93. ஆம், அருமை சகோதரனே, சகோதரியே, இந்த - இந்த குறிப்பை எழுதின யாராயிருந்தாலும் சரி. கைகள் வைக்கப்படுதலினாலே முற்றிலுமாக பரிசுத்த ஆவியானது பெறப்பட வேண்டியதாக இருக்கிறது.
94. இப்பொழுது, அநேக மக்கள் என்னை... நான் ஒரு பெந்தெகொஸ்தேயினனாக குறிக்கப்பட்டுள்ளதால், நான் ஒரு பெந்தெகொஸ்தே என்று கூறுகின்றனர். நான் ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சார்ந்தவனாக ஒரு போதும் இருந்ததில்லை. நான் எல்லா ஸ்தாபனங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்றவனாக உள்ளேன், தேவனுடைய உதவியைக் கொண்டு அந்த வழியிலேயே நான் இருக்க முனைகிறேன். ஏனெனில் என்னால் சரியாக அந்த பிளவில் நின்று “நாமெல்லாரும் சகோதரர்! இங்கே வாருங்கள் நாம் ஒன்றாக வழக்காடுவோம்” என்று கூறமுடியும்.
95. தேவனுடைய கிருபையால் நான் முதன்முதலாக முன்பு ஆரம்பித்த போது... இங்கேயிருக்கின்ற ஜனங்களாகிய நீங்கள், என்னுடைய செயலாளர்கள் மற்றும் இங்கு அமர்ந்திருக்கக் கூடிய இவர்கள் இன்று உலகில் நான் பத்து இலட்சம் மற்றும் இன்னும் அதிகமான ஜனங்களுடன் நான் தொடர்பு கொண்டிருப்பேன் என்று அறிவார்கள். ஒரு ஸ்தாபனம் துவக்கப்பட்டிருந்தால் அது எப்படியிருந்திருக்கும்! பாருங்கள்? அது சரி. ஆனால் எனக்கு ஒரு ஸ்தாபனம் தேவையில்லை, அது வேதாகமத்திற்கு எதிரானது. ஸ்தாபனத்தில் உள்ள ஜனங்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்று என்னால் கூடுமானவரை நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காரியம். கர்த்தர் ஜனங்களிடத்தில் எனக்கு கொடுத்திருக்கிற செல்வாக்கை ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் மேல் வைப்பதற்கு பதிலாக, நிச்சயமாக அதை அவருடைய மகிமைக்கென்றே உபயோகிப்பேன். அதற்கு உரியவராயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் மேல் அதை நான் வைப்பேன். எந்த ஸ்தாபனமும் உங்களை இரட்சிக்கமுடியாது; அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும்.
இப்பொழுது, கைகளை வைப்பதின் பேரில், இப்பொழுது, சிறிது வித்தியாசமான...
96. இப்பொழுது, அருமையான பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்கள், என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு நிலைக்கு வந்து, “நாம் சென்று பரிசுத்த ஆவிக்காக காத்திருப்போம்” என்று கூறினால், பெந்தெகொஸ்தேயில் என்ன ஒரு வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது!
97. ஆகவே நான் இதைக் கூறுகிறேன்... உங்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதற்கல்ல. களத்தில் எனக்கு இருக்கும் மிகப்பெரிய உதவி பெந்தெகொஸ்தே ஜனங்கள் தான், ஏனெனில் அவர்கள் தெய்வீக சுகமளித்தல் மற்றும் தேவனுடைய வல்லமையின் செய்தியை விசுவாசிக்கின்றனர். மற்றவர்கள் தங்கள் மூக்கை அதற்கு நேராக திருப்புவார்கள்.
98. ஆனால் சபைக்கு வெளியே இருக்கின்ற தனிப்பட்ட நபர்கள், நித்திய ஜீவனிற்கு முன்குறிக்கப்பட்டவர்கள், அவர்கள் வருவார்கள். அவ்வளவு தான். ஆனால் முன்குறிக்கப்படாதவர்கள் வரமுடியாது; தேவன் அவ்விதமாகக்கூறினார், “அவர்கள் ஆக்கினைக்காக முன்குறிக்கப்பட்டனர்” ஆனால் எந்த ஒருவரும் அழிந்து போக வேண்டும் என்று அவருக்கு சித்தமல்ல, ஆனால், அவர் தேவனாய் இருப்பதால், அவர்கள் அதை கண்டனம் பண்ணுவார்கள் என்பதை அவர் கண்டார். ஆதலால் அது - அது அவ்வளவு தான், அவர் அதை முன்பாகவே கண்டார். அந்த காரியங்களை காண்பது தான் தேவனுடைய முன்னறிவு ஆகும். இந்த அதே நாளில் சபை எங்கே நின்று கொண்டிருக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். தேவன் அதை துவக்கத்திலிருந்தே அறிவார். சபை இன்று எவ்விதமாக இருந்து கொண்டிருக்கின்றதோ அதை தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். இன்றிரவு நான் இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பேன் என்று உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பே அவர் அறிந்திருந்தார். அவர் தேவன்; துவக்கத்திலிருந்து முடிவுவரை அவருக்குத் தெரியும்.
