இல்லை ஐயா! அதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள்.
72. அது ஒரு புறக்கணிப்பாக இருக்கும்! நிச்சயமாக! “எந்த ஒரு மனிதனும் சபைகளின் சங்கத்தை சேர்ந்தவனாக இருந்தாலொழிய அவனால் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது.” அது உண்மை. இப்பொழுது அது ஒரு ஐக்கியம் போல வந்து, காரியத்தை ஐக்கியப்படுத்தி, அதை ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட மார்க்கமாக கொண்டு வரும். என்னுடைய வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள், அது நீண்ட தொலைவில் இல்லை! அவள் அங்கே சற்று அருகாமையில் இருக்கின்றாள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
73. இந்த காரியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாதிருக்கிற காரணம் என்னவெனில், எல்லா நேரத்திலும் நீங்கள் இங்கேயே இருக்கின்றீர்கள். கத்தோலிக்கம் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகளுக்கு, ஒரு தடவை என்னை பின் தொடர்ந்து வாருங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள். சகோதரனே, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற எல்லாவற்றையுமே அவர்களுக்கு அவர்கள் கூறுகின்றனர்.
74. இங்கே தீர்க்கதரிசனத்தில் நாம் கண்டெடுத்தோம், இங்கே வேதாகமம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஒரு ஆட்டுக் குட்டியைப் போல “மதச் சுதந்திரம்” வந்தது, அவர்கள் நேரடியாக அந்த காரியங்களை ஒன்றாக அணைத்தனர், அவன் வலுசர்ப்பத்தைப் போல பேசினான், அவனுக்கு முன்னிருந்த வலுசர்ப்பம் கொண்டிருந்த அதே வல்லமையை அவன் உபயோகித்தான் என்று கூறுகின்றது. அது தான் அமெரிக்க ஐக்கிய நாடுகள்! அது சரி.
75. சிறிது காலத்திற்கு முன்னர் என்னுடைய நண்பராகிய, ஒரு ஊழியக்காரர் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம், தேவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கீழே விழ விடமாட்டார். ஏனெனில் அதனுடைய அடிப்படையானது அதனுடைய முற்பிதாக்கள் மேலே இருக்கிறது, மதத்தின் மேல் உருவாக்கப்பட்டது”, என்றார்.
76. நான், “அவர் யூதர்களையே விட்டு விட்டார்; அவர்கள் கொண்டு போகப்பட்டனர், நாம் கொண்டிருந்ததை விட இன்னும் மேலான ஒரு நிலையை அவர்கள் கொண்டிருந்தனர்” என்றேன். அது சரி. கடந்து சென்ற ஏதோ சந்ததிக்கு தேவன் மரியாதை கொடுப்பவர் அல்ல; ஒன்று வரிசையில் நட அல்லது நீ இராஜ்ஜியத்திலிருந்து வெட்டப்படுவாய், அவ்வளவுதான். உண்மையாக! அது சற்று கடினமான ஒன்றாகும், ஆனால் அது உனக்கு நல்லதாகும். அது சரி. அது வேதவசனம். நாம் கொண்டிருக்கிறோம், நாம்.
77. இன்று சிக்கல் என்னவெனில்... உங்களில் வயது சென்றவர்களுக்கு இது தெரியும். நாம் மிக அதிகமான ஹாலிவுட் சுவிசேஷத்தை கொண்டிருக்கிறோம். அது சரி. அதில் அநேக காரியம் அதிகமாக முழு களியாட்ட ஆர்ப்பாட்ட கூச்சலுடன் இருக்கின்றது, அதிகமான கவர்ச்சியுடனும் அதைப் போன்ற ஒவ்வொரு காரியத்துடனும், ஊது கருவிகளின் கீச்சொலி மற்றும் இன்னுமாக இருக்கின்றன. “யார் எழுந்து கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரனே, சரியாக இப்பொழுதே நீ பரலோகம் போவாய்”. அது ஒரு பொய்! அது ஒரு பொய்யாகும்!.
78. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்!” ஆகவே அவன் மறுபடியும் பிறந்திருந்தால், அங்கே வந்த அந்த அதே ஆசீர்வாதம் இங்கேயும் அவனிடத்திற்கு வரும். நாம் கடந்த வாரம் அதைக் குறித்து திரும்பத் திரும்ப வேதவசனங்களின் மூலமாக பார்த்தோம். ஆகவே கிழக்கத்திய மக்களிடத்தில், பரிசுத்த ஆவி யூதர்களின் மேல் விழுந்த போது அவர்கள் கீழை நாகரீகத் தொடர்புடைய, கிழக்கத்திய ஜனங்கள், பரிசுத்த ஆவி மகத்தான அடையாளங்களுடனும் வெளிப்படுத்தல்களுடனும் விழுந்தது என்பதை நாம் பார்த்தோம். இருளோ அல்லது பகலோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஏறக்குறைய ஒரு- ஒரு நேரமானது இருக்கும் என்று வேதாகமம் கூறுகின்றது. அது ஒரு விதமான மப்பான நாளாக, சாயங்காலத்தின் கடைசி பாகமான ஒன்றாக அது இருந்தது. ஆகவே அப்பொழுது கடைசியாக மாலையில் சில நிமிடங்களுக்கு சூரியன் வெளியே வரும். “சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அது சரியா? நல்லது,” அது மேற்கத்திய ஜனங்களாகும், புறஜாதிகள் அங்கே முன்னர் யூதர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியை, அதே அடையாளங்களுடனும் வெளிப் படுத்தல்களுடனும் பெற்றுக் கொள்கின்றனர். அது தான்.
79. ஆகவே மக்களே, உலகம் உங்களை ஒரு “தலையில் பித்து பிடித்துள்ள அதிதீவிர மதவைராக்கியம் கொண்ட ஒருவன்” என்று அழைக்கப்போகிறது. அதை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு கூறினார். வேதாகமம் அதையே கூறுகின்றது. நீங்கள் ஒரு விநோதமான ஜனங்கள், நீங்கள் விநோதமானவர்கள். ஏனென்றால் அது மிகவும் வித்தியாசப்பட்ட ஒன்று ஆகும்.
80. என்னுடைய வீட்டண்டை என் சுற்று வட்டாரத்திலும் நான் அதை கவனித்திருக்கிறேன், அங்கேயிருக்கின்ற ஜனங்கள்; என்னுடைய சிறு பிள்ளைகளை; நாங்கள் சுத்தமாக வைத்து கூடுமானவரை பண்பார்ந்தவர்களாக வாழ நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் அக்கம் பக்கத்தார் பிள்ளைகளுக்குள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குவதை உங்களால் காணமுடியும். பாருங்கள்? அவர்கள் ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகின்றனர்.
81. ஆகவே எனக்குத், காரியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியை உடையவனாக நான் இருக்கிறேன் (அதை நீங்கள் அறிவீர்கள், கூட்டத்தில் அதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்), நகரத்தில் உள்ள மேய்ப்பர்கள் “நல்லது, இப்பொழுது, பில்லி ஒரு நல்ல பையன், அவனுக்கு எதிராக எங்களிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், நம்மைக் காட்டிலும் சிறிது வித்தியாசமான ஜனக்குழுவாக அவர்கள் இருக்கின்றனர்” என்று கூறுவதை நான் அறிந்துள்ளேன். தேவனுக்கு நன்றி! அது சரி. தேவனுக்கு நன்றி! அதுதான் அந்த முத்திரை. நாம் பேசிக்கொண்டிருக்கிற முத்திரை அது தான்.
