58. இப்பொழுது, நல்ல கேள்வி. அந்த மனிதன் உத்தமமானவர். அவருடைய மனைவி, அவருடைய பாகமாயுள்ள அவருடைய துணைவி... இதனுடன் நான் ஒன்றைக் கூட்டலாமா? என் சகோதரரே, இதை நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். இந்நாட்களில் ஒன்றில், கர்த்தருக்குச் சித்தமானால், நான்! “விவாகமும் விவாகரத்தும்' என்னும் செய்தியை இந்தக் கூடாரத்தில் பிரசங்கித்து, அதை ஒலிநாடாவில் பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். அது பிரிக்குமானால், அது பிரிக்கத்தான் வேண்டும். அது கர்த்தருடைய வார்த்தை என்று நாம் நிரூபிக்க போகின்றோம்.
59. பாருங்கள், என் சகோதரரே, இதைச் செவிகொடுத்து கேளுங்கள். அநேக சமயங்களில் இவ்வுலகில் நீங்கள் தவறான துணைவிகளைப் பெறுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? சில அழகிய பழுப்பு நிறமுள்ள, அல்லது நீல நிறமுள்ள, அல்லது சாம்பல் நிறமுள்ள கண்கள் உங்களை மயக்கி, நீங்கள் செவிகொடுத்திருக்கக் கூடாத இடத்துக்கு உங்களைக் கவர்ந்து விடுகிறது. மனிதர் பலர் அதை உணருகின்றனர்.
60. விவாகம் செய்கின்ற ஒரு மனிதன், முதலில் அதை ஜெபத்துடன் அணுக வேண்டும். வெளித்தோற்றத்தில் அழகாயுள்ள பெண்ணை நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது, உட்புறத்தில் அழகாயுள்ள பெண்ணை, உங்கள் பிள்ளைகளுக்கு தாயாயிருப்பவளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
61. பிரசங்க பீடத்திலிருந்து ஒரு ஊழியக்காரன் இதைக் கூறும்போது, அது பயங்கரமாகத்தொனிக்கும் என்று அறிந்திருக்கிறேன். நான் மேற்கில் இருந்த போது, கால்நடைகளை வாங்குபவர்களுடன் நான் சென்றிருக்கிறேன். நாங்கள் குட்டிப் போடும் கால்நடைகளை வாங்குவோம், அவர்கள் ஒரு மந்தையைத் தொடங்க விரும்புவார்கள். அங்கு நான் நிறைய கற்றுக் கொண்டேன். மாடுகளை ஏலம் விடுபவர்கள் செய்வதையும் வாங்குபவர்களின் செயல்களையும் நான் கவனித்திருக்கிறேன். நான் இந்த சபைக்கு வருகிற ஒரு வயோதிபனுடன் அங்கு செல்வது வழக்கம். அவர் தொடக்கத்தில் நாத்தீகனாயிருந்தார், அவரை நான் கிறிஸ்துவினிடத்தில் நடத்தினேன் - திரு. ஜேவரெஸ். உங்களில் பலருக்கு அவரை ஞாபகமிருக்கும். அவர் கொலராடோவில் மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறார். நாங்கள் செல்வோம், அவர்கள் பசுக்களை கவனிப்பார்கள்.
ஒரு நாள் ஒரு பசுங்கன்று 11,000 டாலர்களுக்கு விற்கப் பட்டதை நான் கண்டிருக்கிறேன். அது சிறு கன்று. அது குட்டி போட்டதேயில்லை. ஜேவ் என்னிடம், "என்னிடம் போதிய பணம் இருந்தால், இந்தக் கன்றுக்குட்டியை நான் வாங்கி விடுவேன்" என்றார்.
