என்னை மன்னியுங்கள். இது மையினால் எழுதப்பட்டுள்ளது, இங்கு எனக்கு வியர்வை வந்து கொண்டிருக்கிறது, அது இதன் மேல் ஊறிப்போய்விட்டிருக்கிறது. நாம் பார்ப்போம்.
உலகத்திலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்கவில்லை, இவர்கள் இன்னுமாக சுவிசேஷத்தை கேட்டிராமல் இருக்கும் பட்சத்தில், எப்படி நம்முடைய கர்த்தரால் இப்பொழுது வரமுடியும், அவர்களில் மூன்றில் இரண்டு பாகம்?
நல்லது, அது முற்றிலுமாக சரி. நான் என்ன நினைக்கிறேன் என்பதை உங்களுக்கு கூறுகிறேன்.
116. இங்கே சில காலத்திற்கு முன்பு சூடான் மிஷனின் தலைவரான டாக்டர், ரிட்ஹெட், அநேக பட்டங்களுடன், அவர் எத்தனை பட்டங்களைப் பெற்றிருக்கின்றார் என்று அவருக்கே தெரியாத அளவிற்கு பட்டங்களைப் பெற்றிருந்த அவர், சுமார் ஒரு வருடம் ஆறு மாதங்கள் அதற்கும் முன்னர் அங்கே என்னுடைய வீட்டிற்கு வந்தார். இவரும் இப்பொழுது பரிசுத்த ஆவியை பெற்று மெக்சிக்கோவில் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்ற இந்த பாப்டிஸ்ட் ஊழியக்காரரானான ஹைமான் ஆப்பில்மான் என்பவரும் என் வீட்டில் வந்து நின்றனர். ஆகவே அவர் வீட்டிற்கு வந்து, அவர் “சகோதரன் பிரன்ஹாம்” என்றார், “நீர் பெந்தெகொஸ்தேயினருடன் தொடர்புகொண்டுள்ளீரா?”
நான், “ஆம் ஐயா” என்றேன்.
அவர், “நான் டாக்டர். ரீட்ஹெட்” என்று கூறினார்.
நான், “உம்மை தெரிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளே வருவீரா?” என்றேன்.
அவர், “சரி, ஐயா,” என்றார்.
117. அவர் உட்கார்ந்து, “நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் பாப்டிஸ்ட் சபையில் நியமிக்கப்பட்டீர் என்று நான் கேள்விப்பட்டேன்” என்றார்
118. நான், “அது சரியே” என்றேன். நான், “அதை விட்டு நான் வெளியே வந்து விட்டேன், ஏனெனில் என்னால் அதை பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாப்டிஸ்ட் சபை என்ன கூறுகிறதோ அதை அல்ல. வேதாகமம் என்ன கூறுகின்றதோ அதை நான்-நான் பிரசங்கிக்கவே விசுவாசிக்கிறேன், பாப்டிஸ்ட் சபைக்கு ஏதிராக என்னிடத்தில் ஒன்றுமில்லை, அவர்கள் மற்ற சபையைப் போல நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்றேன். நான் “நான் விடுதலையாக இருக்கும்படியாய், நான் அதனின்று வெளியே வந்தேன்” என்று கூறினேன்.
அவர், “நல்லது தான், நாங்களும் பாப்டிஸ்டுகள் என்று உங்களுக்குத் தெரியுமா” என்று கூறினார்.
நான், “ஆம், ஐயா” என்றேன்.
119. ஆகவே அவர் “நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து என்ன? நான் இருந்திருக்கிறேன், அவர்கள் நாற்காலிகளை உதைத்து குதித்து, சத்தமிட்டு, இன்னுமாக தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன்” என்றார்.
120. நான், “நானும் கூட அவை எல்லாவற்றையுமே கண்டிருக்கிறேன்” என்று கூறினேன். ஆனால் நான் “சகோதரனே அதற்கு பின்னால், அங்கே ஒரு தூய்மையான உண்மையான ஒழுங்காகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருக்கின்றது” என்று கூறினேன்.
121. அவர் “சகோதரர் பிரன்ஹாமே, நான் அதை பெற்றுக் கொள்ள முடியுமா? எனக்கு அநேக பட்டங்கள் உண்டு! நான் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவன், நான் இது, நான் பி.எச்.டி (Ph.D) பட்டம் பெற்றிருக்கிறேன், எனக்கு இளங்கலையியல் பட்டம் உண்டு, எல்லா விதமான பட்டமும், எல்லா தேசங்களிலிருந்து கெளரவ பட்டங்களுடன் அதைப் போன்ற காரியங்களும் என்னிடம் உண்டு,” என்றார். மேலும் “ஆகவே இயேசு கிறிஸ்து எங்கேயிருக்கிறார்?” என்று கேட்டார்.
