23. இப்பொழுது, இந்த கேள்விகளில் ஒன்று கடைசியிலிருந்து... ஒருக்கால் ஜனங்களிடத்திலிருந்து... இப்பொழுது, என்னால் இயன்றவரை, தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு, எனக்குத் தெரிந்தவரை அவைகளுக்கு பதிலளிப்பேன். இப்பொழுது அவர் தாமே ஞானத்தை அளிப்பாரானால், ஏனெனில் நான்- -நான் இங்கே மேடையிலிருந்து அவைகளை எடுத்தேன் என்பதை தேவன் அறிவார்.
இப்பொழுது, கத்தோலிக்க சபையுடன் பிராட்டெஸ்டென்ட் சபை கொண்டிருக்கின்ற தொடர்பு எந்த விதமானது என்று கூற விழைகிறீர்?
24. இப்பொழுது, தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு முதலாவதிற்கு நான் பதிலளிப்பேன். நான் கூறினேன், கத்தோலிக்க சபை... கடந்த இரவு நாம் பார்த்தோம், மிருகத்தின் முத்திரையானது ரோமிலிருந்து வரவேண்டுமென்று நாம் பார்த்தோம். அது சரியா? அது ரோமாபுரியைத் தவிர வேறு எந்த தேசத்திலிருந்தும் வராது. அங்கேதான் அது சிங்காசன மிட்டிருக்கிறது, அங்கே தான் அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க ஜனங்களுக்கெதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ என்னிடம் ஒன்றுமில்லை என்று நான் கூறியுள்ளேன். நாமெல்லாரும் பரலோகத்திற்கு செல்ல முயன்று கொண்டிருக்கின்ற மானிடர்கள்.
25. போதிக்கிறதில் போப் ஒரு ஆள், காண்டர்பரியின் ஆர்ச் பிஷப் மற்றொருவர் ஆவார், மற்றொருவர், மற்றொருவர், மற்றொருவர்; நானும் போதகர்களில் ஒருவன், அவ்வளவுதான். நான் ஒருக்கால் ஒரு அதிதீவிர மூடபக்தியுள்ளவன் என்றும், நான் தவறாயிருக்கிறேன் என்றும் அவர்கள் போதித்து கூறுவர். எனக்கு ஒரு உரிமை... வேத வசனத்தினால் அதை நான் நிரூபிக்கக் கூடுமானால் அல்லது நான் ஒரு அதிதீவிர மூடபக்தியுள்ளவன் என்று வேத வசனத்தைக் கொண்டு அவர்களால் நிரூபிக்கக் கூடுமானால் நான் ஒரு மூடபக்தியுள்ளவன் தான். ஆனால் அவர்கள் தங்களுடைய ஸ்தாபிதத்தில் தவறாயிருக்கின்றனர் என்று வேத வசனத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியுமானால், அப்படியானால் அது தவறு தான்; வேத வசனம் சரியானது. இப்பொழுது ஒரேயொரு இடம் மாத்திரம் உங்களுக்கில்லை, அது வேதாகமம் முழுவதுமாக எல்லா இடத்திலும் வரவேண்டும்.
26. இப்பொழுது, நான் “கத்தோலிக்க சபைதான் தாய் சபை” என்று கூறினேன், அது முற்றிலும் சரியானதே. சபை ஸ்தாபனங்களை எடுத்து கொள்வோமானால், கத்தோலிக்க சபை தான் தாய் சபை. முதலாவதாக உருவாக்கப்பட்ட முதல் சபை கத்தோலிக்க சபை தான், சுமார்... சிறந்த வரலாற்றில், சுமார் கி.பி.606ல் இருக்க காண்போம், அது ஆதி பிதாக்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்று அப்போஸ்தலர்களின் காலத்தில் இருந்திருக்கும். அவர்கள் மரித்து போய் சிறு கொள்கைகளுடன் சிதறிப் போகத்துவங்கினர். ஆகவே மனந் திரும்பச் செய்யப்பட்ட ரோமர்கள், ரோம சாம்ராஜ்ஜியம், நாட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது, பிறகு சபையும் நாடும் ஒன்று சேர்ந்து “உலகளாவிய மதம்” என்ற ஒரு மதத்தை ஆரம்பித்தனர். “கத்தோலிக்கம்” என்னும் வார்த்தைக்கு “உலகளாவிய” என்று அர்த்தம் ஆகும். அவர்கள் சபையை ஸ்தாபித்தனர், அது தான் முதலாவதான மதம், கிறிஸ்தவ மதம், உலக சரித்திரத்திலே ஸ்தாபிக்கப்பட்ட ஒன்று.