“அவர் மாட்டுப் பண்ணை சொந்தக்காரர். அவருடைய தொழிலை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்" என்று நான் நினைத்துக் கொண்டேன். நான், "ஜேவ், நீர் ஏன்... இந்த கன்றுக்குட்டிக்குள்ள தகுதி என்ன? அது ஹியர்ஃபோர்ட் ரகத்தைச் சேர்ந்தது. அங்குள்ள மற்றக் கன்றுக்குட்டி சிறிது நேரத்துக்கு முன்பு 300 டாலர்களுக்கு விற்கப்பட்டது. எனக்கு அது பெரிய கன்றுக்குட்டியாக காணப்பட்டது" என்றேன்.
62. அவர், “பாருங்கள், பில்லி, கன்றுகள் வாங்கும் விஷயத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் தெருப் பிரசங்கம் செய்வதில் மட்டுமே நிலைத்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். ஏனெனில் கால்நடைகளை குறித்து உங்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. அங்குள்ள அந்த கன்றுக்குட்டியைப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, அது இருந்த இடத்துக்கு நடந்து சென்று. “அதன் கண்களில் முறைப்பான பார்வையைக் கண்டீர்களா?” என்று கேட்டார்.
நான், "ஆம்" என்றேன்.
அவர், "அதன் குட்டிகளுக்கும், பேரக் குட்டிகளுக்கும், கொள்ளுப் பேரக் குட்டிகளுக்கும் அந்த முறைத்த பார்வை வழிவழியாக வந்து கொண்டிருக்கும். அவை தங்களையே அழித்துக் கொள்ளும். தங்கள் கன்றுக்குட்டிகளுக்கு அவை ஒருபோதும் தாயாக இருக்காது. அவைகளை நீங்கள் கொழுக்க வைக்க முடியாது; அவை இறைச்சிக்கு உதவாது. இப்பொழுது விற்கப்பட்ட அந்த சிறு கன்றுக்குட்டியை கவனியுங்கள். அதன் பார்வை எவ்வளவு சாந்தமாயுள்ளது! அதன் அமைதியான பார்வையை, தயவுள்ள பார்வையைக் கவனியுங்கள். அதன் கண்களில் ஒரு முறைப்பும் கூட இல்லை. அது தன் கன்றுக்குட்டிகளுக்கு உண்மையான தாயாக இருக்கும். அதன் குட்டியின் கன்றும். அந்தக கன்றின் கன்றும் தொடர்ந்து இந்தப் பார்வையை பெற்றிருக்கும். அவையனைத்தும், இனச் சேர்க்கைக்கு சரியான காளைகளை கிடைக்குமானால், தங்கள் குட்டிகளுக்கு தாயாக இருக்கும். ஆனால் இந்த முறைப்பான பார்வை கொண்ட கன்றுக்குட்டியை ஒரு மனிதன் வாங்கினால், அது சொற்பமான மந்தையையே உண்டாக்கும்” என்றார்.
நான், “ஆம், ஐயா! நன்றி!" என்றேன்.
63. அது ஸ்திரீகளுக்கும் பொருந்தும். முகத்தில் வர்ணம் பூசின, முறைப்பான கண்களைக் கொண்ட, ஏதோ ஒரு விதமான மிருகத்தைப் போல் காணப்படும் ஒருத்தியை உங்கள் மனைவியாகத் தெரிந்து கொள்வீர்களானால்; அவள் மானிட தோற்றத்தை உருக்குலைக்கிறாள், அவள் எதையுமே சாதிக்க மாட்டாள். அவள் எல்லா நேரங்களிலும் ஓடிக் கொண்டேயிருப்பாள். கிறிஸ்தவ மார்க்கம் என்பது வெளிப்புற அழகல்ல, அது உட்புறத்தில் உள்ளது; சமாதானம், அமைதி, தங்களை சமாதானமுள்ள, அமைதியான ஆவியினால் அலங்கரித்துக் கொள்ளுதல்; அதுவே கர்த்தருக்கு முன்பாக விலையேறப்பெற்ற பொக்கிஷமாய் உள்ளது. அதையே நாம் ஸ்திரீகளிலும், மனிதரிலும், யாராயிருந்தாலும், காண விரும்புகிறோம். இப்பொழுது...