145. இப்பொழுது. இது மிகவும் நல்ல கேள்வி. இப்பொழுது முதலாவதாக, உபத்திரவ காலத்தின் போது புறஜாதியாரின் நாட்கள் முடிவடைந்திருக்கும் என்று நான் கூறியதன் பேரில் தான் குழப்பம் நேர்ந்துள்ளது. இப்பொழுது, நான் காணமுடியாதது என்னவெனில், வேதத்திலுள்ள புறஜாதியினர்... புறஜாதி மணவாட்டி , மணவாட்டி, புறஜாதி சபை அல்ல, புறஜாதி சபை உபத்திரவ காலத்தின் வழியாக செல்லும் (பாருங்கள்?), ஆனால் அவர்களுடைய... பாருங்கள், மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம்; அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதைத் தவிர, வேறு எதன் வழியாகவும் செல்வதில்லை. அவர்கள் மறுரூபமடைந்து, இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பாருங்கள்? இப்பொழுது. இதை நான் இங்குள்ள மற்றொரு கேள்வியில் விளக்கி, லூத்தரிலிருந்து படிப்படியாகக் கொண்டு வருகிறேன், அப்பொழுது அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது சரீரம் முதிர்வடைவது. பாருங்கள்?
146. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, விடப்பட்ட யூதர்களுக்கு தான், எலியா, மோசே ஆகிய இரண்டு தீர்க்கதரிசிகளும் பிரசங்கிக்கின்றனர்.
147. இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, இது என் சொந்த கருத்து, பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதாக நான் உணருகின்ற என் சொந்த முறை.
148. இப்பொழுது, அடுத்தபடியாக நடக்கவிருப்பது. தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டி, காலங்கள் தோறும் தெரிந்து கொள்ளப்பட்ட புறஜாதி மணவாட்டியுடன் கூட ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுதலே - ஆகாயத்தில் கிறிஸ்துவின் சமுகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல். மரித்தோர் உயிர்த்தெழுகின்றனர்; உயிரோடிருப்பவர் மறுரூபமடைகின்றனர்; அவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கின்றனர். பிறகு, ஏனெனில்...
149. மகிமையில் கலியாண விருந்துக்குப் பிறகு, இயேசு - அவர்கள் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, இயேசு பூமிக்குத் திரும்பி வந்து தமது ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார், யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினது இதற்கு முன்னடையாளமாயுள்ளது. அவனுடைய மனைவி - யோசேப்பைத் தவிர வேறு எந்த புறஜாதியும் அங்கிருக்கவில்லை, யோசேப்பு தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தின போது. இதை எல்லோரும் புரிந்து கொண்டீர்களா?
150. அவன் அனுப்பி விட்டான். அவனுடைய மனைவியும் கூட அப்பொழுது அரண்மனையில் இருந்தாள், அந்த நேரத்தில் மணவாட்டி மகிமையில் அரண்மனையில் இருப்பாள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாய் உள்ளது. கலியாண வைபவமாகிய 3 ½ (மூன்றரை) ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு தம்மை யூதர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் - யாக்கோபின் இக்கட்டுக்காலம், அந்த 3 ½ (மூன்றரை) ஆண்டுகள், தானியேலின் எழுபதாம் வாரத்தின் முடிவு. மேசியா அந்த வாரத்தின் நடுவில் சங்கரிக்கப்பட வேண்டும்... அவர் 3 ½ (மூன்றரை) ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்து அதன் பிறகு சங்கரிக்கப்பட்டார். பிறகு மோசேக்கும் எலியாவுக்கும் 3 ½ (மூன்றரை) ஆண்டுகள் விடப்பட்டுள்ளன. தானியேல் கூறின வண்ணமாக, ஜனங்களின் மேல் குறிக்கப்பட்ட அந்த எழுபது நாட்கள் முடிவடைந்த பிறகு, இயேசு அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும். அவர் யூதர்களுக்கு வரவேண்டிய அதிபதி. பாருங்கள்?
