248. ஓ, என்னே! நல்லது, சகோதரனே, சகோதரியே, நான் அவ்விதம் கூறினதில்லை, கூறுவதுமில்லை என்பது புரிந்து கொள்ளப்பட்டு விட்டதென்று நம்புகிறேன். இப்பொழுது, ஜனங்கள்... நீங்கள் அரிசோனாவுக்கு வந்து வாழ விரும்பினால், ஓ, நிச்சயமாக... ஒருக்கால் இந்த முதலாம் "செமஸ்டரின் போது, நான் அரிசோனாவில் தங்கியிருப்பேன். நான் இங்கு திரும்பி வர வேண்டும். நான்... அங்கு தங்க எனக்கு விருப்பம்; பிள்ளைகளின் உடல் நலம் தேறியுள்ளது, மற்றெல்லாமே. அங்கு சிறிது காலம் தங்க விரும்புகிறேன். அங்கு தங்குவதற்கு எனக்கு ஒரு நோக்கமுண்டு. ஞாபகம் கொள்ளுங்கள், இது ஒலிநாடாவில் பதிவாகிறது. கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது நான் செய்து கொண்டிருப்பதைச் செய்வதற்கு எனக்கு ஒரு நோக்கம் உண்டு; எனக்கு நோக்கமுண்டு என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆனால் அது என்னவென்று உங்களிடம் நான் கூறமாட்டேன்.
249. வீடுகளை விற்க வேண்டாம் என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால், நீங்கள் அங்கு வந்து ஏதோ ஒன்றை இழந்து விட்டதாகக் காண்பீர்கள், நீங்கள் கயிற்றின் சிறிய முனைக்கு வந்து விடுவீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். நான் சிறிது காலம் மட்டுமே அரிசோனாவில் தங்கியிருப்பேன்; நிரந்தரமாக அல்ல. ஏன்? இப்பொழுது என்னால் அங்கிருந்து வெளியே வர இயலாது.
250. அங்கு ஜனங்கள் தங்கி தர்மத்தில் வாழ நான் செய்து விட்டால், என்ன நடக்கும்? அதைதான் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. "ஆஹா, அவருடைய நோக்கம் என்னவென்று நான் உங்களிடம் சொன்னேன் அல்லவா, மற்றுமொரு தீர்க்கதரிசிகளின் கூட்டம், அப்படி ஏதோ ஒன்று என்பார்கள். பாருங்கள்? அதை தான் அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஜனங்களுக்கு நான உத்திரவாதி; நான் செய்யச் சொன்னதை அவர்கள் செய்யவில்லை என்றாலும். அவர்கள் அதற்கு மாறாகச் செய்து விட்டனர். நீங்கள், "அவர்கள் எப்படியோ போகட்டும், நீர் செய்ய வேண்டாம் என்று சொன்னதை அவர்கள் செய்து விட்டனர்"எனலாம். ஆனால் என் இருதயம் அதற்கு இடம் கொடுக்காது. நான் இன்னும் அவர்களை பின்தொடர விரும்புகிறேன். அவர்கள் என் பிள்ளைகள்; அவர்களை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது, அவர்களை ஒருவேளை நான் சிறிது அடிக்கக்கூடும். ஆனால் நான் நிச்சயம் அவர்களை பின் தொடரப் போகிறேன். நான் எப்படி அதை அங்கு செய்யப் போகிறேன்.
251. அவர்கள், "வார்த்தையைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்" என்றனர். அவர்களை அனுப்புவதற்கு எனக்கு சபை கிடையாது. அவர்கள் அங்கு செல்லும் சபைகள், மற்ற இடங்களில் நீங்கள் விட்டுப் பிரிந்த சபைகளைப் போலவே இருக்கும். சொல்லப்போனால் இன்னும் மோசமாக இருக்க வகையுண்டு. பாருங்கள்? அவர்கள் எப்படியும் அந்த சபைகளுக்கு செல்ல மாட்டார்கள். அவர்களுக்குப் பிரசங்கிக்க எனக்கும் ஒரு சபையும் இல்லை. அதுவுமல்லாமல் என் பிள்ளைகளை நான் அரிசோனாவுக்கு வெளியே கொண்டு செல்ல தகப்பன் என்னும் முறையில் நான் கடமைபட்டிருக்கிறேன்.
252. உங்களை ஒன்று கேட்கிறேன். சென்ற வருடம் இந்த சபையில் முப்பதுக்கும் அதிகமான செய்திகளை பிரசங்கித்தேன். இந்த ஐந்து ஆண்டுகளில், வெளியே இருந்தபோது. நான் அரிசோனாவுக்கு சென்ற முதற்கொண்டு, மற்ற நேரங்களில், நான் ஐந்து ஆண்டுகளில் பிரசங்கித்ததைக் காட்டிலும், ஒரு ஆண்டில் இந்த சபையில் அதிகம் பிரசங்கித்திருக்கிறேன் (நிச்சயமாக!). இதுவேஎன் வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக் கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இந்த இடம் தான். அதை மனதில் கொண்டவர்களாய், என்றாகிலும் ஒரு நாள் இந்த ஒலிநாடாவைத் திரும்பவும் கேட்டு, நான் தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் கேட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சரி, அதை ஞாபகம் கொள்ளுங்கள்.
