261. இல்லை, தேனே, அதை செய்யாதே. பார்! ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்வது எவ்வளவு எளிதாயுள்ளது! அந்த செய்தியை நான் பிரசங்கித்த போது, எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்? நான் என்ன சொன்னேன் என்றால், நான் புதிய எருசலேமை அளந்து கொண்டிருந்த போது, அது ஆயிரத்தைநூறு மைல் சதுரமாக இருக்கும் என்றேன். அது ஏறக்குறைய மேய்ன்னிலிருந்து பிளாரிடா வரைக்கும். பசிபிக்குக்குமேற்கே அறநூறு மைல் பரப்பாயிருக்கும் என்றும், அந்த பரப்பு ஆயிரத்தைநூறு மைல் சதுரமாயிருக்கும் என்றேன். என் கருத்தின்படி அது ஆபிரகாம் அந்த நகரத்தை தேடிக்கொண்டிருந்த அந்த இடத்தில் இருக்குமென்றும், அப்பொழுது சமுத்திரம் இனி இராதென்றும் சொன்னேன். சமுத்திரம் இனி காணப்படாது என்று வேதம் கூறுகிறது. பூமியின் முக்கால் பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சமுத்திரம் இனி இராது; எனவே அது அப்படிப்பட்ட ஓரிடத்தில் இருக்கும் மிகப் பெரிய நகரமாயிராது. அது அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறதும், தேவன் பிறந்த இடமுமாகிய பெத்லகேமில் இருக்கும் என்று நம்புகிறேன். அது பாலஸ்தீனாவில் இருக்குமென்றும், அது அங்கு பூமியிலிருந்து எழும்பி அந்த மலையாயிருக்குமென்றும் நம்புகிறேன்.
262. ஆனால், அருமை நண்பரே, அதற்கும் இந்த கூடாரத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பார்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு. பவுல், பரிசுத்தவான்கள் அனைவரும் உலகம் முழுவதும் மரித்தனர். அவர்கள் சுட்டெரிக்கப்பட்டனர். தண்ணீரில் முழுக்கி கொல்லப்பட்டனர், சிங்கங்களுக்கு இரையாயினர், எல்லா விதத்திலும் மரித்தனர். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு முட்டு முனையிலிருந்தும் எழும்பி வருவார்கள். நான் அங்கிருப்பேன் என்று நம்புகிறேன். நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எங்கிருந்தாலும், நான் அந்த கூட்டத்தில் இருப்பேனென்றால், அங்கு நான் இருப்பதற்கு எதுவும் என்னை தடை செய்ய முடியாது. பாருங்கள்? நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நான் இருக்க வேண்டிய ஒரே இடம் கிறிஸ்துவுக்குள். கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டு வருவார். அது எங்கிருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவர் கொண்டு வருவார். என்னை இயேசுவுக்குள் அடக்கம் செய்யுங்கள்.
263. முன்காலத்து தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் - முதற்பலன்கள் - பாலஸ்தீனாவில் இருக்கும் என்று அறிந்திருந்தனர். ஆபிரகாம் ஒரு இடத்தை வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தான். அவன் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு அவனுடைய பெற்றோர் பக்கத்தில் அடக்கம் செய்யப் பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு எகிப்தில் மரித்தான், ஆனால் பாலஸ்தீனாவுக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டான் . யோசேப்பும் அங்கு மரித்தான். அவர்கள் அவனுடைய எலும்புகளை இங்கு கொண்டு வந்தனர். ஏனெனில் அவன்... யோசேப்பு யாக்கோபை எகிப்தில் அடக்கம் பண்ணக்கூடாதென்றும் அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவனை ஆணையிடுவித்தான். யோசேப்பு, "என்றாவது ஒரு நாள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை சந்திப்பார். அப்பொழுது என் எலும்புகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு என் தகப்பனுடன் அடக்கம் பண்ணப் படட்டும்" என்றான். அவர்கள் அவ்விதமே செய்தனர். ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியால், உயிர்த்தெழுதலின் முதற்பலன்கள் பாலஸ்தீனாவில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர்.
264. இப்பொழுது, வேதம் என்ன கூறுகிறதென்றால்... நீங்கள் என்னைத் தீர்க்கதரிசி என்று அழைப்பீர்களானால் - நான் அவ்விதம் என்னைக் கூறிக் கொள்ளவில்லை - ஆனால் நீங்கள் என்னைத் தீர்க்கதரிசியென்று அழைப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், இதை உங்களுக்கு தீர்க்கதரிசியின் நாமத்தினால் உரைக்கிறேன் (பாருங்கள்?). உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் பொதுவாக உலகம் முழுவதிலும் நிகழுமென்று தீர்க்கதரிசியின் நாமத்தினால் உரைக்கிறேன். நீங்கள் எங்கே இருந்தபோதிலும், அந்த நேரம் வரும்போது, அவரைச் சந்திக்க நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுவீர்கள். அவ்வளவுதான்! நீங்கள் எங்கிருந்தபோதிலும், உங்களை எதுவும் நிறுத்த முடியாது. நான் அவர்களில் ஒருவனாக அங்கிருப்பேன் என்று நம்புகிறேன், அது போன்று நீங்கள் ஒவ்வொருவரும் அங்கிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நமக்கு இன்னும் ஒரு கேள்விக்கு நேரமுண்டா? இப்பொழுது ஏறக்குறைய 1.00 மணி ஆகப் போகிறது.