39. நீங்கள் முன் சென்று விவாகம் செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் இன்னும் நூறாண்டுகள் இவ்வுலகில் வாழப் போகின்றீர்கள் என்பது போல் அதை சென்று நிறைவேற்றுங்கள். உங்கள் இருதயத்தை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள், இவ்வுலகக் காரியங்களின் மேல் உங்கள் இருதயங்களை வைக்காதீர்கள். கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். பாருங்கள்? நீங்கள் சென்று. விவாகம் செய்து, பிள்ளைகளைப் பெறுங்கள். தேவன் உங்கள் விவாகத்தில் உங்களை ஆசீர்வதிப்பாராக.