சகோ. பிரன்ஹாமே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... (ஓ, ஓ! இந்த கேள்வியை நான் படித்த ஞாபகம் உள்ளது. நான்... அதற்கு பிறகு பதிலளிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன், ஆனால் அதை இப்பொழுதே படித்து விடுவது நல்லது. அது ஏதோ ஒரு ஸ்திரீயின் கையெழுத்து. அவள் கென்டக்கியிலிருந்து வந்தவளாக இருக்க வேண்டும். ஏனெனில் அவளிடம் இங்கு காஸ்மாஸ் போர்ட்லாண்டு சிமெண்டு டிக்கெட் உள்ளது).
135. நீங்கள் யாராயிருந்தாலும், சகோதரியானாலும், சகோதரனானாலும், நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கூறுவதை நான் நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன். அது அவமானம்! அதைக் குறித்து நான் என்ன செய்ய முடியுமென்று சொல்லுங்கள்! எனக்குத் தெரிந்தவரையில் அதைக் குறித்து நான் மிகவும் கடினமாக போதிக்கிறேன். எனவே அது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பாயிருக்கும், ஏனெனில் வார்த்தை புறப்பட்டு சென்றுவிட்டது. ஆம், நான் நிச்சயமாக சருமத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த உடைகளுக்கு எதிராயிருக்கிறேன்... நான் என் மகள்கள் பெக்கி, சாராளிடம் கூட கூச்சலிடுவதுண்டு. அவர்கள் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர்களும் கூட அவர்களுடைய உடைகளை ... மேடா ஒவ்வொரு நாளும் அதைக் குறித்து பெக்கியை தனியாக அழைத்துச் செல்கிறாள். பாருங்கள்? மேலே ஏறியிருக்கும் உடுப்புகள்... சிறு பிள்ளைகளிடம் அதை நீங்கள்எதிர்பார்க்க முடியாது, அவர்களை நீங்கள் திருத்த வேண்டும்; ஆனால் ஒரு ஸ்திரீ அவ்விதம் செய்யும்போது, அங்கு ஏதோ தவறுள்ளது. பாருங்கள்?
136. உங்கள் மனது இப்பொழுது நோக்க வேண்டாம். நான் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருதயத்திலிருந்து என்னைக் கேட்கிறீர்கள்; நான் என் இருதயத்திலிருந்து உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களுக்கு இதற்கு ஒரு தீர்வுகாண முடியுமென்றால், தயவு கூர்ந்து என்னிடம் சொல்லுங்கள், நான் நிச்சயம் செய்வேன், அதைக் குறித்து ஏதாகிலும் என்னால் செய்ய முடியுமானால்.
137. அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், "நல்லது, சகோ. பிரன்ஹாமே, ஆதாமும் ஏவாளும் என்ன புசித்தார்கள் என்று உங்களுக்குச் சொலலுகிறேன். அவர்கள் ஆப்பிள் பழத்தைத்தான் புசித்தார்கள்" என்றார். அவர்கள் இப்பொழுது அதை மாற்றி விட்டதாகக்காண்கிறேன். அவர்கள் என்ன புசித்தார்கள் என்று சொல்லுகிறார்கள்? அதற்கு ஏதோ ஒரு பெயருண்டு (சபையோரில் ஒருவர் 'ஏப்ரிகாட் என்கிறார் - ஆசி). ஏப்ரிகாட், ஆம். அவர்கள் ஏப்ரிகாட் பழத்தைப் புசித்ததாக கூறுகின்றனர். ஏப்ரிகாட் பழம் அவர்கள் நிர்வாணமாயிருப்பதை உணர வைக்குமானால், அவர்களுக்கு ஏப்ரிகாட் பழத்தைக் கொடுக்க நேரம் வந்து விட்டது. பாருங்கள்?