200. நமக்குள்ள இந்தக் கேள்வித் தொகுப்பிலேயே இது மிகவும் வஞ்சகமான கேள்விகளில் ஒன்றாகும். இது இன்றைக்கு உலகில் அதிகமாக பிரச்சினைக்குரிய கேள்வியாகும். இப்பொழுது. நான் சொல்வதைக் கேளுங்கள். இதற்கு எனக்கு ஒரு காரணம் உண்டு. இன்று காலையில் விவாகமும் விவாகரத்தும் என்பதை குறித்து சரியான காரியத்தை இந்த சபைக்குக் கொண்டு வந்து அது ஒலிநாடாவில் பதிவாகி மற்றவர்கள் கேட்பார்களானால், அது தேசத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் உடைத்துப் போடும். பாருங்கள்? அது உண்மை.
201. இப்பொழுது, எனக்கு உதவி செய்யும், வேதாகமம் என் முன்னில் இதோ வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியின் பேரில் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் பெற்றிருக்கிறேன். இதைக் குறித்து தர்க்கம் செய்யும் இரு சாராருமே தவறாயிருக்கின்றனர். ஏற்கனவே விவாகமானவர்களை மறுபடியும் விவாகம் செய்கிறவர்கள், இருவருமே தங்கள் செயலில் தவறு செய்கின்றவர்களாயிருக்கின்றனர். ஆனால் இதற்கு இடையில் - பாதையின் நடுவில் - சத்தியம் உள்ளது. நான் விரும்பவில்லை... நான் ஒரு செய்தி ஒலிநாடாவை தயாரிக்கப் போகின்றேன், எனக்கு ஏதாவது நேரிடும் பட்சத்தில் நான் போய்விட்ட பிறகு (பாருங்கள்?) அதை சகோதரர்கள் சபைகளுக்கு போட்டுக் காட்டலாம். நான் அதன் பேரில் ஒரு ஒலிநாடாவை தயாரித்து, அது எங்குள்ளது என்பதை உங்களுக்கு சபையில் காண்பிக்க விரும்புகிறேன்; ஆனால் நான் கர்த்தரால் ஏவப்படும் வரைக்கும், அதைக் குறித்து ஒன்றையும் சொல்ல மாட்டேன். இப்படிப்பட்ட காரியங்களில் நான் கர்த்தரால் ஏவப்பட வேண்டுமென்று உணருகிறேன்; நான் ஏவப்படாமல் போனால், நான் நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக சேதத்தை விளைவிப்பேன். பாருங்கள்?
202. இப்பொழுது இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். கேள்வி: "ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை விவாகம் செய்து கொண்ட பிறகு, அவள் அவனை விவாகரத்து செய்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ளலாமா? இருவருமே வேறொருவரை விவாகம் செய்து கொண்டால், அவர்கள் இருவருமே விபச்சாரம் செய்கிறவர்களாகி விடுவார்களா?" இப்பொழுது, என் நண்பனே, உங்கள் மனதை நோக வைக்க நான் விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை . "தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்" என்று இயேசு கூறியுள்ளார் (மத். 5:32). பாருங்கள்? அதை நான் கூற விரும்பவில்லை, ஆனால் அதுதான் உண்மை...
203. "இது சர்ப்பத்தின் வித்துடன் இணையும் என்று நீர் கூறினீர்". பாருங்கள்? நான் அவ்விதம் கூறினதாக எனக்கு ஞாபகமில்லை. நான் ஒருக்கால் எங்காவது கூறியிருக்கக் கூடும், அதைக் குறித்து ஏதாவது கூறியிருக்கக் கூடும்.
204. அன்றொரு நாள், நான் ஒன்றைக் குழப்பிக் கொண்டது போல, அதை நான் கேட்க நேர்ந்தது. அது... அதை நான் அந்த நேரமே கண்டுபிடித்து விட்டேன்; அது ஒலிநாடாவில் பதிவாகியுள்ளது. அதை நான் ஒருக்கால் கேட்பேன். நான் ஏழு எக்காளங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, அதை நான் ஏழு எக்காளங்கள் என்று சொன்னேன். நான் பெந்தெகொஸ்தே பண்டிகையை குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். பெந்தெகொஸ்தே பண்டிகையிலிருந்து எக்காளப் பண்டிகை வரைக்கும் இடையே ஏழு ஓய்வு நாட்கள். பஸ்கா பண்டிகைக்கும் பெந்தெகொஸ்தே பண்டிகைக்கும் இடையே (பாருங்கள்?) அது ஐம்பது நாட்கள். அதை நான் குறிப்பிட்ட போது, "அது ஏழு சபை காலங்கள்" என்றேன்.
