246. நிச்சயமாக நான் அவ்விதம் செய்யவில்லை. அவர்கள் அதைக் குறித்து எனக்கு கடிதம் எழுதினபோது - கனெக்டிகட்டிலுள்ள யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு இடம் - "நீங்கள் உங்கள் வாழ்நாளிலேயே மிகவும் மோசமான தீர்மானத்தை செய்திருக்கிறீர்கள். அப்படி ஒன்றும் செய்து விடாதீர்கள்" என்று அவர்களுக்கு பதில் கடிதம் எழுதினேன். பாருங்கள், உங்களால் முடியாது. நல்லது, இதை ஞாபகம் கொள்ளுங்கள், ஜனங்களாகிய நீங்கள்... இப்பொழுது, அவ்விதம் செய்ய நான் ஜனங்களிடம் கூறுகிறதில்லை என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்; அவ்விதம் செய்ய வேண்டாமென்று அவர்களிடம் நான் கூறுகிறேன். ஆனால் பாருங்கள், அது கூட்டத்தை தொடர வேண்டியதாயுள்ளது. ஜனங்கள் என்னை மேசியா என்று ஏன் அழைக்கின்றனர்? ஜனங்கள் ஏன்... அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு... அங்குள்ள ஒருவர் அன்றொரு நாள் என்னிடம் ஒன்றைக் காண்பித்தார், அவரிடம் ஒரு சிறு காரியம் இருந்தது, அவர் தொடர்ந்து செய்து கொண்டு, எல்லோரும் என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று ஜனங்களிடம் கூறினார். அது என்னை அந்திக்கிறிஸ்துவாகச் செய்து விடும்! இத்தகைய காரியங்களை நான் ஆதரிப்பவன் அல்ல, ஜனங்களாகிய நீங்கள் அனைவரும் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், இது வரவேண்டியதாயுள்ளது. அது செய்தி உண்மையென்பதை அடையாளம் காட்டுகிறது.
247. அவர்கள் கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான யோவானிடம் வந்து, "நீர் மேசியாதானே" என்று கேட்கவில்லையா?
அவன், "நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவரை நோக்கிப்பார்ப்பதற்கும் கூட நான் பாத்திரன் அல்ல" என்றான். பாருங்கள்? ஆனால் அவன், "எனக்கு பின் ஒருவர் வருகிறார்..." என்றான்.