218. சரி. தொழிற்சங்கத்தைக் குறித்து: உங்கள் வேலையைக் குறித்து எனக்குத் தெரியும்... உங்களுக்கு தொழிற்சங்கங்களும் மற்றவைகளும் உள்ளன. நீங்கள் வேலையில் நிலைத்திருக்க வேண்டுமானால், அதில் சேர்ந்திருக்க வேண்டும். அது முற்றிலும் உண்மை. அதை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் கவனமாயிருங்கள் (பாருங்கள்?), ஏனெனில் இந்நாட்களில் ஒன்றில் அது தொழிலிலிருந்து மதத்துக்கு வந்துவிடும். பாருங்கள்? எல்லாமே 'யூனியன்' ஆவதற்கு அது ஒரு முன்னோடி என்பதை ஞாபகம்கொள்ளுங்கள். உங்களால் வேலை செய்ய முடியாது; நீங்கள் வேலையில் நிலைத்திருக்க அவர்கள் விடமாட்டார்கள். நீங்கள் இந்த யூனியனில் சேர்ந்திருந்தாலொழிய, நீங்கள் அவர்கள் வேலை நிறுத்தம் செய்யும்போது மட்டும் வேலை செய்பவராக (scab) ஆகி விடுவீர்கள்.
219. இப்பொழுது. இளைஞர்களே, சகோ. பிரன்ஹாம் கூறுவதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என் சொற்கள் இரும்பு பேனாவில் இரும்பு மலையின் மேல் பொறிக்கப்படட்டும். கர்த்தர் உரைக்கிறதாவது, அதே காரியம் மத விஷயத்திலும் நிகழும். நீங்கள் ஏதோ ஒரு விதமான ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் கொள்ளவோ விற்கவோ முடியாது. எனவே மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள், சகோதரனே. அது தொழிலோடு மட்டும் இருக்கட்டும். அதை கவனித்து வாருங்கள். இது ஒரு எச்சரிக்கை!