158. இப்பொழுது, என் - என் அருமை நண்பனே. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் - நீங்கள் - நீங்கள் ஒரு நல்ல வாக்கியத்தை சொல்லியிருக்கிறீர்கள். ஆம், ஐயா! ஆம், ஐயா! இப்பொழுது, அது அப்படி இருக்கும். நீங்கள் "சகோ. பிரான் ஹாம்...' என்று கூறியிருக்கிறீர்கள். வேறு விதமாகக் கூறினால், இது தான் நான்... நான் நினைக்கவில்லை அது... என்னால் கூடுமென்று... நான் நம்புவது, நான் .
...நீர் கூறினதை மெருகேற்றவில்லை, ஆனால் இதை ஜனங்களுக்கு சிறிது அதிகமாக தெளிவுபடுத்த முடியுமென்று நம்புகிறேன். பாருங்கள்? நீங்கள் இவ்வாறு விசுவாசிக்கும் காரணம், அவர் என்னிடம் கூறி உரைக்கப்பட்ட வார்த்தைகளினால் நிகழ்ந்தவைகளைக் கண்டதனாலே. நீங்கள் எல்லாரும், அணில்கள் சிருஷ்டிக்கப்பட்டதையும், மற்ற காரியங்கள் செய்யப்பட்டதையும் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அது தேவன் தமது இராஜ்யாதிபத்தியத்தினால் அளித்த ஒன்று என்பதை கவனித்தீர்களா? நான் அவரிடம், "கர்த்தாவே, இதை நான் செய்யட்டும், வார்த்தையை இவ்விதம் உரைத்து இவைகளைச் செய்யட்டும்” என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவரை நான் கேட்கவேயில்லை. அவர் தமது தெய்வீக சித்தத்தின்படி என்னிடம் வந்து, "நீ போய் இதை செய்" என்றார். பாருங்கள்? நான் அதைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை. மோசே எகிப்துக்கு போக வேண்டுமென்று கேட்கவில்லை, தேவன் தான் அவனை எகிப்துக்கு அனுப்பினார். பாருங்கள்?
158. பரிசுத்த ஆவியானவர் என்னிடம் ஒரு தரிசனத்தில் வந்து, "இந்த குறிப்பிட்ட நபரிடம் சென்று, அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், அவர்களால் முடியாது (அவர்கள் புகைபிடிக்கின்றனர், குடிக்கின்றனர், பொய் சொல்கின்றனர், திருடுகின்றனர், அல்லது விபச்சாரம் செய்கின்றனர், அது எதுவாயிருந்தாலும்; அல்லது அவர்களுக்கு இச்சையின் ஆவி உள்ளதென்று வைத்துக் கொள்வோம்). நீ அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று, 'ஆவியே, அங்கிருந்து வெளியே வா. சிறைப்பட்ட இவரை விடுதலையாக்குகிறேன் என்று சொல்" என்று சொல்வாரானால்! அது நடக்குமா? நிச்சயமாக. ஆம், அது நிச்சயமாக நடக்கும். ஆனால், நானே என் சொந்த ஊகத்தினால்... 'ஊகித்தல்' (presuming) என்பது அதிகாரம் பெறாமல் செய்யத் தைரியப்படுவது என்று பொருள்படும். பாருங்கள்? இந்த நபருக்கு உதவி செய்ய நான் அங்கு செல்கிறேன்; அது சரியாயிருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். பாருங்கள்? ஆனால் எனக்குத் தெரியாது, அவர்கள் மேல் நான் கர்த்தருடைய நாமத்தை சொல்லி அழைக்க முடியாது; அவர்களுக்காக நான் ஜெபிக்கலாம், எனக்கு விருப்பமான எதையும் செய்யலாம்.
160. இன்று காலையில் விருப்பமானதைச் செய்ய எனக்கு அனுமதி இருக்குமானால்... சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற இந்த ஸ்திரீயுடன் சற்று முன்பு தான் எனக்கு பேட்டி ஒன்று இருந்தது. இந்த கூட்டத்துக்கு இன்று வருவதற்காக, அவளை சிக்காகோவிலுள்ள அவளுடைய வீட்டிலிருந்து கொண்டு வருவதற்காக, தீயணைக்கும் பிரிவினரின் உதவியை அவர்கள் நாட வேண்டியதாயிருந்தது; அப்படியிருக்க தெருவின் மறுபக்கத்திலுள்ளவர்கள் கூட்டங்களுக்கு வருவதில்லை. பாருங்கள்?
161. நான் என்ன செய்வேன்? எனக்கு அதிகாரமிருக்குமானால்... அது... அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதைச் செய்வதற்கான கட்டளைக்காக நான் காத்திருக்க வேண்டும், பாருங்கள்? அதைச் செய்ய நான் தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறேன்; ஆனால் இப்பொழுது, அவர் கட்டளை கொடுக்கும் போது, அவள் குணமடைந்து வீடு செல்வாள். பாருங்கள்? அது உண்மையென்று எனக்குத் தெரியும். அதன் பேரில் இன்று காலை நான் மரிக்கவும் சித்தமுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை.
162. ஆனால் முதலாவதாக, பாருங்கள், அது எல்லாமே... இருவருமே செய்ய முடியாது, இயேசுவும் கூட, "குமாரன் தாமாய் எதையும் செய்ய முடியாது. பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்று கூறியுள்ளார். அது நமக்குத் தெரியும், பரி. யோவான் 5:19, சரி, "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அவையேயன்றி வேறென்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்". சரி.