28. இது அந்த ஸ்திரீக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள சகோதரராகிய நம்மில் சிலர், "ஓ, முட்டாள் ஸ்திரீ" என்று நினைக்கக் கூடும். ஆனால் அவளுக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றவில்லை. அவள் அறிய விரும்புகிறாள். இப்பொழுது தலைமயிரை, அது என்ன, பன்றிவாலைப் போல் (pig tails) சுருள வைத்துக் கொள்வது. நான் வருந்துகிறேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை... அது... நான் வருந்துகிறேன். தலைமயிரைச் சுருள வைக்கும் 'பின்'களை போட்டுக் கொள்வது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பின் 'செட்டு'கள் - பன்றி வால். அநேக ஆண்டுகளுக்கு முன்பு அவ்விதம் தான் பெண்கள் தங்கள் தலை மயிரில் அணிந்து கொள்வது வழக்கம். உங்களுக்கு ஞாபகமுள்ளதா, ஒருவிதமான... அது சரிதானே? அவர்கள் அதை 'பன்றிவால்' (pigtails) என்று அழைப்பதுண்டு. மயிர் சுருள்கள் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இல்லை, 'பின்' சுருள்கள், என்னை மன்னித்துக் கொள், சிநேகிதியே.
29. “உடையின் கைகளை எவ்வளவு நீளமாக அவள் அணிந்து கொள்ள வேண்டும்?” இப்பொழுது, அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. பார்? வேதத்தை நான் ஆதாரமாகக் காண்பிக்க முடியாத எதைக் குறித்தும் நான் அதிகம் பேச விரும்பவில்லை.
30. இப்பொழுது. இதை நான் என் கருத்திற்கேற்ப உன்னிடம் கூறுகிறேன், ஏனெனில் இதற்கு ஆதாரம் காட்ட எனக்கு வேதத்தில் ஒன்றுமேயில்லை. தலைமயிரைக் குறித்து நான் ஸ்திரீகளுக்கு வேதத்திலிருந்து எடுத்துக்காட்டக் கூடிய ஒன்றே ஒன்று, அவர்கள் அதைக் கத்தரிக்கக் கூடாது என்பதே. அவர்கள் தலைமயிரை எவ்விதம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது அவர்களைப் பொறுத்தது. தலைமயிரைச் சுருள் வைக்கும் 'பின்'களைக் குறித்து, உண்மையில், அவை என்னவென்று எனக்குத் தெரியாது. துணிகள் பறந்து போகாமலிருக்க போடும் 'கிளிப்'புகளைப் போல் காணப்படுபவைகளை அவர்கள் தலையில் போட்டுக் கொள்கிறார்களே, அதுவாக இருந்தாலன்றி. நான்... எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று...
31. உடைகளின் கைகளின் நீளம், நீ கிறிஸ்தவளாயிருப்பதால், அவையெல்லாவற்றையும் குறித்து தேவன் உன்னிடம் கூறுவாரென்று நினைக்கிறேன். பார்? ஒரு கிறிஸ்தவள் என்ற முறையில், அந்த விஷயத்தில் நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன். தேவன் ஒரு குறிப்பிட்ட நீளத்தை நிர்ணயிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நீ நாணயமுள்ளவளாயும், மதிக்கத்தக்கவளாகவும், சுத்தமாகவும் காட்சியளித்தால், அது சரியென்று நினைக்கிறேன். இல்லையா? பார்? இது என் கருத்து, இதுநான் கூறுவது, ஏனெனில், அதை வேத வசனங்களினால் ஆதாரம் காண்பிக்க என்னால் இயலவில்லை.
32. தலைமயிருக்கு நிறச் சாயம் பூசிக் கொள்வதைக் குறித்த ஒரு கேள்வி இன்று காலையில் எழுந்தது என்று எண்ணுகிறேன். அதைக் குறித்தும் என்னால் ஒன்றும் கூற இயலாது. எனக்குத் தெரியாது. உங்கள் தலைமயிருக்கு நிறச் சாயம் பூசிக் கொள்ளக் கூடாது என்று கூறும் வேதவசனத்தை எனக்கு காண்பிக்க இயலாது. இப்பொழுது, அது...
ஸ்திரீகளாகிய நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் காண்பதற்கு அழகாயிருக்க வேண்டும். சகோ. பிரன்ஹாம், பிள்ளைகளாகிய உங்களுக்கு விரோதமாயில்லை. நீங்கள் என் பிள்ளைகள்; உங்களை நான் நேசிக்கிறேன், உங்களை நோக்கி கூச்சலிட நான் விரும்பவில்லை. நான் காரணமில்லாமல் அவ்விதம் செய்வதில்லை. உங்களுக்கு நான் உதவி செய்யவே முயல்கிறேன்.
33. இப்பொழுது பாருங்கள், உங்களைக் கேட்கிறேன்... அந்த கேள்விக்கு விடையாக இதை நான் கூறுகிறேன். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் சகோதரிகளே, இதோ அது. அதைக் குறித்து ஒரு கேள்வி எழுமானால், அதைச் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினால் நிறைந்து, அதைச் செய்ய வேண்டுமென்று மனதில் எண்ணம் கொண்டால், அது வேதம் கூறுவதில் தலையிடாமல், எந்த கேள்வியையும் எழுப்பாமல், அது கர்த்தருடைய சித்தமென்று நீங்கள் பூரண திருப்தியடைவீர்களானால், அதைச் செய்யுங்கள் (பாருங்கள்?), ஏனெனில் அதைச் செய்யக்கூடாதென்று எந்த வேதவசனமும் கூறவில்லை.