27. யூத மதம் ஒரு ஸ்தாபனமாக இருந்ததில்லை, அது ஒரு சுதந்திர ஜனமாகும். அவர்கள் சபைகளைக் கொண்டிருந்தனர், ஆனால் ஸ்தாபனம் அல்ல. தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் அல்ல ஒரு தேசத்தினுடனே மட்டும் இடைபடுகிறார். அது ஒரு தேசம் ஆகும்.
28. ஆகவே இப்பொழுது. கத்தோலிக்க சபைதான் முதலாவது ஸ்தாபனமாகும். அந்த ஸ்தாபனம் என்ன என்பதை கண்டு பிடிக்கத்தக்கதாக வேதாகமத்திலிருந்து அதை நாம் எடுத்தோம். ஆகவே தேவனுடைய வார்த்தையின்படி, அது தனியொரு மனிதனால், ஒரே மனிதனால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வேதத்தின்படி அந்த மனிதன் ரோமாபுரியின் ஏழு மலைகளின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு சபையில் இருக்க வேண்டும். அங்கே... அவன் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தேசத்திலும் அரசாளுகிற வல்லமையை, மத சம்பந்தமான அரசாளுகிற வல்லமையை கொண்டிருக்க வேண்டியவனாக இருக்கிறான். மற்றொவன் உலகத்தில் கிடையாது.
29. ஆகவே-ஆகவே கம்யூனிசம், இயேசு பேசின அந்திகிறிஸ்து அல்ல- அல்ல என்று நாம் பார்த்தோம். ரஷ்யாவைபோல, கம்யூனிசம் ஒரு தேசம் அல்ல, கம்யூனிசம் ஒரு ஆவி ஆகும். அமெரிக்கா - அதனுடன் அது சபைகளில் இருக்கிறது, அது ஜனங்களுக்குள் இருக்கிறது, அது வியாபாரத்தில் இருக்கிறது, அது எல்லா இடத்திலும் இருக்கிறது. கம்யூனிசம், அதனுடைய ஆவி, பள்ளிகளில் இருக்கிறது, வீடுகளில் அது இருக்கிறது, எல்லா இடத்திலும் இருக்கிறது.
30. பிறகு - பிறகு அவர்கள் இந்த சபையை ஸ்தாபித்தவுடன் அது முரணாக... நாம் இப்பொழுது ஏழு சபை காலங்களையும், தீர்க்கதரிசனத்தையும், இங்கே சரியாக நமக்கு வேதத்தின் மூலமாக தேவன் கொண்டு வந்த வழியை பார்த்தோம். ஒவ்வொரு காலமும் வேதத்தின் படியேயும், வரலாற்றின் வாயிலாகவும் வேதாகமத்தின் படியேயும் நாம் பார்த்தோம்; ஒவ்வொன்றும் அந்த நேரத்தில் இருண்ட காலங்களினூடாக வந்தது. பிறகு இருண்ட காலத்தில் கத்தோலிக்க சபை உருவாக்கப்பட்டது.
31. பிறகு சீர்திருத்தம் வந்தது, அது மார்டின் லூத்தர் ஆகும். மார்டின் லூத்தர் ஒரு வெளிச்சத்தைக் கொண்டிருந்தார். அந்த சீர்திருத்தத்தில் அந்த வெளிச்சமானது, “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்; விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்” என்பதைக் கொண்டிருந்தது. அவர்கள் அதை (இராப் போஜனத்தை), “இது கிறிஸ்துவின் சரீரம்” என்று கூற வேண்டியவர்களாக இருந்தனர். அவர் ஒரு ஜெர்மானிய மதகுருவாயிருந்தார். அவர் அதை மறுத்து, அதை அவர் தரையில் எறிந்து “இது கிறிஸ்துவின் சரீரம் அல்ல; இது வெறும் அப்பம்!” என்றார். அப்படி செய்ததின் மூலம், அவர் கத்தோலிக்க சபையை துறந்தார், ஆதி சீர்திருத்தத்தில் அவர் வெளியே வந்தார். மார்டின் லூத்தர் அதைச் செய்தார், அது ஒரு அருமையான அசைவாகும்.
32. இப்பொழுது, லூத்தர் தன்னுடைய தவறைப் புரிந்தார், கத்தோலிக்க சபை செய்தது போல லூத்தர் இன்னுமொரு குழுவை ஸ்தாபித்தார், ஜனங்களை ஸ்தாபித்தார்.