122. நான், “நல்லது சகோதரனே, அவர் சரியாக இங்கே அறையில் இருக்கின்றார்,” என்றேன்.
123. அவர் “நான் நின்று ஒரு வைராக்கியமான முகமதியனிடம் பேசினேன், அவர் அமெரிக்காவில் படித்திருந்தார், நான் அவரிடம், “உன்னுடைய பழைய மரித்து போன தீர்க்கதரிசியை துறந்து விட்டு உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்” என்று கூறினேன். அவர் “அன்புள்ள ஐயா, என்னுடைய முகமது செய்வதை விட உங்களுடைய உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு எனக்கு அதிகமாக என்ன செய்யமுடியும், அவர்கள் இருவரும் வேதாகமங்களை எழுதினர், அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்கள் இருவரும் மரித்தனர். மரணத்திற்கு பிறகு நமக்கு ஒரு ஜீவன் உண்டு என்று அவர்கள் இருவரும் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்.” என்று கூறினார்.
124. அவர் “ஓ! ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் சந்தோஷத்தை கொண்டிருக்கிறோம்” என்றார்.
125. அவர், “நாங்களும் கூடத்தான். என்னால் கூட உங்களைப் போலவே உளவியல் தத்துவத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்றார். அது சரிதானே. “அவர் கூறினார், நல்லது பாருங்கள், எங்கள் முகமது... உங்கள் கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்களே” என்றார்.
126. டாக்டர் ரீட்ஹெட், “என்ன, அவர் உயிரோடு எழுந்து விட்டார்!” என்றார்.
127. அவர், “அதை நிரூபியுங்கள்” என்றார், “அதை நிரூபியுங்கள்!” என்றார், “அதை நிரூபிக்க இரண்டாயிரம் வருடங்கள் உங்களுக்கு இருந்தது, ஆனால் அதைக் குறித்து உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தான் கேள்விப்பட்டிருக்கின்றனர்” என்றார், “எங்கள் முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்கட்டும், முழு உலகமே இரண்டே நாட்களில் அதைக் குறித்து தெரிந்து கொள்ளும்” என்றார். அவர் கூறுவது சரியே. “அவர் கூறினார், எங்கள் முகமது மரித்த பிறகு ஜீவனைத் தவிர வேறெதையும் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை. உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ உங்களுக்கும், போதகர்களாகிய உங்களுக்கும், அவர் செய்த அதே காரியங்களை நீங்களும் கூட செய்வீர்கள் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றாரே. ஆகவே போதகர்களாகிய நீங்களும் அதை இப்பொழுது செயல்படுத்துங்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து விட்டார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்”.
128. அவர், “சகோதரன் பிரன்ஹாம், தூசியில் அதைப் போன்று என் காலை சரேலென்று தேய்த்து பேச்சின் பொருளை மாற்றி விட்டேன்” என்று கூறினார். அந்த எல்லா பட்டங்களுடன்! ஏன்? அந்த பட்டங்களில் தேவன் எங்கேயிருக்கிறார்? ஒரு பி.எச்டி (Ph.d) பட்டங்கள் அல்லது டி.டி (D.D) பட்டங்கள் இன்னும் போன்றவற்றின் மூலமாக தேவன் அறியப்படமாட்டார்.
129. சாதாரண விசுவாசத்தின் மூலமாயும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாயும் தேவன் அறியப்படுகின்றார். அது தான் ஒரே ஒரு வழியாகும். தேவன், உனக்குள் இருந்து அவர் உன்னை “ஒரு தேவனுடைய குமாரனாக” கொண்டு வருகிறார், உன்னுடைய சுபாவத்தை மாற்றுகிறார். ஆகவே அந்த அதே காரியம், இந்த எல்லா காரியங்களையும் உண்டாக்கி தம்முடைய வார்த்தையின் மூலமாக உலகத்தை பேசி சிருஷ்டித்த சிருஷ்டிகராகிய தேவன் - அந்த அதே ஆவி உனக்குள்ளாக இருத்தல், அப்பொழுது தேவன் கூறுகின்ற எல்லாவற்றையும் நீ விசுவாசிக்கின்றாய். கூடாதது ஒன்றுமில்லை; நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்.
130. நீங்கள் ஒரு சிறிய போதகத்தை நம்பி நின்று “நான் அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளமாட்டேன். தேவன் இதை செய்வார் என்று என்னால் விசுவாசிக்க முடியவில்லை. என்னால் விசுவாசிக்க முடியவில்லை” என்று கூறாதீர்கள். நீங்கள் உங்கள் அவிசுவாசத்தினாலே தேவனை மட்டுப்படுத்தி விடுகிறீர்கள். அது தான்.
