234. அது பொய். பாருங்கள்? உ.- ஊ!... அல்லது நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா?
235. இல்லை, ஐயா! நான் சொல்லவேயில்லை! அவ்விதம் செய்ய வேண்டாம் என்று நான் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினேன். ஊ - ஊ . நான் அங்கு சென்ற சமயத்தில் "ஜூனி" ஜாக்சன் கண்ட சொப்பனம் ஞாபகம் உள்ளதா? "ஜூனி" இதை சொப்பனத்தில் கண்டதாக... எத்தனை பேருக்கு அந்த சொப்பனமும் தேவன் எவ்விதம் அதன் அர்த்தத்தை உரைத்தார் என்பதும் ஞாபகமுள்ளது? அந்த பெரிய மலை, நாங்கள் அதன் மேல் நின்று கொண்டிருந்தோம், அங்கு கலைந்து போன எழுத்துக்கள் இருந்தன. அதற்கு நான் அர்த்தம் உரைக்க முயன்றேன், என்னால் முடியவில்லை. நான் - அவர்களுக்கு நான் அதன் அர்த்தத்தை உரைத்துக் கொண்டிருந்தேன். அதன் அர்த்தம் அனைத்தையும் நான் உரைத்து முடித்த பின்பு, என் கையை நீட்டி (அவருடைய சொப்பனத்தில்) ஒரு விதமான கடப்பாறையை எடுத்து மலையின் உச்சியை உடைத்து உள்ளே பார்த்தபோது, அது பனி வெண்மையாய் இருந்தது, சலவைக் கல் போல். அதில் ஒன்றும் எழுதப்படவில்லை. நான், "நீங்கள் எல்லோரும் இங்கு தங்கியிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருங்கள், நான் போகிறேன்" என்றேன்.
236. அப்பொழுது "ஜூனி... எல்லோரும் மேலே சென்றனர். எல்லா சகோதரர்களும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறொருவர்... அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள். "நல்லது. உங்களுக்கு என்ன தெரியும்? அதில் ஒன்றுமே எழுதப்பட்டிருக்கவில்லை, அவர் வெளியே எழுதப்பட்டிருந்ததை படித்தார். இதில் ஏன் ஒன்றும் எழுதப்பட்டிருக்கவில்லை? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றனர்.
237. ஜூனியர் திரும்பி பார்த்த போது, நான் மேற்கே, சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். நான் ஒரு மலையைக் கடந்து, மற்றொரு மலையைக் கடந்து, மிகவும்வேகமாக சென்று கொண்டிருந்தேனாம். பின்பு அவர்கள் திரும்பிப் பார்த்து நான் போய் விட்டதாக கண்டனர்; அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்த போதிலும், அவர்களில் ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். நான் அவர்களிடம் "அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம்" என்று கூறியிருந்தேன்.
238. அதன் பிறகு, அதை நான் செய்த போது, பிறகு - நான் சரியாக சென்றேன். அதன் பிறகு சிறிது கழிந்து. "கர்த்தருடைய தூதன் எனக்குப் பிரத்தியட்சமாகி, அரிசோனாவுக்குப் போ" என்றார். அந்த வெடிச் சத்தம் அங்கு உண்டானதைக் கேட்டு அங்கு சென்றேன். அது என்ன? அந்த பையன் சரியாக அப்படியே அந்த சொப்பனத்தைக் கண்டு, கர்த்தரும் சரியான... "நான் ஏதோ ஒன்றுக்காக அங்கு செல்கிறேன்" என்று நான் கூறினதை நினைவில் கொள்ளுங்கள். அங்கு நான் சென்ற போது, அது கர்த்தருடைய பர்வதத்தின் உள்ளே முத்தரிக்கப்பட்டிருந்த ஏழு முத்திரைகளின் இரகசியமாயிருந்தது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, நான் திரும்பி வந்தேன். பாருங்கள்?
239. இல்லை, நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. நீங்கள் போக விரும்பினால், அது உங்கள் விருப்பம். ஆனால் நான்... நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை, ஆனால் மணவாட்டி அங்கிருந்து போகப் போகிறாள் என்று எண்ணி, அதற்காக அங்கு செல்வீர்களானால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள்.