33. பிறகு, நேரடியாக ஒரு புது வெளிச்சம் வந்தது. அந்த புது வெளிச்சம் வந்த போது, தேவன் தம்முடைய ஜனங்களோடு வெளியே வந்தார். லூத்தரன் சபையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அந்த ஜனங்கள், அவர்கள் சபையில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அதே விதமாகத்தான் கத்தோலிக்கரில் அநேகர் வெளியே வந்து லூத்தரன்களாயிருந்தனர். நல்லது, பிறகு வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் செய்தியுடன் வந்த போது, அப்பொழுது லூத்தரன்களில் அநேகர் தங்கள் சபையை விட முடியாதிருந்தனர்; ஆனால் அவர்களில் அநேகர் செய்தனர். வெஸ்லி சபையை உண்டாக்கினார்.
34. நீதிமானாக்கப்படுதல் பரிசுத்தமாக்கப்படுதலிற்கு பிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. அப்பொழுது பெந்தெகொஸ்தே, அநேகர் மெத்தோடிஸ்டு இன்னும் பலவற்றிலிருந்து வெளியே வந்து பெந்தெகோஸ்தேயினராக ஆயினர். ஏனெனில் அது ஒரு மேலான வெளிச்சமாக இருந்தது. இப்பொழுது மற்ற எல்லாரைப் போலவே சரியாக பெந்தெகோஸ்தே ஸ்தாபனமாகிவிட்டது.
35. இப்பொழுது, வேதாகமம் அதைக் கூறுகிறது. இவைகள் கண்டிப்பான வார்த்தைகளாயிருக்கிறது, ஆனால் அவைகளை வேதத்திலிருந்து நான் வாசிக்கிறேன். நீங்கள் உங்கள் டாக்டர் அல்லது வேறு சிலர் கூறுவதைக் கேட்கிறீர்கள், ஆனால் நானோ வேதவசனத்திலிருந்து போதிக்கிற உங்கள் சகோதரன் ஆகும். வேதாகமம் கத்தோலிக்க சபையை “ஒரு விபசாரி, ஒரு வேசி, வே-சி.” என்று அழைக்கிறது. அதை பின்பற்றின பிராடெஸ் டெண்டு சபைகளை அவர், தாய்கள்... அல்லது அவர்கள், “இந்த தாயின் வேசிகள்.” என்று அழைத்தார். இருந்த தொடர்பு என்னவென்றால், கத்தோலிக்க சபையானது காரியத்தை ஸ்தாபித்து அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த வெளிச்சத்தை அல்லது அப்பொழுது அவர்கள் என்ன வைத்திருந்தனரோ அதை எல்லா ஜனங்களும் விசுவாசிக்கும்படி செய்தனர். லூத்தரன்கள் அதே காரியத்தைச் செய்தனர். ஆகவே அவள் அந்த விதமான ஒரு மகத்தான ஸ்திரீயாயிருந்தாள் என்று வேதாகமம் கூறுகிறது.
36. இப்பொழுது அந்த விதமான ஸ்திரீ என்றால் என்ன? ஒரு ஸ்திரீ விபசாரம் செய்து கொண்டிருப்பது என்பதாகும். ஆகவே சபைகள் ஜனங்களுடன் ஆவிக்குரிய வேசித்தனம் புரிந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள்? அவர்கள் அப்படித்தான், அவர்கள் அப்படித்தான். அதை போதிக்கின்ற வேதாகமம் இதோ இருக்கிறது, வேதத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத பிரமாணங்கள் மற்றும் இன்னும் சில காரியங்களை அவர்கள் உண்டாக்கினர். ஆகவே, இது ஏறக்குறைய கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நான் இங்கே நின்று, எந்த ஊழியக்காரனாகிலும், எந்த நேரத்திலும், இங்கே வந்து எடுத்து... உங்களுடைய பாடப்புத்தகத்தை, உங்கள் பிரமாணத்தை அல்ல, ஆனால் வந்து வேத்தை எடுத்து, வேதத்தின் வெளிச்சத்தில், இது தவறு என்று நிரூபிக்க கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
37. ஆகவே முரண்பாடுகளைக் குறித்து, அவர்கள் “எதிர் முரண் பாடுகள்!” என்று கூறுகின்றனர். எவராவது வந்து வேதாகமத்தில் ஒரு முரண்பாட்டை எனக்கு காண்பிப்பார்களானால் இரண்டு மாதச்சம்பளத்தை தருவதாக நான் அறிவித்திருக்கிறேன். அது அங்கேயில்லை. அது அங்கிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது அங்கேயில்லை. வேதாகமம் அதற்குத்தானே முரண்பாடு கொண்டதாக இருக்குமானால், அது உபயோக மற்றதாக இருக்கும், உங்களால் அதை விசுவாசிக்க முடியாது. ஒவ்வொரு வார்த்தையும் ஆவியின்... ஊக்கமளிக்கிறதாயிருக்கிறது. வேதாகமத்தில் எந்த ஒரு முரண்பாடும் கிடையாது.