253. நீங்கள் விட்டு வந்து… சபைக்கு வருவீர்களானால், அதை கண்டு பிடிக்க அங்கு செல்லாதீர்கள், ஏனெனில் அங்கு நான் இருக்க மாட்டேன். எனக்குப் போக இடமில்லை; எனக்குப் பிரசங்கம் செய்ய இடமில்லை. அவர்களுடைய சபைகளில் நான் பிரசங்கிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. எனக்கு எந்த ஒரு இடமுமில்லை. அந்த மனிதனிடம் நான் வாக்குக்கொடுத்தேன், அங்கு நான் வரும்போது... இங்கு வந்து நான் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டி, அவர்களுடைய சபைகளை காலியாக்கி விடுவேன் என்று அவர்கள் அனைவரும் பயந்தனர். ஆனால் அதுவல்ல என் வாழ்க்கையின் நோக்கம். பாருங்கள்? நான் ஜனங்கள் இரட்சிப்படைய உதவி செய்கிறேன். அதன் பிறகு அது அவர்களைப் பொறுத்தது. அந்த சமாரியன் அந்த மனிதனை சத்திரத்துக்கு கொண்டு சென்றது போல். அதன் பிறகு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ளட்டும். நான் சபைகளை உடைப்பதற்காக இங்கில்லை. கிறிஸ்துவுக்காக மனம் மாறினவர்களைப் பெறவே நான் இங்குள்ளேன். பாருங்கள்? அவர்கள் தங்கள் சொந்த வழியில் வியாக்கியானம் செய்து நான் கூறுவதை கூறாதபோது, அது ஜனங்களிடையே என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளும்படி செய்கிறது. பாருங்கள்?
254. அந்த தரிசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எத்தனை பேருக்கு ஜூனியர் ஜாக்சனின் சொப்பனம் ஞாபகமுள்ளது? நீங்கள் எல்லோரும் அதை அப்படியே பின்பற்றுங்கள். அது என்ன? நான் அங்கு போயிருக்கும்போது, இங்கு தங்கியிருங்கள்! பாருங்கள்? அர்த்தத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்தேன்.
255. என் இருதயத்தில் ஏதோ ஒன்றுள்ளது. அதைச் செய்ய நான் கர்த்தரால் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன். அது இந்த சபையைக் குறித்து, இந்த கூடாரத்தைக் குறித்து செய்யப்பட வேண்டிய ஒன்று; நான் அங்கு அல்லது வேறெங்காவது சிறிது காலத்துக்குச்செல்ல வேண்டும். அது ஒரு நோக்கத்துக்காக, பெரிய நோக்கத்துக்காக. அந்த நோக்கத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாது, நான் சுற்றித் திரிந்து கொண்டிருக்கவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் அவ்விதம் நடந்து கொள்வதாக எண்ண வேண்டாம். நான் கர்த்தருடைய சித்தத்தின்படி செயல்படுகிறேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் நான் செயல்பட்டு வருகிறேன். பாருங்கள்? ஆகையால் தான், நான் சொல்வதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் செய்யச் சொல்வதை செய்யுங்கள் (பாருங்கள்?), நான் சொல்வதற்கு செவிகொடுத்து, நான் உங்கள் சகோதரன் என்று நம்புங்கள். நான் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், என் சொற்களுக்கு தவறான அர்த்தம் உரைக்காதீர்கள்!
256. ஏதாவதொன்று இருக்குமானால், எனக்கு உதவி செய்வாராக, நீங்கள் அறிய வேண்டியது ஏதாவதொன்றை தேவன் என்னிடம் கூறுவாரானால், அதை நான் அப்படியே உங்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதை தேவன் அறிவார். அதனுடன் எதையும் கூட்டாதீர்கள், அதிலிருந்து எதையும் எடுத்துப் போடாதீர்கள். நான் சொன்னவிதமாகவே அதை செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் என் இருதயத்திலுள்ளதை எனக்குத் தெரிந்த வரைக்கும் சிறப்பாக உங்களிடம் கூறுகிறேன். பாருங்கள்? அதை நீங்கள் விசுவாசியுங்கள். அதைக் குறித்து நான் என்ன கூறுகிறேனோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு. அதை அப்படியே போக விட்டு விடுங்கள். சரி.
257. என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர்.
258. அன்றொரு நாள் ஒரு போதகர் என்னிடம் வந்து, "சகோ. பிரன்ஹாமே, இதுவரை கண்டிராத மிகவும் மோசமான கொள்கையை (cult) அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலையிலும் வெளியே செல்கின்றனர். அவர்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்கின்றனர், ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு மிகவும் அருகாமையில் உள்ளனராம்" என்றார். அவர்கள் வேலைக்கு செல்வதில்லை. நல்லது, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? உண்மை (இந்த ஒலிநாடா அங்கும் செல்கின்றது). எனவே, ஆம். ஐயா! நீங்கள் எறும்பிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று வேதம் உரைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் வேலை செய்யாவிட்டால், சாப்பிடக் கூடாது. எனவே அது முற்றிலும் உண்மை.
அதை போன்ற கேள்விகளில் ஒன்றை இப்பொழுது கையிலெடுத்தேன்.