269. மீதியான நேரத்தை நான் இதன் பேரில் செலவிட விரும்புகிறேன். உங்களை இயேசுவுக்கு முழுவதுமாக ஒப்பு கொடுக்க இயலவில்லை. அவர்கள்... பாருங்கள், அது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை; அது யாரென்று என்னால் கூற முடியவில்லை. தேவன் அதை அறிவார்.
270. உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க முடியவில்லை. ஏன்? என்ன விஷயம்? நீ ஸ்திரீயானால், மனைவியாயிருக்க உன்னை முழுவதும் உன் கணவருக்கு சமர்ப்பிக்க வேண்டுமல்லவா? உனக்கு விவாகமான போது நீ நற்பண்பு கொண்ட இளம்பெண்ணாய் இருந்தாய். நீ நற்பண்பு கொண்டவளாயிருந்து, அவ்விதம் நிலைத்திருக்க உன் வாழ்க்கையில் போராடி வந்தாய். பிறகு ஒரு நாள் நீ நேசிக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தாய். நீ முழுவதும் அவருடையவளாகி விட்டாய். நீ வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் எதிராக போராடி, நற்பண்பு கொண்டவளாய் சுத்தமாக வாழ முயன்றாயே, அது அனைத்தையும் ஒரு மனிதனிடம் சமர்ப்பித்து விடுகிறாய். அது சரியா? உன்னை முழுவதுமாக அவருடைய கரங்களில் ஒப்படைத்து. நீ அவருடையவளாகி விடுகிறாய். நீ நாணயத்திலும் ஒழுக்கத்திலும் உறுதியாக நின்றிருந்த இவ்வனைத்தையும் ஒரு மனிதனிடம் கொடுத்து விடுகிறாய். அதையே நீ இயேசு கிறிஸ்துவுக்கு செய்யக்கூடாதா என்ன? அந்த விதமாக உன்னை சமர்ப்பித்து விடு - உனக்குள்ள எல்லாவற்றையும், என் சிந்தையை, என் எண்ணங்களை நிச்சயமாக.
271. நீ பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த விதமான எண்ணங்களினால் அந்த பொல்லாத ஆவி உன்னை அபிஷேகித்து, நீ தேவனுக்கு உன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்க முடியாது என்று நினைக்கும்படி செய்கிறது. அப்பொழுது... உனக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். நீ ஏன் உன்னை அவருக்கு ஒப்புக்கொடுக்க விரும்புகிறாய்? ஏனெனில் நீ ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நீ ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதற்கு அது ஒரு நல்ல அடையாளம்.
272. இப்பொழுது, நீ செய்ய வேண்டியதெல்லாம் சகோ தரனே, சகோதரியே (ஒருக்கால் வாலிபமாக அல்லது வயோதிபமாக இருக்கலாம்), நீ கூறியிருக்கிறாய். முழுவதுமாக ஒப்புக் கொடுக்க இயலவில்லை என்று. உன்னைச் சமர்ப்பித்து, "கர்த்தாவே, என் சிந்தனையையும், எனக்குள்ள எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் ஜீவியத்தை, சேவிக்கும் ஜீவியமாகக்கொடுக்கிறேன். கர்த்தாவே, என்னை எடுத்து, நான் உள்ளவாறே என்னை உபயோகிப்பீராக" என்று சொல். அது மிகவும் எளிதான காரியம். சபை இதை உணருவது நலம். இந்த கூடாரத்திலுள்ளவர்கள் இந்தக் கேள்விகளினால் பயனடைகிறீர்கள் என்று நம்புகிறேன். இவைகள் உங்களுக்குப் பிடிக்கிறதா? சரி. அது சிறிது உதவியாயிருக்கும்.