94. நல்லது, ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் ஒரு தாய் அதை அறியாமலிருப்பாளா? அவள் அதை அறியாமலிருக்க வேண்டுமென்றால், அவள் மயக்கமுற்ற நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அதை அறியாமலிருக்க முடியாது. ஏதோ ஒன்று உங்களில் நடக்கிறது. பாருங்கள்? ஏதோ ஒன்று உங்களை மாற்றுகிறது. உங்கள் முழு அமைப்பு, உங்கள் ஆவிக்குரிய அமைப்பு முழுவதும் மறுபடியும் புதிதாகின்றது, வேதம் கூறுவது போல் நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகி விடுகின்றீர்கள். அதை நீங்கள் உணர்வீர்கள்...
95. இப்பொழுது. நீங்கள், "சகோ. பிரன்ஹாமே, அப்படி யானால் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஒரு மனிதன் அந்நியபாஷையில் பேச வேண்டும் என்பதை நீங்கள் நம்பவுதில்லை" எனலாம். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் என்பதை நிரூபிப்பதற்காக அல்ல.
96. என் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் தேவனிடத்தில் கேட்பீர்களானால், தேவன் அதை உங்களுக்குத் தந்தருளுவார். ஆனால் இதை உங்களிடம் கூற முற்படுகிறேன். அதாவது, பரிசுத்த ஆவியைப் பெற்றிராமல் அந்நிய பாஷையில் பேசும் அநேக ஜனங்களை நான் அறிவேன். தனக்கும் தன் சபையாருக்கும் உண்மையாயுள்ள எந்த ஒரு போதகரும் இதைப் பற்றி சபையாரிடம் கூறாமலிருக்க மாட்டார். பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும்.
97. பவுல், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், வேதத்திலுள்ள சகல இரகசியங்களையும் நான் அறிந்திருந்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், இவையனைத்தையும் செய்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை" என்கிறான். அவன் மேலும், "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" என்கிறான் - அதாவது நிறைவானது தெரியப்படுத்தப்படும் போது.
அதன் பேரில் என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. அதை இன்றிரவு பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன். அது முத்திரைகள் திறக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதைக் குறித்தது. ஒருக்கால் இந்த கேள்விக்கு அது சரியான பதிலாய் அமையும்.