240. "மேலும் ஜனங்கள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்... நான் (அந்த கேள்வியை நான் பார்க்கட்டும்... அதை எங்கோ தவறாக கூறிவிட்டேன். அதை பார்க்கட்டும்)... எடுத்துக் கொள்ளப்படுதல். அது உண்மையா? நாங்கள் எங்கள் வீடுகளை விற்க வேண்டுமா, நீர் எப்பொழுதாவது இதைச் சொன்னீரா? இல்லை, நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறவில்லை... ஜனங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கியிருந்து... இயேசு வரும் வரைக்கும் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க நான் ஜனங்களுக்கு எப்பொழுதும் ஆலோசனை கூறினதுண்டு. நான் உங்களிடம் அநேக முறை இதை கூறினதற்கு, இந்த ஒலிநாடா ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கட்டும். இந்த நாள் ஒரு ஞாபகார்த்தமான நாளாயிருக்கட்டும். என் சொல் ஞாபகமூட்டுவதாயிருக்கட்டும். நான் ஒரு முறையாவது நிர்ப்பந்தம்பண்ணினதேயில்லை. நான் ஒருக்காலும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் சொந்த சபையை விட்டு, தங்கள் பொருட்களை விற்கும் படி நான் கூறினதேயில்லை. தேவன் அதை அறிவார். நான். ஜனங்களிடம், தேவன் அவர்களை அழைக்கும் வரைக்கும். அவர்கள் கிறிஸ்தவராக நிலைத்திருந்து, அவர்கள் உள்ள இடத்திலேயே தங்கியிருக்க நான் எப்பொழுதும் ஆலோசனை கூறி வந்திருக்கிறேன்; அது எல்லோருக்கும் தெரியும். அங்கேயே தங்கியிருங்கள்! ஆனால் இப்பொழுதோ, நான் ஜனங்களிடம் இவ்விதம் கூறுவேனானால்... யாராகிலும் ஒருவர், "நான் அங்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன். அங்கு தங்க வேண்டுமென்று..." என்கிறார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், அதனால் பரவாயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் எனக்கு அக்கறையில்லை; அது என் வேலையல்ல.
241. ஆனால் இப்பொழுது, இவ்விதம் எண்ணுவது... பாருங்கள், அது என்ன செய்கிறது? அது ஒரு பிரத்தியேக கொள்கையை (cult) துவக்குகிறது (பாருங்கள்?), அப்பொழுது நான் தொல்லையில் அகப்பட்டுக் கொள்கிறேன். அங்கு ஒரு கூட்டத்தினர் விரைவில் தர்மத்தை நம்பியிருக்கப் போகின்றனர். அது என்னவாயிருக்கும்? "நாங்கள் மணவாட்டியின் எடுத்தக் கொள்ளப்படுதலுக்காக இங்கு வந்திருக்கிறோம்". அதற்காகவே செய்தித்தாள்கள் காத்துக் கொண்டிருந்தன. அவர்கள் தர்மத்தை நம்பியிருக்கத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையை அடைவதை வெளியிட அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்.
242. "நல்லது. நாங்கள் சகோ. பிரன்ஹாமை பின் தொடர்ந்து இங்கு வந்தோம். அவ்விதம் கருதப்பட்டது. அதைக் குறித்து நான் மிகவும் குற்றமற்றவனாயிருக்கிறேன். அருமையான, இனிமையான ஜனங்கள், அவர்களை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர் - அவர்கள் தவறு செய்த போதிலும். அவர்கள்... ஏன், அது அவர்கள். அவர்களை எப்படியும் நான் நேசிக்கிறேன். பாருங்கள்? அவர்களை நான் நேசிக்கிறேன்; அவர்கள் என் பிள்ளைகள்; ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை - அவர்களிடம் நான் சொல்ல முயல்வதை. நான் கர்த்தருடைய நாமத்தில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவர்களோ அதை நான் செய்ய விடுவதில்லை. பாருங்கள்? அவர்கள் என் சார்பில் இருப்பதற்கு பதிலாக உண்மையில் எனக்கு விரோதமாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்வது...
243. எப்பொழுதாகிலும் ஒரு செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால், இது இந்த கூடாரத்தில் தான் பிரசங்கிக்கப்படும்; நான் எதைச் செய்ய வேண்டுமென்றாலும், நான் இங்கு வந்து, உங்களுக்கு முதலில் இந்த கூடாரத்திலிருந்து எடுத்துரைப்பேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? அது என் வாக்குறுதி!