80. நல்லது, நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், இந்த கேள்விக்கு விடையாக 1 தீமோத்தேயு 3:2, தீத்து 1:6 ஐ நீங்கள் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன் (இவைகளை நான் எழுதி வைத்திருக்கிறேன்). பாருங்கள்? ஒரு மனிதன் கண்காணிப்பாளன் அல்லது பிரசங்கியின் உத்தியோகம் வகிக்க ஆவல் கொண்டால் (அல்லது சபையில் வேறெந்த உத்தியோகத்தையும்), அவன் ஒரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும். அது உண்மை! ஒரு போதகர். இப்பொழுது. அது 1 தீமோத்தேயு 3:2ம், தீத்து 1:6ம். ஆம்! நல்லது. தேவனுடைய வீட்டில் ஊழியக்காரனாயிருக்கும் ஒருவன் ஒரே மனைவியை உடையவனாயிருக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.