187. ஆம். பாருங்கள், நண்பனே. நான் ஒரு வேதசாஸ்திர பண்டிதன் அல்ல. எனவே வேதத்தைக் குறித்து எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் நிழல்களையும் முன்னடையாளங்களையும் கொண்டு போதிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நீங்கள் என்னை. "முன்னடையாளக்காரன்" (typologist) என்று அழைக்கலாம். நான் சுவற்றை நோக்கிக் கொண்டிருக்கிறேன், என்னை நான் கண்டதேயில்லை என்று வைத்துக் கொள்வோம். நான் சுவற்றில் என் நிழலைக் காணும்போது, எனக்குத் தலை, காதுகள், கைகள் உள்ளதாக அறிந்து, என்னை நான் கண்டால், நான் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன். பாருங்கள்? ஒரு கண்ணாடியில் என் உருவம் பிரதிபலிப்பதை நான் காணும்போது, நான் நின்று கொண்டு என்னையே நான் காணமுடிந்தால் எப்படியிருப்பேன் என்பதை அறிந்து கொள்கிறேன்.
188. வேதத்தையும் நான் அவ்விதமாகவே கருதுகிறேன். "இவையனைத்தும் நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டுள்ளன" என்று வேதம் உரைக்கிறது (1 கொரி. 10:11). நாம் பின்னோக்கிப் பார்த்து, சந்திரன் சூரியனைப் பிரதிபலிப்பது போல, அது என்ன - வென்று நாம் அறிந்து கொள்ளலாம். நான் சூரியனைக் கண்ட தேயில்லை என்றால், அது எப்படியிருக்கும் என்று நாம் அறிந்துகொள்கிறோம். நாம் சந்திரனை நோக்கி, சூரியன் அதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும் என்று அறிகிறோம். நல்லது, அது போன்று பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை நீங்கள் காணும்போது, அவை புதிய ஏற்பாட்டின் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாயுள்ளன.
189. இப்பொழுது, இங்கே, என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிப்பது என்னவெனில், நான் - நாம், அல்லது இந்த நாட்கள்... நாம் இல்லையென்றால், வேறு யாரோ இருக்கிறார்; அப்படித்தான் இருக்க வேண்டும். காலம் முடிவடைந்து விட்டது; நாம் முடிவில் இருக்கிறோம்.
190. ஒவ்வொன்றும். உலகமானது... தேவன் உலகத்தை ஆறாயிரம் ஆண்டுகளில் சிருஷ்டித்து, ஏழாயிரம் ஆண்டில் ஓய்ந்திருந்தார். ஒரு மனிதன் அத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ மாட்டான் என்று அவர் கூறினார். "நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'. வேதத்தின்படி மெத்தூசலா தான் மிகவும் நீண்ட காலம் வாழ்ந்தவன். அவன் 969 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். அவன் அந்த ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழவில்லை. ஆனால் மனிதன் தண்டனைக்கான கிரயம் செலுத்தப்பட்டாகி விட்டது என்பதைக் காண்பிக்க, ஆயிரம் வருட அரசாட்சியின் போது, ஆயிரம் ஆண்டு காலம் உயிர் வாழ்வான். மனிதன் அப்பொழுது என்றென்றைக்கும் உயிர் வாழ்வான்; நாள் என்பது முடிவடைந்திருக்கும்; காலம் என்பது முடிவடைந்திருக்கும்; அவர்கள் நித்தியத்தில் இருப்பார்கள்.
191. இரண்டு மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு நான் அளித்த "பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்' என்னும் செய்தியின் பேரில் எனக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. அது நிச்சயம் அநேகருக்கு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது... எனக்கும் கூட. அதிலிருந்து நான் மீளவில்லை .
192. இப்பொழுது கவனியுங்கள். இதன் பேரில் (பாருங்கள்?) ஆபிரகாம் கண்டான். இப்பொழுது, அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாக, அவனுடைய சந்ததியுடனும் ஈடுபட வேண்டும். இப்பொழுது, இந்நாட்களில் ஒன்றில், நான் எப்பொழுதாகிலும் திரும்பி வரும்போது, அதை இன்னும் விரிவாக எடுத்து, ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்த வெவ்வேறு கட்டங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அவர் ஆபிரகாமுடன் ஈடுபட்ட விதமாகவே, லூத்தருடனும், வெஸ்லியுடனும், வழிவழியாக இக்காலம்வரையிலும் உண்டாயிருந்த சபைகளுடன் ஈடுபட்டிருக்கிறார். அவர் எவ்வாறு ஆபிரகாமுக்குப் பிரத்தியட்சமானார்; எவ்வாறு சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் அவர் அவனுடன் உடன்படிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார் - அது பிலதெல்பியா சபையின் காலம். ஆம், ஐயா, அது இரத்தத்தின் காலம் - வெஸ்லியன் காலம்.
