77. மணவாட்டி, பூமி வெடிக்கும் போது... எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும் நேரம், மரித்தோர் நித்திரையினின்று எழும்பி, உயிரோடிருப்பவர்களுடன் ஒன்று சேர்ந்து, எடுத்துக் கொள்ளப்படுதலில் அவர்களைக் கொண்டு செல்லும். இப்பொழுது, மணவாட்டி... இப்பொழுது, பாருங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல் என்பது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு நடைபெற வேண்டிய சம்பவங்களில் ஒன்றாகும். பூமி எரியும் சம்பவம், ஆயிரம் வருட அரசாட்சிக்கும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கும் இடையே நடக்கும் ஒன்று. பாருங்கள்? பரிசுத்தவான்கள் பூமியின் பரப்பில் பாளயமிறங்கியிருக்கும் போது, சாத்தான் அந்த அன்பார்ந்த நகரத்தை சுற்றி வளைவான். தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கந்தகத்தையும் பொழிந்து அவர்களை அழித்துப் போடுவார். சரி, வேதம் அவ்வாறு உரைக்கிறது.