82. கவனியுங்கள், பரிசுத்த ஆவியை யூதர்கள் பெறுவதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிசுத்த ஆவி முன்னுரைத்து அது என்னவாயிருக்கும் என்று கூறினதை கடந்த இரவு பார்த்தோம். மைக்கூட்டு... “கணக்கனுடைய மைக்கூட்டு எழுத்தாளன் எருசலேமிற்குள் சென்று அவர்களுடைய நெற்றியில் ஒரு அடையாளத்தைப் போட்டான்” அது சரியா? சபையை தேவன் கடிந்து கொள்வதற்கு முன்னதாகவே அதைக் குறித்து பேசினார். கி.பி.96ல் தீத்து எருசலேமின் மதில்களை முற்றுகை யிட்டு, நகரத்தை எரித்து போட்டான். தீர்க்கதரிசனத்தின் படி ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி ஆனது. இன்றைக்கு ஆலயத்தின் ஒரே ஒரு காரியம் மாத்திரமே விடப்பட்டிருக்கிறது, அது ஒரே ஒரு பழைய சுவர். அங்கே அவர்கள் கற்களைக் குவித்துள்ளனர், அது மழமழப்பாக யூதர்கள் அழுது கதறுகின்ற, அழுகின்ற சுவராக அங்கே இருந்து கொண்டிருக்கின்றது, ஆலயத்தில் விடப்பட்டிருக்கின்ற ஒரேயொரு காரியம் அதுவே. அதே இடத்தில் ஒமரின் மசூதி இருந்து கொண்டிருக்கின்றது.
83. இயேசு “தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லியிருக்கிற படி; பாழாக்குதலை செய்கின்ற அந்த அருவருப்பு நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,” பிறகு அவர் அடைப்புக்குறியில் குறிப்பிடுகிறார் “(ஆங்கில வேதாகமத்தில் தமிழாக்கியோன்) (இதை வாசிக்கிறவன் புரிந்து கொள்ளக்கடவன்)” என்று கூறினார். பாருங்கள்? அது சரி. அதோ அது. அவர் எத்தனை நாள்... முறைகள் அது புறஜாதிகள் காலம் நிறைவேறும் வரையிலும் அதன் மதில்கள் மிதிக்கப்படும், அதன்பின் யூதரிடத்திற்குத் திரும்ப வருவார். ஆகவே நாம் சரியாக அந்த நேரத்தில் தான் இருக்கிறோம்! இங்கே கடந்த சில ஆண்டுகளாக யூதர்கள் ஆயிரக்கணக்காக திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரவு நாம் அதை எவ்விதமாக பார்த்தோம் என்பது உங்களுக்கு தெரியும், எப்படி வேத வசனம் பரிபூரணமாக... ஒரு செய்தித்தாளை வாசிப்பது போல இன்னும் தெளிவாக அது இருக்கிறது. ஏனெனில் அதிலிருந்து இன்னும் அதிகமான புரிந்து கொள்ளுதலை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள்.
84. ஆனால், மேலுமாக அவர்கள் தலையில் போடப்பட்ட அடையாளம் பச்சை குத்தப்பட்ட ஒன்றல்ல. அப்படித்தானே? அது என்ன? பரிசுத்த ஆவியின் அபிஷேகம். இந்த கடைசி நாளின் அடையாளமாக இருக்கப் போகிறது? எது? வேதாகமம் “கடைசி நாளில் உள்ள ஜனங்களுக்கு தேவனுடைய பரிசுத்த ஆவியே முத்திரையாக இருக்கிறது” என்று வேதம் கூறுகின்றது. இப்பொழுது அங்கே... எபேசியர் 4:30, “அன்றியும் நீங்கள் உங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்,” என்று வேதம் கூறுகிறது. எபேசியர் 1:13 மற்றும் இன்னும் அநேக இடங்களில், அதே காரியத்தைத்தான் கூறுகின்றது, “பரிசுத்த ஆவிதான் தேவனுடைய முத்திரை.”
85. முத்திரை என்றால் என்ன? அது எந்த ஒன்றினாலும் நிறைவுபெறும் வரை ஒரு முத்திரையானது போடப்பட முடியாது. லூத்தரன்கள் முத்திரையிடப்படவில்லை, கிருபையின் யுகத்தின் நாளானது இன்னுமாக நிறைவேறவில்லை; அவர்கள் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தனர். மெத்தோடிஸ்டுகள் முத்திரையிடப் படவில்லை. இங்கே ஒரு கேள்விக்கு நான் வருகிறேன்; இன்னும் சிறிது - இன்னும் சிறிது நேரம் கழித்து அதை நாம் பார்ப்போம். அவர்கள் முத்திரையிடப்படவில்லை, ஏனெனில் அது நிறைவு பெறவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகமோ தேவனுடைய கிரியைகளின் நிறைவு பெறுதலாக இருக்கிறது!
