199. இரண்டில் ஏதாவதொன்றை உபயோகிக்கலாம். நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தை உபயோகிக்கிறேன் (பாருங்கள்?) ஏனெனில் அவர் நம்முடைய கர்த்தர் என்பது என் கருத்து. இப்பொழுது, சில சகோதரர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்து எனக்கு கருத்து வேறுபாடு உண்டு (பாருங்கள்?), ஏனெனில் இயேசு என்னும் பெயர் கொண்ட பல நண்பர்கள் எனக்குள்ளனர் - மெக்ஸிகோவிலும், இத்தாலியிலும் இன்னும் மற்றவிடங்களிலும் பல போதகர் நண்பர்கள். அவர்கள் அவர்களை இயேசு என்ற பெயரால் அழைக்கின்றனர். எனவே ஞானஸ்நானத்தில் இயேசு என்னும் நாமம் போதாது. அவர் கிறிஸ்துவாகிய இராட்சகராகப் பிறந்தார். அவர் இரட்சகராகப் பிறந்தார், கிறிஸ்துவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். அவர் பிறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு இயேசு என்னும் நாமம் பெயரிடப்பட்டது. பாருங்கள்? அப்படியானால் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அப்படித்தான் அவர் இருந்தார். சரி.