81. அது ஒரு நல்ல கேள்வி. இப்பொழுது, அவள் கூறியிருக்கிறாள். இங்கு, என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அவள் "என் கணவர்" என்று கூறியுள்ளதால், அதைக் கூறினது ஒரு ஸ்திரீயாக இருக்க வேண்டும். இப்பொழுது, அவள் ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்துவிட்டாள். பாருங்கள்? அவள் ஆவியில் குளிரடைந்து விட்டாள். இப்பொழுது, சகோதரியே, நீ இன்னும் சபைக்கு வந்து கொண்டிருந்து, சரியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறபடியால், உன் இரட்சிப்பை நீ இழந்து போகவில்லை, ஆனால் உன் இரட்சிப்பின் சந்தோஷத்தை தான் இழந்து போயிருக்கிறாய். ஒரு முறை தாவீது, “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும்”என்று கதறினான் (சங். 51:12). நீ இன்னும் கிறிஸ்தவளாகத்தான் இருக்கிறாய் எனவே நீ என்ன செய்ய வேண்டுமென்றால், சகோதரியே, உனக்குத் தெரிந்த வரைக்கும் எல்லாவற்றையும் புறம்பாக்கி விட்டு, தேவனை தேடி ஜெபம் பண்ணு.
82. "என் கணவர் வார்த்தைக்கு செவி கொடுப்பாரா. நான் என்ன செய்ய வேண்டும்?" இன்று காலை கூறினது போல, உப்புத்தன்மை கொண்டவளாயிரு. "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்". உன் கணவர் உன் கற்புள்ள வாழ்க்கையைக் கவனிப்பார். அவிசுவாசியான புருஷன் விசுவாசமுள்ள தன் மனைவியினால் கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்படுகிறான். கர்த்தரைத் தேடி, தாழ்மையுடன் இருந்து, எல்லா நேரத்திலும் ஜெபம் செய்து, தேவனுக்கு துதியைச் செலுத்தி, உன் கணவர் தற்போதைய நிலையில் உன்னுடன் வாழ சித்தம் கொண்டுள்ள வரைக்கும் அவருடன் தயவாய் நடந்து கொள்.