163. இந்த கேள்வி எனக்குக் கிடைத்த போது என் புத்தகத்தில் நான் தேடிப் பார்த்து ஒரு கேள்விக்குறியை இட்டேன், இந்த கேதுரு மரங்கள் எங்கிருக்கும் என்று நான் கவனிக்க வேண்டிய நேரம் ஓன்றிருந்தது... நீங்கள் அங்குள்ள மலையிலிருந்து தொடங்கி, மறுபக்கத்தில், காரிடனுக்குப் போகும் வழியில், நீங்கள் நியூ ஆல்பனியிலுள்ள மலையின் உச்சியை விட்டு வந்த பிறகு. எனக்கு நேரிட வேண்டிய ஒரு பயங்கர விபத்துக்காக நான் அந்த கேதுரு மரங்களை கவனிக்க வேண்டும் என்பதாய் இருந்தது. ஆனால்தேவனுடைய கிருபையினால் நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். அப்பொழுது விஸ்கியை ஒரு குப்பியிலிருந்து குடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள். அந்த குப்பி அவள் வாயிலிருந்தவாறே அவளுடைய தொண்டை அங்கேயே அறுபட்டது - பதினாறு வயது பெண். அந்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். பாருங்கள்? நீங்கள் குறிப்பிட்டது ஒருக்கால் அதுவாக இருக்கக் கூடும். அதை நான் படித்தேன்.
164. மேலும், சகோ. பீன்ப்ளாஸ்ஸம் என்பவரின் இடத்தில் எனக்கு அந்த கூட்டம் இருந்தபோது... அது ஒருக்கால் அதுவாக இருக்கலாம், அல்லது ஜார்ஜி கார்டர் என்பவரின் இடத்தில் நடந்த கூட்டமாயிருக்கலாம். பாருங்கள்? அங்கு வேறொன்று நடந்தது. அங்கு நான்கைந்து பேர் இருந்தனர். நிறைவேறாத ஒன்றையும் நான் கண்டதில்லை. இதை எழுதின நபர் எனக்கு மறுபடியும் எழுதி, அந்த நேரத்தில் நான் என்ன கூறினேன் என்று தெரிவிப்பாரானால், அதை நான் படித்து அறிந்து கொள்வேன். பாருங்கள்? அந்த தரிசனத்தைக் குறித்து நான் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரிவிப்பீர்களானால்... ஏனெனில் நான் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பவைகள் நான் தரிசனத்தில் கண்டவைகளையே. இங்கே அது இவ்விதம் நடந்தது. அதைத் தவிர எனக்குத் தெரியாத வேறொன்றையும் நான் எழுதி வைக்கவில்லை
165. பிறகு வேறொன்றும் நடந்தது; அது அந்த நேரத்தில் எனக்கு விரோதமாக மிகவும் குற்றம் கண்டுபிடித்த ஓமர் ப்ரைஸ் என்பவரின் மனமாற்றமாகும். உங்களுக்குத் தெரியும், அவர் இந்த கூடாரத்துக்கு வந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். ஓ, அதன் பேரில் அவர் என்னை கடுமையாக எதிர்த்தார்; இரவு நேரத்தில் அவருடன் நான் தங்கினேன். அவருடன் தங்கியிருந்து அவரை நேசித்துக் கொண்டேயிருந்தேன். முடிவில் அவர் வந்தார், ஏனெனில் அவர் வருவாரென்று கர்த்தர் என்னிடம் உரைத்திருந்தார். எனவே நான் அதிலே நிலை கொண்டிருந்தேன். பாருங்கள்?
166. எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த பிரசங்கியாரின் விஷயத்திலும் அதே தான். ஒரு முறை நான் க்ளார்க்வில்லில் அவர் போதகராயிருந்த அந்த மெதோடிஸ்டு சபையில் பேசுவதற்காக சென்றிருந்தேன். அவர் முழுக்க முழுக்க மெதோடிஸ்டாக இருந்தார் - நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரியும். நான் இங்கு திரும்பி வந்தேன். "என்றாகிலும் ஒரு நாள் அவருக்கு நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்" என்றேன். நான் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத்தேன்; அது சகோ. நெவில்.