208. நிச்சயமாக, ஆம்! அவர்கள் இயேசுவுடன் வேற்றுமை கொண்டிருந்த போதிலும், அவர் அங்கு சென்றார். போங்கள். "நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?" என்று கேட்கப்பட்டுள்ளதை இங்கு நாம் கவனிக்கிறோம். நிச்சயமாக, நான்... நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நம்புகிறேன். பாருங்கள்? ஆனால் நீங்கள் இங்கு வந்து...
209. அன்றொரு நாள் இது போன்ற ஒன்றைக் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. அரிசோனாவிலுள்ள ஒரு குழு இதைக்குறித்து என் கவனத்தை ஈர்த்தது. போதகர் குழு ஒன்று என்னிடம், "சகோ, பிரன்ஹாமே, உங்களுக்கு விரோதமாக எங்களுக்குள்ள ஒரே ஒரு காரியம் (பல காரியங்களில் ஒன்று என்னவெனில், உங்களுடன் இங்கு வரும் மக்களை, வேறெந்த சபைக்கும் போக வைக்க எங்களால் முடியவில்லை. அவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர், ஆனால் அவர்கள் சபைக்குச் செல்ல மறுக்கின்றனர்; எங்கள் சபைக்கு வருவதற்கு அவர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று நாங்கள் சொன்னபோதிலும்' என்றனர்.
210. நீங்கள் அவர்களுடைய சபைகளில் சேர்ந்து கொள்ள உங்களை வற்புறுத்துகின்றனர் என்பதை அறிவேன், ஆனால் நீங்கள் சேரவேண்டிய அவசியமில்லை; உங்கள் பிள்ளைகளை எங்காவது ஞாயிறு பள்ளிக்கு அனுப்புங்கள். நீங்கள் சபைக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள்.
நீங்கள், "நல்லது. நான் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் ஒருவன் அல்ல (legalist)" எனலாம்.
நல்லது, நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அவமதிக்காமல், சிறிது காலம் அவ்விதம் இருப்பது நல்லது. நீங்கள் எங்காகிலும் சபைக்குச் செல்லுங்கள்.
211. நான் போவேன் என்றால்... எனக்குக் கிடைக்கவில்லை என்றால். நான் விசுவாசிப்பவைகளில் ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் கூறுவதாக நான் அறிந்துள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்கு நான் செல்வேன் என்றால் - அவர்கள் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதாக கூறுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். நான் அங்கு சென்று அவர்கள் அதைக் கூறுவதைக் கேட்பேன். ஒருக்கால் நீங்கள் சொல்லல... அது இந்த சபை, 'அடுத்த சபை பாப்டிஸ்டைப் போல் ஏதோ ஒரு சபை. அவர்கள், “ஆம், உங்களுக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்பது எங்கள் விசுவாசம்" என்று சொன்னால், அதை நான் ஏற்றுக் கொள்வேன். அப்பொழுது நான் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்; அத்துடன் எனக்கு அனுபவம் உண்டாயிருக்க வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். சரி.
212. அதன் பிறகு, அங்கு அசெம்பிளீஸ் ஆப் காட் சபை உள்ளதென்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர்கள்விசுவாசிப்பது என்னவெனில்... பாருங்கள், நான் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து இப்பொழுது மூன்று அல்லது நான்கு 'ஸ்லைஸ்' ரொட்டி சாப்பிட என்னால் முடிகிறது. பாருங்கள்? ஏனெனில் அவர்களால் விசுவாசிக்க முடிந்தது...
213. அன்றொரு நாள் இதே நபர் என்னிடம் வந்து அதைக் குறித்து அறிய விரும்பினது போல. அவர், "நீங்கள் சொன்னீர்கள்..." என்றார் (அங்குள்ள இந்த போதகர். அங்குள்ள இந்த ஆள் அதை விவாதிக்க விரும்பினார். பாவம் சகோதரன், அவர் அப்படிப்பட்ட ஒரு மாயையில் இருக்கிறார்). அவர், "நல்லது. சகோ. பிரன்ஹாம் அசெம்பிளில் ஆப் காட் சபையாகிய உங்களுக்கு விரோதமாய் இருக்கிறார்" என்றார். இதை அசெம்பிளீஸ் போதகர் யாராகிலும் கேட்க நேர்ந்தால், நான் எப்பொழுது அசெம்பிளீஸ் ஆப் காட் மனிதருக்கு விரோதமாகவோ, அல்லது வேறெந்த மனிதருக்கும் விரோதமாகவோ இருந்திருக்கிறேன் என்று நீங்கள் என்னிடம் கூறும்படி விரும்புகிறேன். ஏன் அவ்விதமான கருத்து? நான் கிறிஸ்துவுக்காக பெற்றெடுத்த என் ஏழரை லட்சம் பிள்ளைகளை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன் என்று உங்கள் தலைமை அலுவலகமே ஒப்புக் கொண்டுள்ளதே. அப்படியிருக்க, நான் அசெம் பிளீஸ் ஆப் காட் சபைக்கு விரோதமாயிருக்கிறேன் என்று கூறுவது எப்படி? நான் ஏன் ஒருத்துவக்காரருக்கு விரோதமாக இருக்கப் போகிறேன்? நான் ஒருத்துவக்காரருக்கோ, அசெம்பிளீஸ் ஆப் காட் சபைக்கோ, சர்ச் ஆப் காட் சபைக்கோ விரோதமானவன் அல்ல! மனிதரைப் பிரிக்கும் ஒவ்வொரு முறைமைக்கும் நான் விரோதமானவன்!
