167. அருமை சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. கவனி, ஸ்திரீகள் தங்கள் தலைமயிருக்கு சாயம் போடுவதைக் குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு விரோதமான வேதவசனம் எதுவும் எனக்கில்லை. நான் வேதவசனத்தில் மட்டுமே நிலைகொண்டிருக்க வேண்டும். பார்? அவ்விதம் அவர்கள் செய்யக் கூடாது என்று வேதம் உரைக்கவில்லை. அவள் நீண்ட தலைமயிரை உடையவளாயிருக்க வேண்டும் என்று தான் வேதம் போதிக்கிறது. அதற்கு பிறகு, எங்கே போவதென்று எனக்குத் தெரியவில்லை. பார்? அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது.
168. எனக்கு நெருங்கிய நண்பரான ஒரு போதகர் இங்கு எங்கோ இருக்கிறார். அன்றொரு நாள் நாங்கள் ப்ளூ போர் என்னும் விடுதிக்கு நடந்து சென்று உணவு அருந்தினோம். அவர் என்னிடம், "என் மனைவி உமக்கு முன்னால் வர வெட்கப்படுகிறாள்" என்றார். அவள் பரிசுத்தமுள்ள, தேவபக்தியுள்ள ஸ்திரீ, நற்பண்பு கொண்டவள், பாட்டியாகிவிட்டவள். அவள் நல்லவள், சுத்தமுள்ளவள், உண்மையிலேயே... என் மனைவிக்கு இவள் மேல் அலாதி பிரியம். அவள்... அவள் இங்கு உட்கார்ந்திருக்கிறாளோ என்று எனக்குத் தெரியாது; அவள் இங்கிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவளுடைய கணவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம், "உங்கள் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு அவள் தலைமயிரை நீளமாக வளர்க்கத் தொடங்கி விட்டாள். அது சரியென்று அவள் அறிந்து கொண்டாள். ஆனால் அவள் தலைமயிருக்கு சில சாயங்களை உபயோகித்து வந்தாள். அவள் உமக்கு முன்பாக வருவதற்கு முன்பு அதையெல்லாம் போக்கிவிட்டு வரவேண்டுமென்று மிகவும் பிரயாசப்படுகிறாள்" என்றார்.
169. இப்பொழுது பார், அருமை சகோதரியே, அதை நான் மிகவும் மதிக்கிறேன். அவ்விதம் செய்யும் ஸ்திரீயின் மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. சில ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை எல்லா விதங்களிலும் அலங்கரித்துக் கொண்டு, உங்கள் கால்களில் துப்பி கர்வம் கொண்டவர்களாய், எந்த மரியாதையும் கொடுக்காமல் நடக்கின்றனர். இயேசு, "அவர்களுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்றார். பாருங்கள்? உன் மனப் பான்மையை நான் மதிக்கிறேன், அதற்காக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்.
170. ஆனால், சகோதரியே, தலைமயிருக்கு சாயம் போடும் விஷயத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதை வேத வசனத்தைக் கொண்டு என்னால் ஆதாரப்படுத்த முடியாது. எனவே அது உன்னை பொறுத்தது. பார்? அதை நீ செய்ய விரும்பினால், அதனால் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. எனக்குத் தெரிந்த வரையில், என் சபையில் அந்த வழக்கம் கிடையாது. நீ செய்ய விரும்பினால்... வேதத்தில் இல்லாத எந்த ஒன்றும், நல்லது, நீ... அது உன்னைப் பொறுத்த விஷயம். பார்? ஆனால் என் ஆலோசனையை உனக்குத் தருவேன், பார், எனக்குத் தெரிந்த வரையில்... அழகாகக் காணப்பட வேண்டு மென்பது ஸ்திரீயின் இயல்பு என்று உனக்குத் தெரியும்; அவள் அந்த விதமாக இருப்பதாக கருதப்படுகிறாள்.
171. மானிட வர்க்கத்தைத் தவிர மற்றெல்லா வர்க்கத்திலுமே, ஆண் தான் மிகவும் அழகுள்ளது என்று உனக்குத் தெரியும். பறவை, பசு, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். மாடு இனத்தை எடுத்துக் கொள்வோம். எது மிகவும் அழகுள்ளது? சுருங்கிப் போன கொம்பையுடைய பசுவா அல்லது பெரிய காளையா? மானை எடுத்துக் கொள், எது மிகவும் அழகுள்ளது, பெண் மானா? ஆண் மானா? கலைமானை எடுத்துக் கொள்வோம், எது மிகவும் அழகுள்ளது? ஆணா? பெண்ணா? நீர் எருமை, எதை வேண்டு மானாலும் எடுத்துக் கொள். பறவை இனத்தை எடுத்துக் கொள். சேவலா, கோழியா, எது மிகவும் அழகுள்ளது? பார்? வர்க்கங்கள் அனைத்திலும் எப்பொழுதும் ஆண்தான் மிகவும் அழகுள்ளது. ஆனால் மானிட வர்க்கத்தில் மாத்திரம் பெண் தான் மிகவும் அழகுள்ளவள். ஏன்? அவள் தான் வீழ்ச்சி உண்டாக காரணமாயிருந்தாள். சாத்தான் அவளை அங்கேயே தெரிந்து கொண்டான், அழகு பிசாசினால் உண்டானது. பார்?
172. சாத்தான் தான் தேவதூதர்களிலேயே மிகவும் அழகுள்ளவன். அவன் சிங்காசனத்தை மூடிக் கொண்டிருந்த கேரூபின், ஸ்திரீ முன்னைக்காட்டிலும் இப்பொழுது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள் என்று பார். எத்தனை பேர் பெர்ல் ஓப்ரயனைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? மக்கள் கரங்களைப் பார்ப்போம், முதியோரில் சிலர். நிச்சயமாக. பாருங்கள்? அவள் அமெரிக்காவிலேயே மிகவும் அழகுள்ள பெண் என்று கருதப்பட்டவள். ஆனால் இன்று தெருவில் காணும் எந்த ஒரு இளம் பெண்ணும் அவளைக் காட்டிலும் இரட்டிப்பாக அழகுள்ளவளாயிருக்கிறாள். ஏன்? அதை தான் வேதம் உரைத்துள்ளது. "தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு... அந்த துரோகிகளின் கூட்டம் தான் பூமிக்கு ஜலப்பிரளயம் அனுப்பப்பட காரணமாயிருந்தனர், தேவன் மானிட வர்க்கம் முழுவதையும் அழித்து போட்டார். பாருங்கள்? இன்றைக்கு எல்லாமே ஹாலிவுட்டையும், அழகையும், அது போன்றவைகளையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அழகு என்பது இருதயத்தில் மறைந்திருக்கிற ஒன்றேயன்றி (பாருங்கள்?) அது வெளிப்புற தோற்றம் அல்ல. "அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளட்டும், ஆனால் புறம்பான அலங்கரிப்பினால் அல்ல, உள்ளான அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது" (1 பேதுரு 3:3-4), அதுதான் கிறிஸ்தவன்.
எனவே இப்பொழுது, உன் கேள்விக்கு, சகோதரியே, உனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இந்த கேள்வியுடன் நான் நிறுத்திக் கொள்ளலாம், அல்லது இன்னும் முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். முப்பது நிமிடங்கள்... எத்தனை பேருக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் தங்கியிருக்க முடியும், அப்படியானால் அது இன்றிரவு நமக்கு இன்னும் சிறிது நேரம் தரும். நல்லது. நான் விரைவாக முடிக்கிறேன்.