ஆம், என் சகோதரனே... அவன் பெயர் அங்கு எழுதப் பட்டுள்ளது. யாரென்று எனக்குத் தெரியவில்லை... இந்த கேள்வி, "சகோ. பிரன்ஹாமே..." என்று தொடங்கி, "அவருக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறது.
229. இது ஏதோ ஒரு பையன் தன் தந்தையைக் குறித்து கேட்ட கேள்வி. பார், என் அருமை சகோதரனே, உன் தந்தையை நீ கவனித்துக் கொண்டால் பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் உன்னை கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் நீ இருந்த போது, உன் தந்தை உன்னை கவனித்துக் கொண்டார். முதலாம் கற்பனை ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ளது: "பூமியில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு - கர்த்தர் நீடித்த நாட்களை உனக்குக் கொடுப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக". பார்? உன்னால் முடிந்த எந்த விதத்திலாவது உன் தந்தைக்கு உதவியாயிரு. அவர் மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொள்கின்றாரா என்பதைப் பார்த்துக் கொள்.