45. ஆகவே இப்பொழுது அடுத்ததாக, மிருகம்... அல்லது, இது கூறுகின்ற அடுத்த காரியம்:
46. இது - இது அதனுடன் சேர்ந்த ஒரு கேள்வியாகும், இதைக் கேட்ட நபர் ஒரு நல்ல கேள்வியைக் கொண்டிருக்கிறார். இப்பொழுது... கத்தோலிக்க சபை தான் அந்த – அந்த மிருகம் என்று வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. மிருகம் என்றால் “வல்லமை” என்று அர்த்தம் என்று வேதாகமம் கூறுகின்றது. அது சரியா? மிருகம், மிருகம் என்றால் வல்லமை என்பதுதான் அதன் அர்த்தமாகும் என்றே வேதம் கூறுகின்றது. ஆகவே மிருகம் “வாடிகன் நகரம்”, “கத்தோலிக்க குருக்களாட்சி” ஆகும். அது சரி. ஆகவே இப்பொழுது, அது தான் மிருகம் என்பதாயிருந்த சபையின் வல்லமையாகும்.
47. பிறகு பிராடெஸ்டென்ட் சபை கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்து தங்களைத் தாங்களே ஸ்தாபித்துக் கொண்டனர், அது ஒரு சிறிய வல்லமை. அது தான் சொரூபமாகும்.
48. ஏதாவது... ஏதோ ஒன்று என்னுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்டிருக்குமானால், அது என்னைப் போலத்தான் காட்சியளிக்க வேண்டும். இந்த சபையின் சாயலின்படி ஏதோ ஒன்று உண்டாக்கப் பட்டிருக்குமானால், அது சபையைப் போன்று தான் காணப்படவேண்டும்.
49. ஏதோ ஒன்று செய்யப்பட்டது, ஒரு மிருகம்... மிருகத்திற் கென்று ஒரு சொரூபம் உண்டாக்கப்பட்டது, அது லூத்தர் - கொள்கை, மெத்தொடிஸ்டு - கொள்கை, பாப்டிஸ்டு - கொள்கை, பெந்தெகொஸ்தே - கொள்கை, பரிசுத்தர்- கொள்கை, இந்த எல்லா கொள்கை, (ism) இசம்களும், ஒரு ஸ்தாபனமாக உருவாகிக் கொண்டு, மிருகத்தைப் போலவே ஒரு சொரூபத்தை உண்டாக்கினது. இதோ அது இங்கேயுள்ளது.
50. “அப்படியானால் சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் கூற முனைவதென்னவென்றால், எல்லா கத்தோலிக்கர்களும் எல்லா மெத்தோடிஸ்டுகளும், எல்லா பாப்டிஸ்டுகளும் எல்லாம்...?” நான் அதைக் கூறவில்லை.
51. ஆயிரம், ஆயிரம், பத்தாயிரங்கள் கணக்கான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் அந்த சபைகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஸ்தாபனங்களில், அவர்கள் அவர்களை ஒரு போதனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர், அவர்கள் அதற்கு நிற்கமாட்டார்கள். ஒரு-ஒரு சபை, அது ஸ்தாபித்து கொள்ளும் போது, அது ஒரு போதகத்தின் கீழ் வந்து விடுகின்றது.
52. வேதாகமத்தை தவிர வேறு எந்த ஒரு போதகமும் என்னிடம் கிடையாது. இதுதான் தேவனுடைய போதகமாகும், பரிசுத்த ஆவியானவர் அதனுடைய வியாக்கியானி ஆவார், அவர் ஒரு வெளிச்சத்திலிருந்து மற்றொரு வெளிச்சத்தை அவர் கொண்டு வருகிறார். இன்று நான் பிரசங்கிக்கும் சுவிசேஷம், நான் இன்னும் நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேனானால், அப்படியிருக்குமானால், இன்னும் அதிகமான வெளிச்சம் இருக்கும். அது மாற்றமில்லாமல் எப்பொழுதுமே அதே விதமாக வந்திருக்கிறது.