214. பாருங்கள், நான் அசெம்பிளீஸ் சபைக்கு அவர் களுடைய எண்ணிக்கையின்படியே, என் பிள்ளைகளில் ஏழரை லட்சம் பேரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அவ்வளவு கெட்டவர்களாக இருந்தால், நான் ஏன் அதை செய்ய வேண்டும்? ஏன்? அவர்களை ஒருத்துவக்காரரிடமோ அல்லது பெந்தெகொஸ்தே விசுவாசம் கொண்டுள்ள யாரிடமோ அனுப்புவதே மிகவும் சிறந்தது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளனர், இயற்கைக்கு மேம்பட்டவைகளில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் அவர்கள் விசுவாசம் கொண்டுள்ளனர். அதுவே சிறந்தது. அவர்கள் எல்லோரையும் என்னால் இங்கு கொண்டு வரமுடியாது; அவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். எனக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் உள்ளனர் - நான் கிறிஸ்துவுக்காக . பெற்றெடுத்த பிள்ளைகள். அவர்களை மிகச் சிறந்த சபைக்கு அனுப்புகிறேன்... நான் பீட அழைப்பு கொடுக்கும் போது, நான் கூறுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நான் கூறுவது என்னவெனில்... அவர்களை எழுந்து நிற்கச் செய்து, அவர்களை இரட்சிப்படையச் செய்த பிறகு, நான், "உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல" முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவது வழக்கம். அவ்விதம் நான் கூறுவதை உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, நிச்சயமாக நல்லது. அப்படியானால் நான் ஏன் அவர்களை அங்கு அனுப்ப வேண்டும்? என் சொந்த பிள்ளைகளை மரணத்துக்கு அனுப்ப நான் என்ன மாய்மாலக்காரனா? அது எனக்கு தூரமாயிருப்பதாக. இல்லை, ஐயா!
215. உங்களால் போக முடியாவிட்டால்... உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்து கொண்டு அங்கு போங்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ரொட்டியின் எந்த பாகத்தைப் பரிமாறுகிறார்களோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்கு பூண்டு (garlic) இருக்குமானால், அதை விட்டு விடுங்கள். பாருங்கள்? அது உண்மை. அவர்களைச் செய்ய வைக்க என்னால் முடியாது, ஆனால் அது தான் முற்றிலும்... நிச்சயமாக, நீங்கள் சபைக்குப் போங்கள். சபை கதவு எங்கு திறவுண்டாலும், நீங்கள் முடிந்த வரையில் அங்கு விரைந்து செல்லுங்கள். அவர்கள் விசுவாசிக்காமல் போனால், நல்லது... இப்பொழுது. நீங்கள் பங்கு கொள்ள வேண்டியதில்லை. அவர்களைச் சேராதீர்கள், அந்த சபைகளில் ஏதொன்றையும் சேர்ந்து கொள்ளாதீர்கள்; ஆனால் அவர்களிடம் செல்லுங்கள்; அவர்களிடம் ஐக்கியம் கொள்ளுங்கள். அது கர்த்தருடைய சித்தம் அல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்வாரென்று அவர் கூறியுள்ளார். ஒருக்கால் இரட்சிக்கப்பட வேண்டிய ஒரு ஆத்துமா அங்கு இருக்கக் கூடும். அப்படிப் பட்டவர்களுக்கு நீங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யலாம். பாருங்கள்? அங்கு செல்லுங்கள். அப்பொழுது ஜனங்கள், "அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்மணி, அவர்கள் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ தம்பதிகள்; அவன் மிகவும் ஒரு நல்ல கிறிஸ்தவ பையன், அவள் மிகவும் நல்ல கிறிஸ்தவ பெண்" என்று சொல்ல முற்படுவார்கள். "என்னே, அவர்களுடன் சம்மந்தம் கொள்ள எனக்குப் பிரியம். அவர்களுக்கு ஏதோ ஒன்று உள்ளது போல் அவர்கள் உண்மையில் நடந்து கொள்ளுகிறார்கள். அது என்ன? என்பார்கள்.
அப்பொழுது நீங்கள் "இதுதான் அது" என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் உப்பாயிருங்கள், அப்பொழுது அவர்களுக்கு தாகமுண்டாகும்.