244. நல்லது, அந்த புத்தகம் தவறு. ஜீவ அப்பம் என்னும் தலைப்பு கொண்ட அந்த புத்தகம், அது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அது உலகம் முழுவதும் உள்ள சபையை போஷிப்பதற்காக, எல்லாவிடங்களிலும் பாருங்கள், தொல்லை என்னவெனில்... இப்பொழுது, இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள் திடமாயிருக்கிறீர்கள், ஆனால் இது நடக்க வேண்டும், அது ஒவ்வொரு கூட்டத்தையும் தொடர்கின்றது.
அண்மையில் நான் மார்டின் லூத்தரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன், நம்மை அதனுடன் ஒப்பிடுவதற்காக அல்ல; அதைப் போன்று இதுவும் ஒரு சீர்த்திருத்தமே. கேள்வி என்னவெனில்... வரலாற்று ஆசிரியர்கள், “மார்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை எதிர்த்துப் போராடி வெற்றி காண முடிந்தது ஆச்சரியமான ஒரு செயல்தான். ஆனால் அதைக் காட்டிலும் மிகவும் ஆச்சரியமான செயல். அவருடைய கூட்டங்களைத் தொடர்ந்த மூட பக்தி வைராக்கியத்துக்கு (fanaticism) மேல் தன் தலையை உயர்த்தி, எப்படி வார்த்தைக்கும் அவருடைய அழைப்புக்கும் அவரால் உண்மையாயிருக்க முடிந்தது என்பதே" என்று எழுதியுள்ளனர். பாருங்கள்?
245. இல்லை, ஐயா! உங்கள் சொந்த கருத்தை... நான். கூறினதில் எந்த மனிதனாவது ஸ்திரீயாவது எதையாகிலும் நுழைத்தால், அதை விசுவாசிக்காதீர்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை... அவர்கள் சொல்கின்றனர்... அவர்கள்...