முதலாவதாக, நான் மேசியா அல்ல! பாருங்கள்? மேசியா இயேசு கிறிஸ்துவே. ஆனால் நாம் "குட்டி மேசியாக்கள்' (Messiahottes), நாம் ஒவ்வொருவரும். மேசியா என்றால் “அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது; எனக்குள்ளோ அவருடைய ஆவியின் ஒரு பாகமே வாசமாயுள்ளது. அதுவே உங்களுக்குள்ளும் வாசமாயுள்ளது. சில காரியங்களை அறிந்து கொள்ள, முன்கூட்டியே காண எனக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் உங்கள் சகோதரனே. பாருங்கள் நான் மேசியாஅல்ல; நான் உங்கள் சகோதரன் (பாருங்கள்?), மந்தைக்கு ஒரு மேய்ப்பன் மாத்திரமே. நான் மேசியாவென்று உங்களிடம் கூறுவேனானால், நான் ஒரு பொய்யனாயிருப்பேன். பாருங்கள்? நான் பொய்யனாயிருக்க விரும்பவில்லை.
233. "முதல் முறை நான் ஏன் அரிசோனாவுக்குச் சென்றேன்?" அதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். நான் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றேன், ஏனெனில் ஒரு தரிசனத்தின் மூலமாக அங்கு நான் அனுப்பப்பட்டேன். நான் இரண்டாம் முறை அங்கு சென்றது ஒரு நோக்கத்துக்காகவே. அதை பற்றி ஒன்றும் கேட்காமல் தனியே விட்டு விடுங்கள். நான் எதற்காகப் போனேன் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் என்னால் கூற இயலாது. நீங்கள் - பிசாசுக்குத் தெரியாது - என் இருதயத்திலுள்ளதை அவனால் அறிந்து கொள்ள முடியாது. அதை நான் வெளிப்படையாகக் கூறினால், அப்பொழுது அவனால் அறிந்து கொள்ள இயலும், ஆனால் என் இருதயத்தில் உள்ள வரைக்கும் அவன் அறிந்து கொள்ள மாட்டான், அவனால் அறிந்து கொள்ள இயலாது. “அது நிறைவேறும் வரைக்கும் காத்திருங்கள்" என்று கூறுவேனானால்... ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஒலிநாடாவை வைத்திருங்கள்; ஒரு நோக்கத்துக்காகவே நான் அரிசோனா சென்றிருக்கிறேன். என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்ய நான் கூறுவதை மட்டும் செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். பாருங்கள்?