205. ஒலிநாடாவில் (நீங்கள் அந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ள நேர்ந்தால்) - அந்த ஒலிநாடாவில் அது அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து எக்காளப் பண்டிகை வருகிறது, அது ஏழு சபைக் காலங்களைக் குறிக்கிறது என்று இருக்க வேண்டும் - ஏழு மாதங்கள், ஏழு ஓய்வு நாட்கள் அல்ல. ஏழு ஓய்வு நாட்கள் என்பது... அதை நான் அங்கு விளக்கியிருக்கிறேன். நான் ஏழு ஓய்வு நாட்கள் என்று கூறினேன். ஆனால் நான் அதே கருத்தை பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு ஏழு மாதங்களுக்கு பிறகு என்பதற்கும் கொண்டு சென்று விட்டேன். அந்த பண்டிகையின் போது கதிர் கொண்டு வரப்பட்டு அசைவாட்டப்படுகிறது. அப்படியானால் பாருங்கள். இதை ஞாபகம் கொள்ளுங்கள், அந்த நேரத்துக்குப் பிறகு கதிர் அப்பமாக மாறுகிறது. ஒரு கதிர், அதன் பிறகு எல்லாமே அப்பத்துக்குள் சென்று விடுகிறது. ஓ, அதில் பெரிய போதகம் அடங்கியுள்ளது; அதன் ஓரத்தைக் கூட நான் தொடவில்லை. அதை நீங்கள் ஒலிநாடாவில் கேட்க நேர்ந்தால், உங்கள் வேதத்தை திறந்து பாருங்கள் (லேவியராகமம் 23ம் அதிகாரம் - தமிழாக்கியோன்). பாருங்கள், அதற்கு பிறகு ஏழு மாதங்கள் கழித்து. ஏழு மாதங்களை எண்ணுங்கள்: ஜனவரி, பெப்ருவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை - அது ஜூலை மாதம். ஏழு மாதங்கள், அது. ஏழு சபை காலங்கள் முழுவதையும் குறிக்கிறது. ஏதாவதொரு போதகர் அதை கண்டு பிடிக்கக் கூடும், அப்பொழுது குறை கூறப்படுவேன். அங்கு பார்த்தீர்களா? சரி.
206. இப்பொழுது, இதன் பேரில், நாம் ஒருவாறு... நீங்கள்... இதை நான் கூறுகிறேன். இதை நான் கூறட்டும், கர்த்தர் அல்ல, இதை நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் உங்களுக்கு மறுபடியும் விவாகமாயிருந்து, நீங்கள் இருவருமே இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றிருப்பீர்களானால் (இப்பொழுது. இது நான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தர் அல்ல, பாருங்கள்), நீங்கள் தொடர்ந்து ஒன்றாக வாழுங்கள்; சந்தோஷமாயிருங்கள்; ஏனெனில் உங்கள் முதல் மனைவியுடன் நீங்கள் வாழ முடியாது, வாழ முடிந்திருந்தால் இவளை நீங்கள் விவாகம் செய்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இவளை நீங்கள் விட்டு உங்கள் முதல் மனைவியிடம் செல்வீர்களானால், நீங்கள் முதலில் செய்ததை விட இன்னும் மோசமான காரியத்தை செய்பவராகி விடுவீர்கள். பாருங்கள்? எனவே பாருங்கள், நீங்கள் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள், அதிலிருந்து மீள வழியேயில்லை. நான் வேதத்திலிருந்து உண்மையில் ஒரே ஒரு வழியைத் தான் எடுத்துக் கூற முடியும்; நீங்கள் இருவருமே தனியாக வாழுங்கள். பாருங்கள்?
207. இப்பொழுது, ஆனால்... இந்த ஒரு வழியைத் தான் இப்பொழுது நான் கூற முடியும், ஆனால் வேறொரு காரியம் அதில் உள்ளது, அதை இப்பொழுது என்னால் உங்களிடம் கூற முடியாது. "இது கர்த்தர் அல்ல, நான், தொடர்ந்து வாழுங்கள்" என்று நான் கூறக் காரணம். இதை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்ய நேர்ந்து என்றாகிலும் ஒரு நாள், இதைக் குறித்து நான் மறுபடியும் பேச நேர்ந்தால், இதை நான் கூறிய விதத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், அதை நான் எவ்விதம் அப்பொழுது கூறினேன் என்பதை நீங்கள் கேட்டு அறிந்து கொள்ள முடியும் (பாருங்கள்?), அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.