220. "யூதாஸ்காரியோத்தின் பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டதா? அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் முதற்கண் இடம் பெற்றிருந்ததா?" ஆம், அது இடம் பெற்றிருந்து, பின் கிறுக்கப்பட்டது. பாருங்கள்? ஏனெனில் மத்தேயு 10ம் அதிகாரத்தில் இயேசு யூதாஸையும் மற்றவர்களையும் அழைத்து அவர்களுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். இயேசு, "சாத்தான் வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" என்றார் (லூக் 10:18). அது சரியா? அந்த சீஷர்கள் அனைவரும் சந்தோஷத்தோடே திரும்பி வந்தனர். அவர், "பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்றார் (லுக் 10:20). பாருங்கள்? அது உண்மை. யூதாஸ்காரியோத்தும் அவர்களுடன் கூட இருந்தான். பாருங்கள்?
221. எனவே ஞாபகம் கொள்ளுங்கள், நியாயத்தீர்ப்பின் போது, கவனியுங்கள். நியாயாசனத்தில், "நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அதன்படியே ஒவ்வொரு மனிதனும் நியாயத்தீர்ப்படைந்தான் (தானி. 7:10; வெளி, 20:12).
222. இப்பொழுது பார்த்தீர்களா, சற்று முன்பு நாம் பார்த்த கேள்வி. பாருங்கள்? நியாயாசனத்தில் இயேசு - மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டு மகிமையில் பிரவேசித்து. கலியாணம்செய்தவளாய் பூமிக்குத் திரும்ப வந்து, ஆயிரம் வருடம் வாழ்கிறாள். ஆயிரம் வருடம் முடிவடையும் போது, சாத்தான் தன் காவலிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையாகிறான். அவன் ஒரு தேவதூதனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான் - இரும்பு சங்கிலியினால் அல்ல, சூழ்நிலை என்னும் சங்கிலியினால், அவனுடைய பிரஜைகள் அனைவரும் நரகத்தில் இருந்தனர். பூமியில் உயிரோடெழுப்பப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டு இயேசுவோடு கூட இருப்பார்கள். இந்த ஆயிர வருட காலத்தில், சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதன் முடிவில், இரண்டாம் உயிர்த்தெழுதல்... முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தமுள்ளவனுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை " (வெளி. 20:6).
223. இப்பொழுது கவனியுங்கள், இந்த இரண்டாம் உயிர்த்தெழுதலில் அவர்கள் உயிரோடெழுகையில், சாத்தான் தன் காவலிலிருந்து கொஞ்சக் காலம் விடுதலையாக்கப்படுகிறான்; பிறகு நியாயசங்கம் உட்கார்ந்தது. இப்பொழுது கவனியுங்கள், இயேசு மணவாட்டியுடன் கூட, ராஜாவும் ராணியுமாய் சிங்காசனத்தில் அமருவார்கள், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன - பாவிகளின் புத்தகங்கள். ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அப்பொழுது ஒவ்வொருவரும் அதன்படி மணவாட்டியினால் நியாயத்தீர்ப்படைகின்றனர். "அறியீர்களா (சட்டத்திற்கு முன்பாக இந்த சிறு விவகாரங்களை கொண்டு போய்) பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?" (1 கொரி 6:2). பாருங்கள், பாருங்கள்? சரி.