள் போகவேயில்லை. பாருங்கள்?
133. அதற்கு பிறகு சற்று கழிந்து அவள் ஜார்ஜை சந்தித்தாள்; ஜார்ஜ் ஒரு கிறிஸ்தவன். அத்துடன் அது முடிவு பெற்றது.
134. அன்றொரு நாள் பெக்கி அதைக் குறித்து திருமதி உட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள், “ஓ, எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் என்னைக் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள். மிகுந்த கோபம் வந்து விட்டது" என்றாள். அது எங்களுக்கு மிகுந்த கோபமாக காணப்பட்டது. அதைக் காட்டிலும் நாங்கள் அதிக கோபமடைய விரும்பவில்லை. பாருங்கள்? அதை அப்படியே விட்டு விட்டோம். சரி.