86. அவர் கூறினார், “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்... பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என்பவைகளே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” நீங்கள் பிதா இல்லாமல் குமாரனைக் கொண்டிருக்க முடியாது, குமாரன் இல்லாமல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க முடியாது, அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள்.
87. “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று. ஜலம், இரத்தம், ஆவி என்பவைகளே. இவைகள் ஒன்றாயில்லை, ஆனால் ஒருமைப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார். புரிகின்றதா, “ஒரு முழுமையான முத்தரித்தல்” லூத்தரின் கீழே நீதிமானாக்கப்படுதல், ஜலம்; இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுதல்.
88. நீதிமானாக்கப்படுதல் ரோமர் 5:1 ஆகும், “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல்.
89. இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், எபிரேயர் 13:12, மற்றும் 13 “இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலமாக ஜனத்தை பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.”
90. லூக்கா 24:49, “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்.” அப்போஸ்தலர் 1:8, “இந்த பரிசுத்த - ஆவி உங்களிடத்தில் வரும்போது, அப்பொழுது நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந் தங்களும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.” “இயேசு மறுபடியுமாக திரும்பி வரும் வரையில் நிலைத்திருக்கின்ற ஒரு பரிசுத்த ஆவி!” இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் உங்களோடு, உங்களுக்குள், உலகத்தின் முடிவு பரியந்தம்; நான் செய்கிற அந்த- அந்த காரியங்களை நீங்களும் செய்வீர்கள். தம்முடைய ஆவியின் மூலம் சபையின் மூலமாக கிரியை செய்தல்! அவர் “நீங்கள் இகழப்பட்டு ஏளனஞ் செய்யப்படுவீர்கள்.” என்றார். அவர் “வீட்டெஜமானாகிய என்னையே பெயல்செபூல் என்று, குறிசொல்லுகிறவர்களின் தலைவன் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” என்றார். “என்னிமித்தம் பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு களி கூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே”.
91. அது தான் வேதவசனம், பாருங்கள். அதோ அது. ஆகவே, நண்பனே நீ பார், நீ அதை கொண்டிருக்கத்தான் வேண்டும், இப்பொழுது நீ உன்னுடைய தேர்ந்தெடுப்பை செய்தாக வேண்டிய வனாயிருக்கிறாய்; நீ ஒரு சுயாதீனன்.
92. ஆனால் அதுதான் பிராடெஸ்டென்ட் சபைக்கும் கத்தோலிக்க சபைக்கும் இருக்கின்ற தொடர்பாகும். வேதத்தின் படி... அவர்களிருவரும் ஒன்றாக, சபையை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்; இயேசுவை அல்ல, இப்பொழுது, சபையை மட்டுமே பற்றிக் கொண்டிருக்கின்றனர். சபையில் உள்ள மக்கள், இயேசு கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தேவன் தாமே தங்களுக்கு வழியைத்திறந்து தங்களை... தங்களுக்கு வெளிச்சத்தை அளியும் என்று ஜெபிக்கின்ற அவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர், அவன் எந்த சபையில் இருந்தாலும் பரவாயில்லை. அது சரி. ஆனால் அவன் தன்னுடைய ஸ்தாபனத்தை பிடித்துக்கொண்டிருப்பானானால் அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்ற வார்த்தை மீறுதல் என்னும் அடையாளத்தை பெற்றுக் கொண்டவன் ஆவான். முரண்பாடான ஒன்று! ஆகவே கத்தோலிக்கமும் பிராடெஸ்டென்ட்டும், இரண்டும் ஒரே விதமாக, “அவள் ஒரு, வேசியாயிருந்தாள்; வேசிகள், அவளுடைய குமாரத்திகளும் வேசிகளே” என்று வேதம் கூறுகின்றது. இது தெளிவாக இருக்கிறதா? சரி.