99. இப்பொழுது, இப்பொழுது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் போதித்துள்ளனர்... இப்பொழுது, அநேகமாக இதன் பேரில் நிறைய காரியங்களை என்னால் எடுக்கமுடியும், ஆனால் வார்த்தைக்கு வரவேண்டுமானால் நான் உத்தமமாக இருக்க வேண்டும். “காத்திருத்தல்” (tarrying) என்கின்ற ஒரு காரியமானது ஒருக்காலும் கிடையாது! நீங்கள் தவறில் இருக்கின்றீர்கள். காத்திரு என்றால் “ஜெபி” என்று அர்த்தமல்ல. “எதிர்பார்த்திரு” என்று அர்த்தம். மேலேறிச் சென்ற பிறகு, இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு... சிலுவையிலறையப்படுதல், பிரகாரம் சுத்தமாக்கப்படுதல். பாவ நிவாரண பலியின் நாளுக்கு பிறகு, உயிர்த்தெழுதல்... அவர் கொல்லப்பட்டபோது, அது பாவ நிவாரண பலியின் நாள், பிறகு மேலேறிச் செல்வதற்கு முன்பு நாற்பது நாட்கள், பிறகு பெந்தெகொஸ்தே. பெந்தெகொஸ்தே என்ற வார்த்தைக்கு “ஐம்பது” என்று அர்த்தம், பாவநிவாரண பலி செலுத்துதலுக்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்பதாகும்.
100. பாவநிவாரண பலி செலுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொன்றும், எழுத்துப்பூர்வமாக, பூகோளரீதியாக, தேவன் கூறியவிதமாகவே ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக வந்தாக வேண்டும். ஆகவே பெந்தெகொஸ்தே, அது ஒரு யூபிலி நேரமாக இருந்தது, அறுவடையின் முதற் பலன்களை அவர்கள் கொண்டு வந்த போது, ஒரு யூபிலியைக் கொண்டிருந்தனர்.
101. இப்பொழுது, இயேசு வரும் வரைக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்தாக வேண்டிய பரிசுத்த ஆவி சபை, அந்த சபையினுடைய முதற்பலன்கள், முதற்பலன் பெந்தெகொஸ்தேயன்று வந்தது. அது பெந்தெகொஸ்தே நேரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக அது இருந்தது; அது சுத்தப்படுத்தப்பட்ட பிறகு, பலியானது கொல்லப்பட்ட பிறகு, இயேசு கிறிஸ்து மேலேறிச் செல்லுதல் வரைக்கும் நாற்பது நாட்களாக இருந்தது. அவர் “எருசலேம் வரை சென்று உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள்.” என்றார். அப்போஸ்தலர் -1...
102. அப்போஸ்தலர் -2, “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்கு தந்தருளின வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.”
103. ஆகவே அப்பொழுது வெளியே இருந்த மதம் உலகம் அந்த மகத்தான வைதீக சபைகள், வந்து இந்த ஜனங்கள் தள்ளாடி குடித்து வெறித்த மக்களைப் போல இருந்ததைக் கண்டனர். ஆகவே அவர்கள் வந்து இவர்களைப் பார்த்து சிரித்து கேலி செய்து, “இந்த கலிலேயக் கூட்டத்தினரைப் பாருங்கள்! இவர்கள் எல்லாரும் குடித்து வெறித்துள்ளனர்!” என்றனர். தவறான புரிந்து கெள்ளுதலைப் பார்த்தீர்களா?
104. என்னுடைய கத்தோலிக்க நண்பனுக்கு கூறுகிறேன், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாள் அங்கே இவர்களுடன் இருந்தாள். சகோதரியே, பரிசுத்த ஆவியை பெற்று கொள்ளாமல் அவள் பரலோகத்திற்கு வர தேவன் அனுமதிக்கமாட்டாரானால், அந்த விதமாக இருக்குமானால், அதை விட குறைவான ஒன்று உங்களை அங்கே கொண்டு செல்லும் என்று நீங்கள் நீனைக்கிறீர்களா? இல்லை. ஆகவே நம்முடைய வீண் பெருமையான வீம்பான காரியத்தை விட்டுவிடுவோமாக, அதை நாம் விட்டு விடுவோமாக.
