173. இப்பொழுது பார், சகோதரியே, இப்பொழுது இது... போன கேள்வியைத் தொடர்ந்து இது வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அதை நான் அந்த இடத்தில் பொருத்தவில்லை. அது தானாகவே தொடர்ந்தது நல்லது.
கவனியுங்கள், அந்நாளில், பின்னப்பட்ட தலைமயிர் ஒரு தெருப் பெண்ணுக்கு (வேசிக்கும் அடையாளமாயிருந்தது. அவள் அதை தான் செய்தாள். தன் தலைமயிரைப் பின்னினாள். பவுல் கிறிஸ்தவர்களுக்கு "மயிரைப் பின்னுதலினால் உங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டாம்..." என்றான். ஏனெனில் அது உலகில் உள்ள மற்றவர்களைப் போல் காட்சியளித்தது.
174. இப்பொழுது, நீங்கள் உலகத்தாரைப் போல் காணப் படவோ அல்லது நடந்து கொள்ளவோ கூடாது. பாருங்கள்? ஸ்திரீகள் அவர்களை விட வித்தியாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பாருங்கள்? இல்லை, இப்பொழுது, பின்னிய தலைமயிர்... இப்பொழுது, இன்றைக்கு பின்னிய தலைமயிர் அழகாயும், உலகத்தின் நாகரீகத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாயும் உள்ளது. ஸ்திரீகள் இன்று தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளும் விதத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். உங்கள் தலைமயிரை நீங்கள் எந்த விதத்திலும் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் உலகத்தாரைப் போல் மட்டும் காணப்படாதீர்கள்! உலகத்தாரைப் போல் காணப்படாதீர்கள், அவர்களைப் போல் உடுத்திக் கொள்ளாதீர்கள்! அவர்கள் குட்டை கால் சட்டைகளை அணிந்து கொண்டால், நீங்கள் உடைகளை அணிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் தலைமயிரை கத்தரித்துக் கொண்டால், அல்லது வேறெதாகிலும் செய்து கொண்டால்... நீங்கள் உங்கள் தலைமயிரை வளரும்படி விட்டு விடுங்கள். பாருங்கள்?
175. மயிரைப் பின்னுதல்... கேள்வி என்னவென்றால், 'ப்ராய்ட்டும் (broid), 'ப்ரேய்ட்டும் (braid) ஒரே அர்த்தமுடையதா? ஆம், அது சரி. இப்பொழுது, தெருவில்...
176. 'ப்ரேய்ட்' செய்யப்பட்ட தலைமயிர் என்றால் என்ன அர்த்தம் என்பதை கண்டுபிடிக்க நான் பல ஆண்டுகளுக்கு முன்பே அகராதியைத் தேடினேன். பாருங்கள்? ஸ்திரீ, உண்மையில், முன் காலத்து ஸ்திரீகள் தங்கள் தலைமயிரை பின்னால் இழுத்து அதைக் கட்டினார்கள், ஏறக்குறைய இன்று அவர்கள் 'போனி டேய்ல் (pony tail) கட்டுவதைப் போல. அவர்கள் எல்லாவிடங்களுக்கும் அவ்விதமே சென்றனர். அவர்கள் அங்கிகளை உடுத்திக்கொண்டனர், ஆனால் ஒரு தெரு வேசியோ தன் தலைமயிரை தலையிலிருந்து பின்னி, அதை இப்படி சுற்றி விட்டு, தலையில் பூ வைத்துக் கொள்வது வழக்கம் - ஒரு விதமான வேசி. இன்றைக்கு நாம் ஒரு வேசியை காண்பது போல, அவள் உடுத்தும் விதம். நான் வேசியை ஃப்ளாப்பர் (flapper) என்று அழைக்கிறேன், ஏனெனில் நான் வயதானவன். என் காலத்தில் அவர்கள் அவ்விதம் தான் அழைப்பார்கள். இன்றைக்கு அவர்கள் என்னவென்று அழைக்கின்றனர்? நான்... எனக்குத் தெரியாது. 'சிக்ஸ்' (chicks) அப்படி ஏதோ ஒரு பெயரால். எனவே... அது என்னவானாலும். அவர்களுக்கு நீங்கள் என்ன பெயர் கொடுத்தாலும், அவர்கள் அதை விரும்புவார்கள்.