138. நல்லது. இப்பொழுது, அருமை சகோதரியே... அவள் கையொப்பமிடவில்லை, ஒருக்கால் உன் கேள்விக்கான பதிலை நீகேட்டுக் கொண்டிருக்கலாம்; இல்லையென்றால் நீ அதை ஒலி நாடாவில் கேட்பாய். உன் கணவருடன் போ, ஆனால் அவர்கள் செய்வதில் நீ பங்கு கொள்ளாதே. பார், உன் கணவரை நீ நேசிக்க வேண்டியவளாயிருக்கிறாய், அன்பு தான் அதைச் செய்கிறது. நீ உண்மையில் உப்புத்தன்மை கொண்டவளாயிரு; அவருக்குள் ஏதாகிலும் இருக்குமானால், அவர் தாகமடைவார்.
139. அவர்களுடைய ஸ்தாபனத்தைச் சேராதே. “அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகியிருக்கலாமா" என்று நீ கேட்டிருக்கிறாய், அதை சேராதே; அங்கு போ. உனக்கு முழு ரொட்டி கிடைக்க வில்லையென்றால், பாதி ரொட்டியைப் பெற்றுக் கொள்; பாதி ரொட்டி கிடைக்கவில்லையென்றால், ஒரு 'ஸ்லைஸ்' ரொட்டி பெற்றுக் கொள். பார், பார்? அவ்விதம் செய்வதன் மூலமாகவே உன் கணவரை நீ வெல்ல முடியும். கர்வமாக இராதே. அப்பொழுது உன்னைப் போலவே அவருக்கும் கர்வம் உள்ளதென்று அவர் காண்பிப்பார். பார்? ஆனால் அவருக்கு இல்லாதது ஒன்று உனக்கு உள்ளதாக! நீ காண்பிக்க முடியுமானால், உன்னைப் போல் இருப்பதற்காக அது அவரைத் தாகமடையச் செய்யும். புருஷன் பரிசுத்தமாக்கப்பட்ட தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான் (1 கொரி. 7:14).
140. இது ஒரு புத்திமதி மட்டுமே. இதன் பேரில் என்னால் நீண்ட நேரம் பேச முடியும், ஆனால் எத்தனை கேள்விகளுக்கு நம்மால் பதிலளிக்க முடியுமோ, அத்தனைக்கும் பதிலளிக்க விரும்புகிறோம். எனக்கு இன்னும் இருபத்திரண்டு நிமிடங்கள் மட்டுமே உள்ளதாகக் காண்கிறேன். சரி.