177. இப்பொழுது அது - ஆம், அது ஒருவிதத்தில்... இதற்கு நான் இப்பொழுது எவ்விதம் பதில் கூறுகிறேன் என்பதை நீ கவனமாய் கேட்க வேண்டும். பார்? முதலாவதாக, "நீங்கள் கூறியிருக்கிறீர்கள்..." (நான் சரியாகக் கூறுகிறேனா என்று பார்ப்போம்...) "உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றில், நோவா தன் குடுபத்தாரை இரட்சித்தான்" என்று கூறியிருக்கறீர்கள். ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசித்தனர். அதுதான். ஏனெனில் அவர்கள் அவனுடைய செய்தியை விசுவாசித்தனர்.
178. "ஒரு தாய் தன் குடும்பத்தினருக்காக அதே விசுவாசம் கொள்ளலாம் என்பது அதன் அர்த்தமா? ஆம், சகோதரியே! ஒரு தாயின் இருதயம் தன் மக்களுக்காக கூக்குரலிடுவதை என்னால் காண முடிகிறது. "நாம் விசுவாசித்தால் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள்" என்று அர்த்தமா? ஆம், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால், அது உண்மை.
179. அந்த பிலிப்பு பட்டினத்து சிறைச்சாலைக்காரனை ஞாபகம் கொள். உங்கள் இருவருக்குமாக விசுவாசி... உன் சொந்த இரட்சிப்புக்காக உனக்கு போதிய விசுவாசம் இருக்குமானால், உன்ஜனங்களின் மேல் கிரியை செய்வதற்கென அதே விசுவாசம் உனக்கு ஏன் இருக்கக் கூடாது? விசுவாசம் என்பது என்ன? அது காணக் கூடாத ஒரு சக்தி. பார்? அது என்ன - அது ஆவி. பரிசுத்த ஆவி விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. பார்? அது காணக்கூடாத ஒரு சக்தி.
180. நான் ஏன் வியாதியஸ்தரின் மேல் கைகளை வைக்கிறேன்? பார்? அந்த நபருக்குள் இருக்கும் அந்த ஆவியுடன் என்னால் தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள முடியுமானால், ஏதாவதொன்று நிகழும். பார்? இங்கு பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக்கிறார்; அவர் இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவார். கடைசி காலத்தில் அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அவர் அதை அப்படியே செய்வார். ஜனங்கள் அதை விசுவாசிக்கின்றனர்; அவர்கள் அதைக் கண்டு, "ஆம், ஐயா, அதை நான் விசுவாசிக்கிறேன்" என்கின்றனர்.
181. இப்பொழுது, உனக்கு நான் மிகவும் சாதாரணமாக ஆகி விடாமல் போனால் (பார்?) - இது சாதாரண ஒன்றாக ஆகிவிடுகிறது. நீங்கள் ஒரு நாள் ஜெபவரிசையில் கடந்து வருகிறீர்கள், அடுத்த நாளும் கடந்து வருகிறீர்கள். பாருங்கள்? அது தற்செயலாய் நடந்தால் நல்லது என்பதைப் போல. பாருங்கள்? நீங்கள் முதலாவதாக அதையே விசுவாசிப்பது கிடையாது (பாருங்கள்?) ஏனெனில் நீங்கள் உண்மையாக விசுவாசித்த உடனே... அந்த ஸ்திரீ "நான் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் முழுவதும் சொஸ்தமாவேன்" என்றாள். அவள் அதைச் செய்தாள். பாருங்கள்? "நான் மறுபடியும் முயற்சி செய்யட்டும்" என்று அவள் சொல்லவில்லை. பாருங்கள்? அவள் அதை விசுவாசித்தாள். பாருங்கள்? அது-அது....
182. இப்பொழுது, உன்னிலுள்ள எல்லாவற்றோடும் நீ மட்டும் உன் குடும்பத்துக்காக விசுவாசிப்பாயானால்...