53. உன்னுடைய பெரிய - முப்பாட்டனார் பாட்டியை பார்க்கச் சென்ற போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தார், அப்பா, அம்மாவை பார்க்க டி - மாடல் காரில் சென்றார். இப்பொழுது நாம் ஏறக்குறைய ஜெட் விமானத்தில் செல்கிறோம். பாருங்கள், நாம் முன் சென்று கொண்டேயிருக்கிறோம்; விஞ்ஞானம், முன் சென்று கொண்டேயிருக்கிறது. கல்வி முன் சென்றுக் கொண்டிருக்கிறது. சுவிசேஷமும் அவ்விதமே முன் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே வேதாகமும் அவ்விதமாக இருக்கும் என்று கூறுகிறது, “அவர்கள் இங்கும் அங்கும் ஓடுவார்கள், அறிவும் பெருகிப்போம்.” ஆகவே அதுதான் அந்த இணைப்பு. அதன் காரணமாகத்தான்...
54. பிராடெஸ்டென்ட் ஸ்தாபன சபைகளும் கூட மிருகத்தின் சொரூபம் தான், ஏனெனில் அது கத்தோலிக்க கொள்கை போல முற்றிலும் சரியாக ஸ்தாபித்து கொண்டது. தம்முடைய சபையானது எந்த காலத்திலும் ஸ்தாபித்து கொள்ள வேண்டுமென்று தேவன் கட்டளையிடவேயில்லை, ஆனால் அவர் அதை எப்பொழுதுமே கடுமையாக கடிந்து கொண்டார்! இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா? [சபையார் “ஆமென்” என்கின்றனர். - ஆசி] ஜனங்கள் அல்ல; சபை!
55. அவர்கள் ஜனங்களை ஒரு-ஒரு வெளிச்சத்தின் கீழ் கொண்டு வர முயன்ற போது... இங்கே, ஜனங்கள் உங்களை மாட்டு வண்டியில் சுற்றி வரச் செய்ய முயன்றால் எப்படியிருக்கும்? உங்களால் அதை வரவேற்கமுடியாது; நாம் இன்னும் மேலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே அப்பொழுது இருந்த வழியும் இதுவே ஆகும். எவராவது என்னிடம் “ஓ, நீர் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் இது, அது” என்று கூற முயன்றால். நானோ வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! நான்... ஊழியக்காரர்களுடன் அது தான் ஒரு தொந்தரவாக இருக்கின்றது, அவர்கள் எப்பொழுதுமே பின்நோக்கிப் பார்க்கின்றனர்.
56. இங்கே, ஒரு பிரஞ்சு விஞ்ஞானி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், “ஒரு மனிதன் மணிக்கு முப்பது மைல் வேகத்திற்கு மிக வேகமாக சென்றால், புவியீர்ப்பானது அவனை பூமியிலிருந்து எடுத்துச்சென்று விடும். மணிக்கு முப்பது மைல்!” என்று கூறினார். நல்லது, விஞ்ஞானமானது இன்றைக்கு அதை பின்னால் சென்று குறிப்பிடுமா? அது அப்படி அல்ல! இல்லை, ஐயா. அவனை மணிக்கு ஒன்பது அல்லது பத்தாயிரம் மைல் வேகம் செல்லும் அளவிற்கு செய்துள்ளனர். ஆம், சிலசமயங்களில் ஒரு ராக்கெட்டில், இன்னுமாக மணிக்கு ஆயிரத்து அறுநூறு மைல்கள் வேகமாக இருக்கின்றது. அது இன்னுமாக அவனை முன்னே கொண்டு சென்று கொண்டிருக்கிறது!