193. அதன் பிறகு பெந்தெகொஸ்தே காலத்தை கவனியுங்கள். அவர் அங்கு வந்த பிறகு, அவர் எல்ஷடாய்' அதாவது "என் மார்பகத்தின் பாலைக் குடி" என்னும் வாக்குத்தத்தத்தை அருளினார். கேள்வி என்னவெனில்: உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அது பெந்தெகொஸ்தேயினருக்கு முன்பாக வைக்கப்பட்டது. பாருங்கள்? உன்னால் பாலைக் குடிக்க முடியுமா? அவர்கள் அதைச் செய்யவில்லை; அவர்கள் வெளி வந்த ஸ்தாபனத்தின் மார்பகத்தைப் பிடித்து அதன் பாலைக் குடித்தனர். ஆனால் வித்தோ, உண்மையான வித்தோ, தேவனுடைய மார்பகத்தின் பாலைக் குடிக்கும்.
194. அத்தனை ஆண்டுகளாக அவர்கள் காத்திருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு முன்பு அவர்கள் பெற்றுக் கொண்ட கடைசி அடையாளம் என்ன? தேவன் ஒரு மனித உருவில் அங்கு நின்று கொண்டு சாராளின் இருதயத்திலுள்ள சிந்தனைகளைப் பகுத்தறிந்தாரா? (சாராள் சபையாக, சபைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறாள்) அவருக்குப் பின்னால் இருந்த சபையின் சிந்தனைகளை அவர் பகுத்தறிந்தார். அது சரியா? அதற்கு பின்பு உடனே, சாராள் ஒரு வாலிப ஸ்திரீயாகவும், ஆபிரகாம் ஒரு வாலிபனாகவும் மாறினான்; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனாகிய ஈசாக்கு காட்சியில் கொண்டு வரப்பட்டான்.
195. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு சபைக்கு நிகழ வேண்டிய கடைசி காரியத்தை நீங்கள் கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது முற்றிலும் உண்மை. அதை நான் விசுவாசிக்கிறேன். மாரி முடிந்து விட்டது. வெளிப்படுத்தின விசேஷம் முதல் மூன்று அதிகாரங்களைப் படியுங்கள், சபைக்கு என்ன வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதுதான் சபைக்கு அங்கே வாக்களிக்கப்பட்டுள்ளது - சபை காலங்களுக்கு.
196. அன்றொரு நாள் நாம் எக்காளங்களைப் பிரசங்கிக்கத் தொடங்கின போது, பரிசுத்த ஆவியானவர், "அது இதைச்சேர்ந்ததல்ல என்று உரைத்ததை நீங்கள் கவனித்தீர்கள். பாருங்கள், பாருங்கள்?
197. இப்பொழுது, பின் மாரி, 144,000 யூதர்கள், இல்லை, அதுவல்ல, அவர்கள் மாட்டார்கள். அது எலியாவும் மோசேயும் வரும் போது... அப்பொழுதுதான் அற்புதங்கள் நடக்கும். ஜனங்கள் - பெந்தெகொஸ்தேயினர் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள், அவர்கள் கீழ் தான் நடக்கும். பாருங்கள், அது எலியாவினுடையதும், மோசேயினுடையதும். அவர்கள் தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிப்பார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாளிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைப்பார்கள். தேவன் முன்பு செய்தது போல, நின்று கொண்டு அவர்களுக்காக யுத்தம் பண்ணுவார். அவர் எகிப்தில் செய்த விதமாகவே, அவர்களை பலத்த கரத்தினால் உலகத்தின் "தத்துவங்களிலிருந்து" (isms) வெளியே கொண்டு வருவார். அவர் அதைச் செய்வார், ஆனால் அதுவல்ல...
198. நாம் கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க மட்டும் செய்ய வேண்டும். காத்திருக்க மட்டும் செய்யுங்கள்; உங்கள் தீவட்டிகளை சுத்தம் பண்ணி வைத்திருங்கள், அதை எண்ணெயினால் முழுவதும் நிரப்புங்கள். ஒவ்வொரு மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருங்கள், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு மணி நேரமும். உங்களை ஆயத்தமாக வைத்திருங்கள்; ஆயத்தமாயிருங்கள்: இனிமையாயிருங்கள், விழித்துக் காத்திருங்கள்... ஓ, அந்த மகிழ்ச்சியான ஆயிரம் வருட அரசாட்சியின் நாள் வரக்காத்திருக்கிறோம் அப்பொழுது, நமது ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் வந்து காத்திருக்கும் தம் மணவாட்டியை எடுத்துக்கொள்வார் ஓ, என்னே - ஓ, நான் உழைத்து, விழித்து, ஜெபித்துக் கொண்டிருக்கையில் என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்குகிறது, ஏனெனில் நமதாண்டவர் மறுபடியும் பூமிக்கு வருகிறார். அதுதான்; அதுதான் இந்நேரத்தில் சபையின் நம்பிக்கை.