78. இப்பொழுது, சகோதரியே, அப்படிப்பட்ட ஒருவனுக்கு நீ கீழ்ப்படிய வேண்டியதில்லை. இல்லவே இல்லை. இந்தக் காரணத்திற்காக, நீ எல்லாவற்றையும் விட்டு தேவனிடம் இசைந்திருக்க வேண்டும். இப்பொழுது, காரியம் என்னவெனில்... அந்த மனிதன் உன்னுடன் வாழ விரும்பி, நீ கிறிஸ்தவளாக இருக்க சம்மதித்தால்... ஆனால் அவன் உன்னை குட்டை கால்சட்டை அணியவும், தலை மயிரை கத்தரிக்கவும், மற்ற காரியங்களைச் செய்யவும், தேவபக்தியற்ற இடங்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தினால், முதலாவதாக நீ தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு. அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு நீ கட்டுப்பட்டவள் அல்ல. வேதம் என்ன கூறுகிறதென்றால், "அவளும் அவனும் ஒன்றாக வாழ திருப்தி கொண்டால், அவர்கள்..."
இப்பொழுது, அந்த வேத வசனத்தை நான் குறித்து வைக்கவில்லை, ஏனெனில் சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்தக் கேள்வியை நான் கையிலெடுத்தேன். இப்பொழுது நான் ஒன்றை கையிலெடுக்கிறேன், எனக்கு நேரமில்லாமல் போய் விடுகிறது...
79. பவுல் என்ன சொல்லியிருக்கிறான் என்றால், அவிசுவாசியான ஒரு புருஷனுக்கு விசுவாசியான ஒரு மனைவி இருந்து, அவன் தேவனுக்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தூண்டாமல், அவளுடன் வாழ விரும்பினால்... "இனியவளே. நீ போய் வா, உனக்கு சபைக்கு போக வேண்டுமென்றால் போ, ஆனால் நான் வரமாட்டேன், அதில் எனக்கு விசுவாசம் இல்லை; அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. நீ போய் வா". ஆனால் அவன், "நீ போகக்கூடாது" என்றால், அது வித்தியாசமானது. அதற்கு நீ கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவனுக்கென்று எல்லாவற்றையும் விட்டு பிரிந்து விடு.