57. விஞ்ஞானம் மனிதனை, முன்னே, இன்னும் முன்னே கொண்டு சென்றிருக்கிறது, அவனுடைய மனதிலுள்ளதைக் காட்டிலும் மகத்தான காரியங்கள்... ஆகவே அவன் ஒரேயொரு காரியத்தை, அறிவின் விருட்சத்தைக் கொண்டிருக்கிறான். ஊழியக்காரர் அளவில்லாதிருக்கின்ற அவருடைய ஆவியால் அவனை கொண்டு சென்றதைப் பார்க்கிலும் இன்னுமாக மேலே கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அது என்னவென்பது இதோ இருக்கிறது. விஞ்ஞானம் சில வருடங்களுக்கு முன்னால் என்ன கூறினது என்பதை விஞ்ஞானமே திரும்பி பார்ப்பதில்லை; விஞ்ஞானமானது இப்பொழுது எதை அவர்கள் கொண்டிருக்கிறார்களோ அதை எடுத்து, வேறு ஒன்றிற்காக அது முன்னே சென்று கொண்டிருக்கிறது.
58. “நல்லது, அதைக் குறித்து மூடி என்ன கூறினார் என்று பார்ப்போம், அதை குறித்து வெஸ்லி என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்” என்று நீ ஒரு பிரசங்கியை கேட்கிறாய், அவர்கள் அதைக்குறித்து என்ன கூறியிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. அதைக் குறித்து இப்பொழுது தேவன் என்ன கூறியிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அது தான். இன்னும் மகத்தானவற்றிற்காக நான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அது தான் அதன் காரணமாக...
59. வேதாகமம், “மிருகத்தின் வாயிலிருந்து மூன்று அசுத்த ஆவி புறப்பட்டு வந்தது” என்று கூறுகிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? “அசுத்த ஆவிகள்”, “தவளைகளுக்கு ஒப்பானவை” என்றது. தவளை எப்படி பார்க்கிறது என்று எவராவது கவனித்திருக்கிறீர்களா? தவளை எப்பொழுதுமே பின்நோக்கித்தான் பார்க்கும், அது முன்நோக்கி பார்க்காது: பின்நோக்கி பார்க்கும், எப்பொழுதுமே பின்புறமாக, பின்நோக்கி பார்க்கும்.
60. ஆனால் எசேக்கியேலில், நான்கு வித்தியாசமான தலைகளைக் கொண்டிருந்த நான்கு ஜீவன்கள், அவைகள் நேர் முகமாக பார்த்துக் கொண்டிருந்தன, அவைகளால் பின்னால் செல்ல முடியாதிருந்தது. அவைகள் எப்போழுதுமே நேர்முகமாகச் சென்று கொண்டிருந்தன. அவைகள் எங்கு சென்றாலும் இவைகள் நேர்முகமாகச் சென்று கொண்டிருந்தன. வித்தியாசத்தை பாருங்கள்?
61. இப்பொழுது, அதுதான் பிராடெஸ்டென்ட் கொள்கை கத்தோலிக்க கொள்கையுடன் கொண்டிருக்கின்ற தொடர்பாகும்.
62. ஆகவே நீங்கள் எல்லோரும் கத்தோலிக்கரையே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் “பானை கைப்பிடி வைத்த வெந்நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை “கறுப்பு” என்று அழைக்க முடியாது”. அது சரி.
63. “நீ ஒரு கிறிஸ்தவனா?” என்றால்.
64. “நான் உங்களுக்கு விளக்கி கூறவேண்டுமானால் நான் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவன்.” ஆமாம். அவ்விதமாக நீ கூறுவது அதனுடன் ஒரு சம்பந்தமுமில்லை. நீ அங்கே இருக்கின்ற... எங்கோ ஒரு பண்ணையைச் சேர்ந்தவன் என்று கூட கூறிவிடலாம்.