151. பிறகு, அந்த நேரத்தில்... பாருங்கள், புறஜாதி மணவாட்டி பரலோகத்தில் இருக்கிறாள், நித்திரையடைந்துள்ள கன்னிகை, புறஜாதி கன்னிகை: அந்த நேரத்தில் இரட்சிக்கப் படுவதில்லை; அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டாள், ஆனால் மணவாட்டியில் இராதபடிக்கு அவள் புறக்கணிக்கப்பட்டாள்.அவள் சுத்திகரிப்புக்காக உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்கிறாள், ஏனெனில் அவள் தனக்கு சுத்திகரிப்பு அளிக்கும் வார்த்தையாகிய கிறிஸ்துவை புறக்கணித்து விட்டாள். அவளுடைய செய்கைகளுக்காக அவள் பாடுபட வேண்டும், ஆனால் வார்த்தையாகி விட்ட மணவாட்டியோ; கிறிஸ்து முழுவதுமாக அவளுக்காக பாவநிவிர்த்தி செய்து விட்டார், ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். சரீரம் கிழிக்கப்பட்டது; அந்த சரீரம் கிழிக்கப்பட்ட போது, மணவாட்டி அந்த சரீரத்தில் இருந்தாள், ஏனெனில் அது எல்லாமே வார்த்தையாயுள்ளது! ஆமென்! உங்களுக்கு விளங்குகிறதா?
152: இயேசு அந்த சரீரத்தில் பாடுபட்டபோது, அவர் பாடு பட்டார். ஏனெனில் மனுஷனும் மனுஷியும் ஒரே நபர். ஏவாள் ஆதாமிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாள், சபையும்.... என்ன நடந்தது? தேவன் ஆதாமின் விலாவைத் திறந்து, அவனுக்கு உதவியாயிருக்க மணவாட்டியை வெளியே எடுத்தார். அவ்வாறே தேவன் கல்வாரியில் இயேசுவின் விலாவைத் திறந்து மணவாட்டியை வெளியே எடுத்தார். பாருங்கள்? இயேசு கல்வாரியில் மரித்த போது. சரீரம் மரிக்கும் வரைக்கும், மணவாட்டி அந்த சரீரத்திலிருந்து வெளியே எடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஏற்கனவே மரித்து விட்டார், அவருடைய கால்களை அவர்கள் முறிக்கவிருந்தனர். தீர்க்கதரிசி "அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை" என்று சொன்னான் (சங். 34:20). எனவே அவருடைய கால்களை முறிக்க அவர்கள் ஒரு சுத்தியலைக் கையிலெடுத்தனர். அப்பொழுது ஒரு மனிதன் ஒரு ஈட்டியுடன் சென்று அவருடைய இருதயத்தில் குத்தினான்; அப்பொழுது தண்ணீரும் இரத்தமும் வெளி வந்தது. அவர் ஏற்கனவே மரித்திருந்தார். அவருடைய சரீர மரணத்தின் மூலமாய் அவள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டாள், எனவே மணவாட்டிக்கு பாடனுபவிக்கும் உபத்திரவ காலம் ஒருக்காலும் இருப்பதில்லை. பாருங்கள்? அவள் உள்ளே சென்று விடுகிறாள். ஆனால் அவர் பேரில் விசுவாசம் கொண்டு ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள புறஜாதி சபை...
153. இந்த ஏழை நபர், "என் கணவனும் மகனும் இன்னும் உலகத்தின் காரியங்களில் அன்பு கொண்டுள்ளனர்" என்று கூறினது போல... பாருங்கள், அவர்கள் அந்த மீட்பை ஏற்றுக் கொள்ளவில்லை.நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் போது, அது உங்களைத் தானாகவே சுத்திகரித்து விடுகிறது. "தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்" (1 யோவான் 3:9). அவனுக்கு உலகத்தின் காரியங்களின் பேரில் வாஞ்சையே இல்லை.