38. இப்பொழுது பிராடெஸ்டென்ட் சபை, அதினுடைய ஸ்தாபனத்தில், (தேவனுடைய வார்த்தையின்படி) அதே காரியத்தை கத்தோலிக்க சபையுடன் இணைத்து இருக்கின்றது.
39. இப்பொழுது, கத்தோலிக்க மக்களுக்கு விரோதமாக என்னிடம் ஒன்றும் கிடையாது. இங்கே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிற என்னுடைய அருமையான நண்பர்களில், சிலர், கத்தோலிக்க ஜனங்களின் வளர்ச்சியில் வந்தவர்கள். இங்கே, கடந்த இரவிற்கு முன்பு, பரிசுத்த ஆவியின் மூலமாக பிராட்டெஸ்டெண்ட் மற்றும் கத்தோலிக்கத்தைக் குறித்து ஒரு கடுமையான செய்தியை நான் அளித்த போது, அந்த கத்தோலிக்கர் நேராக இங்கே பீடத்திற்கு நடந்து வந்து என்னுடைய கையை குலுக்கினர். அவர்களும் நம்மை போன்று அதே விதமான மானிடர்கள் ஆவர்.
40. கத்தோலிக்க மதகுருக்களுடன் உங்களால், விவாதிக்க முடியாது, ஏனெனில் இந்த வேதாகமம் தான் எல்லா வார்த்தையாயிருக்கின்றது என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள், “அது சபை தான்” என்று கூறுவார்கள். நாம், “அது வேதாகமம்தான்” என்று கூறுகிறோம்.
41. கத்தோலிக்கர், “கத்தோலிக்கர்களாகிய நாங்கள் சபைக்கு சென்று ஆராதிக்கிறோம். பிராடெஸ்டென்டுகளாகிய நீங்கள் வீட்டிலே இருந்து வேதாகமத்தை படிக்கிறீர்கள்,” என்று கூறுகின்றனர்.
42. நான், “ஆமாம், நீங்கள் சபைக்கு சென்று வழிபடுகிறீர்கள், ஆனால் எதை?” என்றேன். அது தான் அடுத்த காரியமாகும், பாருங்கள்.
43. இப்பொழுது, ஆனால் தேவன் தாம் தம்முடைய வார்த்தையில் இருப்பதாகக் கூறினார். இது தேவனுடைய வார்த்தை. நான் அதை விசுவாசிக்கிறேன். நான் ஒரு வேதாகம வழிபாடு செய்பவன். அதன் காரணமாகத்தான் பிராஸ்டெண்ட் கொள்கையுடனும், அதனுடைய - அதனுடைய சபை ஸ்தாபனத்துடன் நான் இணங்காமல் இருக்கிறேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தையாக இல்லாத காரியங்களை அவர்கள் போதிக்கின்றனர். ஆகவே என்னால் அதனுடன் இணங்காதிருக்கத்தான் முடியும். நான் அவர்களுக்கு எதிராக சர்ச்சை உண்டு பண்ணுவதில்லை, இல்லை, ஐயா, அவர்கள் என்னுடைய சகோதரர் ஆவர். நான் அவர்களுடன் சச்சரவு கொள்வதில்லை, ஆனால் நான் அவர்கள் கருத்துக்கு விரோதமாயிருப்பேன். ஏனெனில் தேவன் என்ன கூறுகின்றாரோ அதை மாத்திரமே எடுத்து கொண்டு, மற்ற எல்லாவற்றையும் பொய்யாக விட்டு விட வேண்டியவனாயிருக்கிறேன். பாருங்கள்?
44. ஆகவே இப்பொழுது அந்த தொடர்பானது... இப்பொழுது வேதாகமம் அந்த ஸ்திரீ, கத்தோலிக்க சபை, வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 17வது அதிகாரத்தில், இவ்விதமாக அழைக்கப் பட வேண்டியளாக இருக்கிறாள், “ஒரு வேசி”, அவள் “வேசிகளுக்கெல்லாம் தாய்” ஆவாள். ஆகவே ஸ்திரீ “ஒரு சபையை பிரதிநிதித்துவப் படுத்துகிறாள்,” என்று வேதாகமம் கூறுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே அப்படியானால் அவளுக்கு குமாரத்திகள் இருக்குமானால் அவர்களும் வேசிகள்தான், அது பையன்களாக இருக்க முடியாது, அது குமாரத்திகளாகத்தான் இருக்க வேண்டும், ஆகவே அது சபைகளாகத் தான் இருக்க வேண்டும். ஆகவே பிராடெஸ்டென்ட் கொள்கையானது கத்தோலிக்கத்திலிருந்து பிறந்து வெளி வந்தது ஆகும்.