65. “ஏன், நான் கத்தோலிக்க சபையை சேர்ந்தவன்.” அது இன்னுமாக உன்னை ஒரு கிறிஸ்தவனாகச் செய்வதில்லை. பாப்டிஸ்டு அல்லது மெத்தோடிஸ்ட் சபையைச் சேர்ந்திருந்தாலும் உன்னை ஒரு கிறிஸ்தவனாக ஆக்குவதில்லை.
66. ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கிறிஸ்தவன் என்கிற வார்த்தைக்கு “கிறிஸ்துவைப் போல்” என்று அர்த்தம். அதை உன்னால் செய்ய முடியவில்லை என்றால், உனக்குள்ளாகவே அதை உன்னால் கிரியை செய்ய முடியவில்லையென்றால், அதைச் செய்ய உனக்கு ஒரு வழியும் கிடையாது. நீ உன்னைத் தானே மறக்க வேண்டும், உனக்குத்தானே நீ மரிக்க வேண்டும், கிறிஸ்து உனக்குள் வந்து உனக்குள் கிறிஸ்துவின் ஜீவியத்தை செய்ய விட வேண்டும்.
67. “ஒருவன்...” இங்கே இயேசு, “ஒருவன் ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறவாவிட்டால் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க மாட்டான்” என்று கூறினார். அவன் ஒரு கத்தோலிக்கன், மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் அல்லது என்னவாயிருந்தாலும் உங்கள் பாவம் மன்னிக்கப்படுவதற்கு தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள். அது இயேசுவின் சொந்த வார்த்தையாகும். ஆகவே இப்பொழுது நீங்கள் மெத்தோடிஸ்டாக இருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று, தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள் என்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் ஒரு கத்தோலிக்கராக இருந்து அதே காரியத்தை செய்துள்ளீர்களானால், நீங்கள் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள்.
68. ஆனால் நீங்கள் அந்த கத்தோலிக்க சபை அல்லது மெத்தோடிஸ்ட், அல்லது பாப்டிஸ்ட் சபையின் போதகத்தை விடாமல் பிடித்து கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இன்னுமாக இழந்து போகப்பட்ட நிலையில் உள்ளீர்கள். அதன் காரணமாகத் தான் இன்றைக்கு உலகத்தின் நிலையை இப்படியாக நாம் கொண்டிருக்கிறோம், ஏனெனில் ஜனங்கள் சரியாக... அவர்கள், “அது என்னுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது” என்கின்றனர்.
69. “தெய்வீக சுகமளித்தலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”
70. “அது எங்களுடைய மத உணர்ச்சிக்கு எதிரானது.” அது உங்கள் சபைக்கு எதிரானது; உங்கள் சபை போதகம் அவ்விதமாக அதை உருவாக்கியுள்ளது, பாருங்கள், சபை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு நீங்கள் கத்தோலிக்கரை நோக்கி கூச்சலிடுகிறீர்கள்; அதே காரியத்தை தான் அவர்களும் செய்கின்றனர். ஆகவே அதுதான் மிருகம் மற்றும் மிருகத்தின் சொரூபம் ஆகும்! வேதாகமம் கூறுகிறது, “அதை எடுத்துக் கொள்கிறவன் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது, ஆனால் நாய்களும், சூனியக் காரரும், இன்னும் பலர் இருக்கிற இடத்தில் தள்ளப்பட்டு அக்கனியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவார்கள். பரிசுத்த தூதர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் பிரசன்னத்தில் என்றென்றுமாக வாதிக்கப்படுவார்கள்”. நண்பனே! அதை விட்டு வெளியே வா, தேவனோடு சரியாக இருந்துகொள்! ஆம், ஐயா.
71. இப்பொழுது இதை நான் பார்க்கட்டும். நல்லது, அவைகளை நாம் முடித்துவிடுவோம். இப்பொழுது, யாரோ ஒருவர் இன்று என்னிடம் கேட்டார்; இரண்டு அல்லது மூன்று முறைகள் என்னிடம் கேட்கப்பட்டது.