154. "ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பு இல்லை" என்று இயேசு கூறியுள்ளார் (1 யோவான் 2:15). அப்படிப்பட்டவனுக்கு மணவாளனின் மேல் அன்பில்லை. பாருங்கள்? எனவே அவள் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயுள்ளது... அவள் அந்த நேரத்தில் இரட்சிக்கப்படுவதில்லை; அவள் நித்திய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறாள்; ஆனால் சுத்திகரிப்புக்கென்று அவள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். நான் கூறுவது விளங்குகிறதா? இப்பொழுது. இப்பொழுது, அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று எண்ணுகிறேன். வேறெதாவது இங்குள்ளதா என்று பார்ப்போம்.
155. "தயவுகூர்ந்து விளக்குங்கள், ஏனெனில் ஒரு சிறு எண்ணிக்கையே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லும் என்று நீர் கூறியிருக்கிறீர்". அதாவது இவர்கள் பூமியில் உயிரோடிருந்து மறுரூபமடையப் போகின்றவர்கள். "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்" என்று இயேசு கூறியுள்ளார் (மத். 7:14).
156. "இப்பொழுது கர்த்தரை விசுவாசித்து, நீர் பிரசங்கிக்கும் விதமாக விசுவாசியாதவர்களைக் குறித்தென்ன?" அவர்கள் இதை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் பிரசங்கிக்கும் விதமாக அவர்கள் விசுவாசிக்க வேண்டியதில்லை. பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியதில்லை... கடைசிக் காலச் செய்தியை விசுவாசியாதவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படுவார்களா?" ஆம், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பார்களானால். பாருங்கள்? அவர்கள் இணங்காமல், "அவர் வார்த்தை என்று நான் விசுவாசிக்க மாட்டேன். இது சரியென்று நான் விசுவாசிக்க மாட்டேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் பேரில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்பார்களானால், அவர்கள் எதை நோக்கிச்செல்கின்றனர் என்பதை அது காண்பிக்கிறது - உபத்திரவ காலத்தை நோக்கி. ஆனால் வார்த்தையை அதன் முழுமையில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், அதை நான் பிரசங்கிப்பதனால் அல்ல, வேதம் அவ்விதம் உரைக்கிறது. அதை ஏற்றுக் கொள்கிறவர்கள் விடுதலையடைகின்றனர், ஏனெனில் வார்த்தை ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டு விட்டது.
157. ஏற்கனவே ஒன்றுக்கு தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டிருந்தால், நீதியுள்ள நியாயாதிபதி அதற்காக ஒரு மனிதனை இரு முறை நியாயந்தீர்க்க முடியுமா? நான் அடகு கடையில் இருந்து, நீ அங்கு வந்து, "இவனை நான் மீட்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு, என் மீட்புக்கான கிரயத்தை நீ செலுத்தி விடுவாயானால் (அதுவே நான் அடகு கடையிலிருந்ததனால் உண்டான தண்டனை), அடகு கடையின் சொந்தக்காரன் அதை எப்படி மறுபடியும் கேட்க முடியும்? நான் மறுபடியும் என்னை விற்றுப் போட்டாலொழிய. பார்த்தீர்களா? வார்த்தையின் பரிபூரணத்தை நான் புறக்கணிக்கும் போது, நான் மீண்டும் அடகு கடைக்குச் சென்று விடுகிறேன். பாருங்கள், பாருங்கள். அதன் பிறகு, என்னால் கூடுமானால், போராடிக் கொண்டு வெளியே வருவேன். ஆனால் அவர் என்னை மீட்டுக் கொண்டார். சரி, நான் நம்புகிறேன், அது... இன்னும் எத்தனையோ கேள்விகள் இங்குள்ளன, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன் (ஒலிநாடாவின் முதல் பக்கம் முடிகிறது. இரண்டாம் பக்கத்தில் கேள்வியின் ஒரு பாகம் இல்லை - ஆசி).