183. இப்பொழுது, இங்குள்ளது போல, என்னை உந்துவது எது? என் கையிலுள்ள பலம் எது? அது நிச்சயமாக என் தசைகள் அல்ல, அது என் ஆவி. நிச்சயமாக, அந்த ஆவியை எடுத்துப் போடுங்கள், அப்பொழுது தசை என்ன செய்ய முடியும்? அது செத்ததாய் இருக்கும். பார்? அது அழுகிப்போகும், ஆனால் அது... பார், ஆவிதான் பலத்தை அளிக்கிறது.
184. சிம்சோனைப் பாருங்கள். இந்த இரண்டு கம்பங்களுக்கும் இடையே இருக்கக் கூடிய அவ்வளவு பெரிய கதவுகளை உங்களில் அநேகர் கண்டிருப்பீர்கள். சகோ. ஜாக்சன், அவ்வளவு திடகாத்திரமுள்ள மனிதன், ஒரு சிங்கத்தை சுக்குநூறாகக் கிழிக்கக் கூடிய பலமுடையவன். தானியக் களஞ்சியத்தின் கதவைப் போல் அவ்வளவு அகலமுள்ள தோள்களைக் கொண்டிருந்த ஒரு மனிதனின் மேல் சிங்கம் குதித்தது. அவன் அதை பீறிப் போட்டான். அது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அதிசயம் என்னவென்றால் அவன் சுருண்ட தலைமயிர் கொண்ட, பெண்மைத்தனம் கொண்ட அம்மாவின் மகனாயிருந்தான். பெண்ணின் மயிர் சுருள்கள் போல் ஏழு சுருள்கள் அவனுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கவனித்தீர்களா, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கும் வரைக்கும், அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, அந்த சிங்கம் அவனை நோக்கி ஓடி கெர்ச்சித்த போது, அதை துண்டு துண்டாக கிழித்துப் போட்டான். அது சிம்சோன் அல்ல. அது கர்த்தருடைய ஆவி.
185. அவன் எவ்விதம் அந்த வனாந்தரத்தில் உலர்ந்து வெளுத்துக் கிடந்த கழுதையின் தாடையெலும்பை எடுத்து... அந்த பெலிஸ்தியரின் தலைச்சீராக்கள் ஒரு அங்குலம் கனம் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அந்த தாடையெலும்பை நீங்கள் எடுத்து அந்த தலைச்சீராக்களின் ஒன்றின் மேல் அடித்தால், அது ஆயிரம் துண்டுகளாக நொறுங்கி விடும். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் அந்த தாடையெலும்பைக் கொண்டு அடிப்பார்களானால்... ஆனால் அங்கே பாருங்கள், அவன் அந்த தாடையெலும்பைத் தன் கையில் பிடித்து அங்கு நின்று கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரை மடங்கடித்தான்; மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போய் விட்டனர். அவன், "வாருங்கள், உங்களுக்கும் இந்த கதி வேண்டுமா?" என்று கேட்டான். அப்பொழுதும் அவன் அந்த தாடையெலும்பை கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அது என்ன? கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினது. பாருங்கள்?
186. எனவே அது கர்த்தருடைய ஆவியே. உன் சொந்த இரட்சிப்புக்காக விசுவாசிக்க உனக்குள் கர்த்தருடைய ஆவி இருக்கும் போது, அதை உன் குடும்பத்தின் மேல் வைத்து, "இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களை உரிமை கோருகிறேன்; அதை நான் உரிமை கோருகிறேன்! தேவனே, அவளை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, அவனை நீர் எவ்விதம் அதை செய்ய வைக்கப் போகிறீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதை நான் விசுவாசிக்கிறேன்; அதை விசுவாசிக்கிறேன், கர்த்தாவே! என் அவிசுவாசம் நீங்க உதவிச் செய்யும்" என்று சொல். அதை உரிமை கோரி என்ன நடக்கிறதென்று கவனி. அது அதை செய்யும்.