105. சொல்வதற்கென உலகம் வைத்திருப்பவைகளுக்கு எந்தவித கவனத்தையும் செலுத்த வேண்டாம்! தேவன் சொல்வதற்கென வைத்திருப்பவைகளையே நாம் கவனிக்க வேண்டும். இது தான் தேவனுடைய வார்த்தையாகும். இந்த வரைபடத்தின்படியே தான் நாம் அதை கட்டவேண்டியவர்களாகவுள்ளோம், ஏனெனில் அவர் பேதுருவிடம் “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை,” என்று கூறினார். எல்லா காரியமும் நடந்தேறும். பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராக இருக்கும் என்று அது காண்பிக்கிறது, ஆனால் அதை மேற்கொள்ளமுடியாது. அதை நிறுத்திவிடலாம் என்று மக்கள் நினைக்கின்றார்களா? நீங்கள் சூரியனைக் கூட விரைவாக நிறுத்திவிடலாம். அது சரி. அதையோ உங்களால் நிறுத்த முடியாது. அது முன் செல்ல வேண்டுமென்று தேவன் நியமித்திருக்கின்றார்.
106. இங்கே நான் முதன்முதலாக நான் மனம்திரும்பினேன், அங்கே பின்னால் இருக்கின்ற என்னுடைய ஏழை தாயும் கூட எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணினார்கள். என்னுடைய மாமியாரும் “அவன் மனநல காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டியவனாக இருக்கிறான்” என்று கூறினார்கள். அந்த நகரத்தின் பிரசங்கிகள், “இன்னும் சீக்கரத்தில் எரிந்து போய்விடுவான்,” என்றனர். நான் நீண்ட காலமாக எரிந்து கொண்டிருக்கிறேன். அது இன்னுமாக - இன்னுமாக எரிந்து கொண்டிருக்கிறது, எந்நேரத்திலும் இன்னும் பிரகாசமாக. ஏன்? அது அணைந்து போக முடியாது, அது தேவன் ஆகும்! எரிந்து அணைந்து போவதற்கு பதிலாக, அது இப்பொழுது உலகம் முழுவதுமாக பரவிக்கொண்டிருக்கிறது.
107. இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஓஹையோ நதியண்டையில். இங்கே சரியாக ஓஹையோ நதியில் நான் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கும் போது அதே காரியத்தைதான் அவர் கூறினார், உங்களில் அநேகர் அங்கே நின்று கொண்டிருந்தீர்கள், அந்த ஒளி, தூதன், நாங்கள் எங்கேயிருந்தோமோ அந்த இடத்திற்கு நேராக கீழே வந்து, “இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தியும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை கொண்டு வரும்,” என்றார். ஆகவே அது அதைச் செய்தது. அது... அவர் இன்னுமாக வரவில்லை, ஆனால் அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள், அது உலகம் முழுவதுமாக எங்கும் பரந்தகன்று சென்றிருக்கின்றது. பாருங்கள்? ஆகவே இன்று இப்பொழுது, சற்று சிந்தியுங்கள், சென்றுள்ள பிரயாசத்தினால், பல இலட்சக்கணக்கானவர் வந்துள்ளனர்.
108. அந்த பிராயசத்தினால் தான் எத்தனை இலட்சக்கணக்கானவர்கள் வந்தனர் என்று கத்தோலிக்க பத்திரிக்கையான ஞாயிறு வருகையாளர் கூட அதைக் குறித்து கூறியுள்ளது.
109. மற்றவர்கள் அதை கேட்டு, “அது தான் சத்தியம்! இந்த உலகக் காரியங்களினின்று சரியாக தன்னை இப்பொழுது அகற்றிச்சென்று உண்மையான சுவிசேஷத்தை பிரசங்கிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறுகிறார்கள்.
110. அதன் காரணமாக தான் அவர்கள் நம்மை “முழு சுவிசேஷம்” என்று அழைக்கின்றனர், அவர்கள் முழு சுவிசேஷத்தை கேலிக்கூத்தாகச் செய்கின்றனர். ஆனால், சகோதரனே, ஒன்றுமில்லாத பாதி எனக்குத் தேவையில்லை, நான்... அது எனக்கு முழு காரியமாக இருக்க வேண்டும். அதில் ஒரு பாகம் நன்றாக இருக்குமானால், அதின் மற்றைய பாகமும் நன்றாக இருக்கும். அந்த முழுமையான சுவிசேஷம்!
