இல்லை, இல்லை. அவர்கள் மணவாட்டியே. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள்...
225. நீங்கள், "அவர்கள் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்கள்" என்று கூறுகிறீர்கள், இப்பொழுது, நீங்கள், "இவர்கள் மிருகத்தை வணங்கவில்லை" என்று கூறுகிறீர்கள். நிச்சயமாக! நீங்கள், "மிருகம் இனியல்லவா வரப்போகிறான்" என்று கேட்கிறீர்கள்.
226. மிருகம் எப்பொழுதுமே இருந்து வருகிறான். மிருகம் தான் அவர்களை கெபியிலும் ரோமாபுரியிலிருந்த அரங்கத்திலும் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்தான். அது அந்திக்கிறிஸ்து; அங்கு மிருகம் ஒருவிதமான மதத்தை உருவாக்கினான். அது சரியாக ஏறக்குறைய ஒரு மாதிரி. ரோம சபையானது வேதத்திலிருந்து விலக்கப்பட்டது. அதன் பிறகு... அவர்கள் அதை செய்தபோது, அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாகச் செய்து, ஒரு நிறுவனத்தை உண்டாக்கி, அதை உலகம் முழுவதுமுள்ள ஸ்தாபன சபையாக்கினார்கள். அதை வணங்காத அனைவரும் நிர்மூலமாக்கப்பட்டனர். பாருங்கள்? அதுதான்.
227. அவர்கள் அப்பொழுது இருந்த மணவாட்டியின் ஒரு பாகம்... இப்பொழுது சரீரமானது ஒரு மரத்தைப் போல் வளர்ந்து, தலைக்கு வந்துவிட்டது. பாருங்கள்? எல்லோருமே - துன்புறுத்தப்பட்டு இரத்த சாட்சிகளாக மரித்தவர்களும் மற்றவர்களும்...
228. ஆனால் இயேசு நதியின் இக்கரையில் நமக்கு சமாதானத்தை அருளியிருக்கிறார், அந்த கோத்திரங்களுக்கு செய்தது போல... அவர்கள் (பாருங்கள்?) கடந்து செல்லவில்லை. இப்பொழுது.