216. என் சகோதரனே, என்னை உங்கள் சகோதரனாக பாவிப்பதற்காக உமக்கு நன்றி. அது மிகவும் நல்ல ஒரு கேள்வி என்று நான் நினைக்கிறேன். நண்பர்களே, ஆம், இந்த விஷயத்தில் நாம் சிறிது தளர்ந்திருக்கிறோம். கூடுமானால் இதைக் குறித்து சற்று நீண்ட நேரம் பேச எனக்கு விருப்பமுண்டு. பாருங்கள்? அது தளர்ந்துள்ளது. பாருங்கள்! உங்களில் சிலர். பாருங்கள்? ஒரு அனுபவத்தை பெறாமல், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இப்பொழுது, நீங்கள் வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பீர்களானால்... நீங்கள் ஒவ்வொரு எழுத்தின் உறுப்பையும் விசுவாசிப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் வார்த்தையானது அங்கு கிடந்து பரிசுத்த ஆவி அதை செயல்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறது; அந்த மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க வேண்டியதாயுள்ளது.
217. இங்கு திரியுடன் கூடிய மெழுகுவர்த்தி உள்ளது. மெழுகுவர்த்திக்கு வேண்டிய மெழுகும் அதற்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது. ஆனால் நெருப்பு அதன் மேல் வைக்கப்பட்டு அது கொளுத்தப்படும் வரைக்கும், அது எந்த ஒளியையும் தராது. அந்த மெழுகுவர்த்தி எவ்வளவு முழுமையாக இருந்தாலும், அது எவ்வளவு நன்றாக எரியக் கூடியதாயிருந்தாலும், அது கொளுத்தப்பட வேண்டும், அப்பொழுது அது எரிகிறது. நீங்கள் விசுவாசித்து, பரிசுத்த ஆவி என்னவென்றும் அது கொடுக்கக் கூடிய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம் ஆகியவைகளைக் குறித்து நீங்கள் போதிக்கப்பட்டு அறிந்திருந்த போதிலும், அக்கினி அனுபவத்துடன் பரிசுத்த ஆவி இறங்கி வந்து அந்த மெழுகுவர்த்தியை பற்ற வைக்காவிட்டால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வில்லை. பாருங்கள்? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க, அந்த அனுபவத்தைக் கொண்டவர்களாயிருக்க வேண்டும்.