111. இப்பொழுது, கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் திரும்பவுமாக அங்கே வந்தார். பெந்தெகொஸ்தே ஜனங்கள் காத்திருந்தனர், “அங்கே பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி நிரப்பிற்று”.
112. அதற்கு பிறகு ஒரு முறை கூட அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. பேதுரு இந்த வார்த்தைகளை புறஜாதிகளுக்கு பேசின போது, அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்பே பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார், அது சரியா? சற்று, அப்போஸ்தலர் -10:49.
ஆனால் இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தை கேட்டவர்கள்... யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனை புகழுகிறதையும் கேட்ட போது
பேதுருவோடே கூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள... விசுவாசிகள் கேட்ட போது பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள் மேலும் பொழிந்தருளப் பட்டதைக் குறித்து... பிரம்மித்தார்கள்.
அப்பொழுது பேதுரு: துவக்கத்தில் நமக்கு நடந்தது போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும்... காண்கையில் எவறாகிலும் தண்ணீரை விலக்கலாமா?
ஆகவே அவன் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்…!
113. அது சரி; காத்திருத்தல் இல்லை; காத்திருத்தல் இல்லை. அந்த அப்போஸ்தல வழி, தேவனுக்கு எந்தவித குறிப்பிட்ட வகுத்துரைக்கப்பட்ட ஒழுங்கு முறை கிடையாது; இருதயம் பசியாயிருக்கையில், நீ எதற்காக பசி கொண்டிருக்கிறாயோ அதை அவர் உனக்கு தருவார். உனக்கு பரிசுத்த ஆவி தேவையாயிருக்குமானால், சரியாக இப்பொழுதே உன் மேல் இறங்க அவரால் முடியும்.
114. பேதுரு, அவன் பிரசங்கிக்க சென்ற போது, ராஜ்ஜியத்தின் திறவுக் கோல்களை பேதுரு வைத்திருந்தான். இன்னும் சில நிமிடங்களில் அதைக்குறித்து பார்க்கப்போகின்ற ஒரு கேள்வியை நான் வைத்திருக்கிறேன். அவன் ராஜ்ஜியத்திற்குரிய திறவு கோல்களை கொண்டிருந்தான். அவன் அதை கொர்நேலியுவின் வீட்டிற்குத்திறந்தான். அவன் சமாரியர்களுக்கு அதை திறந்தளித்தான், இங்கே அதை அவன் திறந்தளித்தான்; ஆனால் பிலிப்பு அங்கே சென்று அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணுவித்தான், பிறகு பேதுரு வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இப்பொழுது, அவன் ஒன்றைச் செய்தான், ஏனெனில் அங்கே இருந்த அந்த மந்திரவாதி... அங்கே சிமியோன் என்ற மாயவித்தைக்காரனை அவர்கள் கொண்டிருந்தனர், அவன், “நான் சிறிது பணத்தை உங்களுக்கு தருகிறேன், அதாவது நான் எவன் மீது கைகளை வைக்கிறேனோ அவன் பரிசுத்த ஆவியை பெறத்தக்கதாக அந்த வரத்தை எனக்கு கொடுங்கள்” என்றான். அது சரியா? ஏதோ ஒரு காரியம் சம்பவித்தது! (தங்கள் கழுத்துப் பட்டைகளை பின்புறமாக திருப்பிக் கொண்டு, வந்து அவர்கள் மேல் கைகளை வைத்து “நான் உனக்கு அப்போஸ்தல ஆசீர்வாதத்தை தருகிறேன்” என்று கூறிகின்ற இந்த பேராய பிஷப்புகள் அல்ல) பேதுரு தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது ஏதோ ஒன்று சம்பவித்தது; அது இன்னுமாக சம்பவிக்கின்றது.
115. கைககள் வைக்கப்படுகையில், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழும்போது, அவர்கள் ஈக்களைப் போல கீழே விழுவதை நான் கண்டிருக்கிறேன். ஆம். அதுதான் கைகளை வைப்பது என்பதற்குரிய அப்போஸ்தல உபதேசம் ஆகும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதிலிருந்து சிறிது வித்தியாசப்பட்டவராக நீங்கள் இருந்தால், நாளை இரவு ஒரு சிறு குறிப்பை மாத்திரம் எனக்கு எழுதுங்கள். சரி.