141. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே அல்லது சகோதரியே, நீங்கள் யாராயிருந்தாலும். அவர்களை நான் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விடுவேன். நான்... பாருங்கள், ஏனெனில் "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்" பாருங்கள்? ஜனங்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம்
142. அந்த தங்கும் விடுதி (motel) ஆட்களை நான் சென்று சந்தித்த போது, அது என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்கும் படி செய்தது. நான் திரு. பெக்கரிடம் சென்றிருந்தேன். அவர், "பில்லி, உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் உணவளிக்கிறேன்" என்றார் - 'ப்ளூ போர்' (Blue Boar) என்னும் அந்த உணவு விடுதி ஒவ்வொரு ஞாயிறன்றும் ஏறக்குறைய முன்னூறு பேர்களுக்கு உணவு அளிக்கிறது. பாருங்கள்? நான் இங்கு சென்றிருந்தேன், இங்குள்ள அந்த ஆள், 'ரான்ச் ஹவுஸ்ஸில் உள்ள நற்பண்பு கொண்ட அவர், மிகவும் அருமையானவர்.
நான் அவரைச் சந்தித்தேன்; நான், "நல்லது. அது உண்மையில் மிகவும் நல்லது. நீங்கள் அந்த ஆபாசமான காரியங்களையும், மற்ற காரியங்களையும் விலக்கியிருப்பதைக் குறித்து உங்களைப் பாராட்டுகிறேன்" என்றேன்.
அவர், "ஆம், ஐயா, சகோ. பிரன்ஹாமே" என்றார்.
நான், "அவருக்கு என்னை எப்படித் தெரியும்?" என்று நினைத்தேன். பாருங்கள்? நான் அவரிடம், "என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன்.
அவர், "உங்களை எனக்குத் தெரியும். உங்கள் சபையோர் அனைவருக்கும் நான் ஒவ்வொரு ஞாயிறன்றும் உணவு தருகிறேன். உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்: அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் அருமையானவர்கள்" என்றார்.
143. பாருங்கள், அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. நீங்கள் என் பிள்ளைகள். பாருங்கள்? என் பிள்ளைகள் மிகவும்நல்லவர்களாக உள்ளனர் என்றும், அவர்கள் மிகவும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர் என்றும் நான் கேட்கும் போது, அது அப்பாவுக்கு மிகுந்த நல்லுணர்வைத் தருகிறது. பாருங்கள்? எனவே நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
144. இப்பொழுது, இப்பொழுது, அம்மா... என் சகோதரியே, உன் கணவர் உன்னை மெதோடிஸ்டு சபைக்கு அவருடன் கூட செல்ல அழைப்பாரானால், நீ போ. உனக்கு ஒருக்கால் முழு ரொட்டியும் கிடைக்காது, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறினால், அதை விசுவாசி, ஏனெனில் நாமும் கூட அதை விசுவாசிக்கிறோம். அவர்கள் வழி விலகி வேறு காரியங்களுக்குச் செல்வார்களானால், அவர்கள் போகட்டும். ஆனால் நீ அவ்வளவு ரொட்டியை மாத்திரம் சாப்பிடு. பார்? அதன் மூலம் உன் வாழ்வின் இனிமையையும் மற்றவர்கள் பேரில் நீ கொண்டுள்ள அக்கறையையும் காண்பிக்கிறாய். இந்த நற்பண்புகள் உனக்கு இல்லாமல் போனால், அருமை சகோதரியே, அது உனக்குக் கிடைக்கும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிரு. நீ ஒன்றையும் செயற்கையாக பாவனை செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில் நீ அவ்விதம் செய்யும் போது, அது உண்மையான ஒன்றாக இருக்காது. உன் கணவரால் அதை கண்டு பிடித்து விட முடியும். நீ உண்மையில் ஜெபித்து உன் வாழ்க்கை இரட்சகரின் உப்பினால் நிறைந்திருக்கும் நிலையை அடையும் போது, அது தொடர்பை உண்டாக்கும். "நான் உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்" (யோவான் 12:32), நான் போவேன்; ஆனால் மிகவும் ஜாக்கிரதையாயிரு. அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே! தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதே; அவர்களுடைய சபையை சேர்ந்து விடாதே, ஆனால் அங்கு போ!