265. சகோதரனே, பாருங்கள், இதை உங்களிடம் கூற விரும்புகிறேன், அவள் உங்கள் மேல் விவாகரத்து வழக்கு தொடுத்தால் அது பிசாசு. பாருங்கள்? அவள் அதை செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து, அந்த ஸ்திரீக்கு இடறலாக நீங்கள் இவ்வுலகில் ஒன்றுமே செய்யவில்லை என்றால், அதைச் செய்வது சாத்தானே. உங்களைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான்.
266. இப்பொழுது, அவள் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தால், அவள் அவரிடம் வருவாள். இல்லையென்றால், அவளைக் குறித்து கவலைப்படுவதனால் பிரயோஜனமில்லை. அது அப்படி செய்யுமானால்... நீங்கள் கவலைப்பட்டால் அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும், அதைதான் சாத்தான் செய்ய விரும்புகிறான். அவன் உங்களுக்கு எதிராக கிரியை செய்கிறான் என்று நான் அறிகிறேன். எனவே நீங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் ஒப்புவித்து, உங்களால் முடிந்த வரைக்கும் சந்தோஷமாக தேவனுக்கு சேவை செய்து கொண்டிருங்கள். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்" (யோவான் 6:37). முழங்கால்படியிடுங்கள். நான் உங்களுடன் ஜெபிப்பேன், எதையும்செய்வேன். இந்த விஷயத்துக்காக நானும் ஜெபிக்கிறேன். நீங்கள். “தேவனாகிய கர்த்தாவே, அவளை நான் நேசிக்கிறேன்; அவள் என் பிள்ளைகளுக்குத் தாய்' (அவள் அந்த பிள்ளைகளுக்கு தாயாக இருப்பாளானால்). "கர்த்தாவே, எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்; அதை நீர் அறிந்திருக்கிறீர்; ஆனால் இதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. அவள் எப்படியும் என்னை விவாகரத்து செய்து விடப்போகிறாள். நான் ஒன்றுமே செய்யவில்லை; நான் எதையாகிலும் செய்திருந்தால், அதை எனக்கு வெளிப்படுத்தும். நான் சென்று அதை சரி செய்து கொள்கிறேன், நான் எதையும் செய்யத் தயார்' என்று ஜெபித்து, அதை கர்த்தரிடம் ஒப்புவித்து, அதை தனியே விட்டு விடுங்கள். ஒன்றுமே நடக்காதது போல் நீங்கள் தொடர்ந்து வாழுங்கள். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார்.