34. ஏசாயா 5ம் அதிகாரம், அந்த அதிகாரம் தான் என்று நினைக்கிறேன், ஸ்திரீகளைக் குறித்தும் அவர்கள் எவ்விதம் மாற்று உடைகளை அணிவார்கள் என்றும் உரைக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனால் அது பெருமையும், பெரிதாகக் காண்பித்துக் கொள்வதுமாயிருக்கிறது. அதை நீங்கள் பெருமைக்காகச் செய்வீர்களானால், அது தவறு. பாருங்கள்? தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை சோதித்துப் பாருங்கள். அதைச் செய்யக் கூடாது என்ற வேதவாக்கியம் இல்லாமலிருந்து ஆவியானவர் உங்களை நடத்துவாரானால், நீங்கள் அதைச் செய்யுங்கள். ஆனால் உங்கள் தலைமயிர் நீளமாயிருக்க வேண்டுமா அல்லது குட்டையாயிருக்கலாமா என்னும் விஷயத்தில் நீங்கள் நீண்ட தலைமயிரை உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படித்தான் வேதம் கூறுகிறது.
35. இங்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு இப்பொழுதே பதில் சொல்லி விடுகிறேன். அது இங்குள்ளது. அதை இன்று காலையில் அல்லது வேறு எப்பொழுதோ கண்டேன். "நீங்கள் எப்பொழுதுமே ஸ்திரீகளைக் குறித்து, அவர்கள் எவ்விதம் தங்கள் தலைமயிரை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள், ஆனால் ஆண்களைக் குறித்து நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை" என்று அக்கேள்வியில் எழுதப்பட்டுள்ளது.
36. ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயைப் போல் நீண்ட தலைமயிர் தன் முதுகில் தொங்கிக் கொண்டு இங்கு வருகிறதை நான் கண்டால், நான், “மிஸ்டர், நீர் ஏன் அம்பட்டன் கடைக்குச் செல்லக் கூடாது? நீர் ஒரு பெண்ணைப் போல் காட்சியளிக்கிறீர்" என்பேன். பாருங்கள்? ஆனால் மனிதர் சாதாரணமாக அவ்விதம் செய்வதில்லை. பாருங்கள்? மனிதர். மனிதர் பிழையற்றவர் என்று நான் கூற வரவில்லை, அவர்கள் ஸ்திரீகளைப் போலவே குற்றமுள்ளவர்கள்.
இதைக் கூற முற்படுகிறேன். அவ்விதம் செய்யத் தன் மனைவியை அனுமதிக்கும் ஒரு மனிதன் இரட்டிப்பாக குற்றமுள்ளவனாயிருக்கிறான். ஏனெனில் வீட்டார் அவன் சொற்படி தான் நடக்க வேண்டும். அந்த மனிதனுக்கு அவனுடைய சொந்த வீட்டாரின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனால், அவன் எவ்விதம் அதை தேவனுடைய வீட்டில் செய்ய முடியும்? பாருங்கள்?
37. இங்கு வருகை தருகின்ற நமது ஸ்திரீகளின் கூட்டத்தைக் குறித்து நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இதை நான் மரியாதையோடும் அன்போடும் கூறுகிறேன். இது உண்மையென்று தேவன் அறிவார். தென் பகுதியில் எனக்கு ஒரு போதகர் நண்பர் இருந்தார். நான் அதுவரை கண்டிராத அவ்வளவு சுத்தமாகக் காணப்படும் சபைகளில் ஒன்றை அவர் கொண்டிருந்தார். ஸ்திரீகளைக் குறித்து பேசுகையில், மிகவும் அழகான பெண்கள் அங்கு வந்து பரிசுத்தமுள்ளவர்களாய், தேவபக்தியுள்ளவர்களாய், நீண்ட தலைமயிரை உடையவர்களாய் உட்காருவார்கள். அந்த சபைக்கு சென்று அவர்களைக் கண்டு பேரானந்தமடைய நான் விரும்பினதுண்டு. ஆனால் இன்றைக்கு அவர்களையும் மங்கச் செய்யும் ஸ்திரீகளைக் கொண்ட ஒரு சபையை கர்த்தராகிய இயேசு எனக்கு அருளியிருக்கிறார்.
38. நான் நீசத்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களைக் கடிந்து கொள்வதில்லை. உங்களைக் குறித்து நான் புளாங்கிதம் அடைகிறேன். சாத்தான் எங்காவது காலடி எடுத்து வைக்க எனக்கு பிரியமில்லை. நீங்கள் மேல் நோக்கிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன், பின் நோக்கி அல்ல. எந்த ஒரு மனிதனும் நயமான சொற்களினால் உங்களை வஞ்சிக்க இடம் கொடாதீர்கள். “ஓ, நல்லது. அதுவல்ல...” என்று யாராகிலும் கூற அனுமதிக்காதீர்கள். பாருங்கள்? அப்படித்தான் சாத்தான் ஏவாளுக்கு வார்த்தையை வியாக்கியானித்துக் கொடுத்தான் பாருங்கள்? வார்த்தை என்ன உரைக்கிறதோ, அதை அப்படியே விசுவாசியுங்கள். சரி.