Q.271. இது... (எனக்குத் தெரியவில்லை. பாருங்கள், இது வித்தியாசமாயுள்ளது - இது
மற்ற கேள்விகளைக் காட்டிலும் வித்தியாசமான கையெழுத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு காண்பிக்க இது
போன்ற எட்டு அல்லது பத்து கேள்விகள் உள்ளன என்று எண்ணுகிறேன். பாருங்கள்?) மிகவும்
பரிபூரணமான சபை அரிசோனாவிலுள்ள டூசானில் இருக்கப் போகின்றதா? நான் தேவனுடைய பரிபூரண சித்தத்தில்
இருக்க விரும்புகிறேன். நாங்கள் டூசானுக்கு வந்துவிடலாமா?
259. இது மற்ற கையெழுத்து அல்லவே அல்ல. அது... நான்... இங்கு பாருங்கள். இந்த ஒரு விஷயத்தின் பேரில்
எத்தனை கேள்விகள் உள்ளதென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன். எனக்குத் தெரியவில்லை... என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன். இங்கு... இவைகளில் சிலவற்றில், "உங்களுக்கு நான்
தெரியப்படுத்துகிறேன்" என்று எழுதி வைத்திருக்கிறேன்.