131. ஆகவே டாக்டர். ரீட்ஹெட் அங்கே நின்று “சகோதரன் பிரன்ஹாமே, ஒரு மனிதனால் உண்மையாகவே பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்றார்.
132. நான், “ஆம், ஐயா, டாக்டர். ரீட்-, உங்களால் முடியும்” என்றேன்.
133. அவர், “தேவன் என்னுடைய இருதயத்தை அறிவாரானால்; நான் விசுவாசிக்கிறேன், நீங்கள், சரியாக இப்பொழுது அபிஷேகத்தின் கீழாக அறிந்திருக்கிறீர்கள், நீங்கள் எனக்கு... நான் உண்மையயைக் கூறுகிறேன் என்று நம்புகிறீர்களா?” என்றார்.
நான், “அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்!” என்றேன்.
அவர், “எப்படி அதை நான் பெற்றுக் கொள்ள முடியும்?” என்றார். - நான், “முழங்காற்படியிடுங்கள்” என்று கூறினேன்.
134. அங்கே அவர் அந்த பழைய காபி மேஜையின் பக்கத்தில் முழங்கால்படியிட்டார். இங்கிருந்துதான் அதை நான் எடுத்தேன். இங்கே சற்று முன்னர் அதை சரி செய்த அந்த மனிதன் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவர், அங்கே கீழே முழங்கால்படியிடுகையில், மேலே இருந்த கண்ணாடியை உடைத்துவிட்டார். அவர் “தேவனே, என்னுடைய பாவமான ஆத்துமாவின் மேல் இரக்கமாயிரும்” என்றார். நான் அவர் மீது கைகளை வைத்தேன், அங்கே அவர் மீது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் சரியாக வந்தது. அது சரி.
135. ஆகவே அவர் இப்பொழுது எல்லா இடத்திலும் அந்த பாப்டிஸ்ட் சபையை கொழுந்து விட்டெரியச்செய்திருக்கின்றார்! அது அங்கே முழுவதுமாகச் சென்றது. அது சரி.
136. சுவிசேஷமானது... இயேசுவால் அதுவரை... வரமுடியாது.
137. கவனியுங்கள்! நாம் உலகம் முழுவதுமாக கைப்பிரதிகளை கொடுக்கிறோம். அந்த கைப்பிரதிகள் கொடுக்கப்படாமல் உங்களால் எந்த ஒரு மூலைக்கும் செல்லமுடியாது, வேத கல்லூரி படிப்பின் மூலம் எவராவது அங்கே வருகின்றனர். நீங்கள் இன்று அயல்நாடுகளுக்கு சென்று உங்களை ஒரு “மிஷனரி” என்று அழைத்துக் கொள்ளும்போது, அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பதைப் பாருங்கள். நீங்கள் இந்தியாவுக்குள் நடந்து சென்று “நான் ஒரு மிஷனரி ஊழியக்காரன்” என்று கூறிப்பாருங்கள்.
138. “நல்லது, நீங்கள் எங்களுக்கு என்ன போதிக்கப்போகிறீர்கள்?” அவர்களுக்கு வேதாகமத்தை குறித்து அதிகமாக தெரியும். இதைக் காட்டிலும்... அங்கே இருக்கின்ற அவர்களுடைய பிள்ளைகளில் சிலர், இங்கே அமெரிக்காவில் இருக்கின்ற அவர்களுடைய போதகர்களுக்கு அதைக் குறித்து தெரிந்துள்ளதைக் காட்டிலும், அதைக் குறித்து இன்னும் அதிகமாக அவர்களுக்கு தெரியும். அது ஒரு கிழக்கத்திய புஸ்தகம் தானே. ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அமெரிக்கா என்னும் தேசம் வருவதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்கள் சுவிசேஷத்தை கொண்டிருந்தனர். பரிசுத்த தோமா, அவர் பிரசங்கித்த அந்த மகத்தான சபை, இன்னும் அது இந்தியாவில் நின்று கொண்டிருக்கின்றது. உங்களுடைய எந்த ஒரு உபதேசமும் அவர்களுக்கு தேவையில்லை, அவர்களுக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும். அவர்கள் “எங்களுக்கு நீங்கள் என்ன உபதேசிக்கப் போகிறீர்கள்?” என்று கூறுகின்றனர்.
“நல்லது நாங்கள் எல்லாரும் அமெரிக்க மிஷனரிமார்கள்.”
139. “நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசிக்கப்போகிறீர்கள், எப்படி விஸ்கி குடிப்பது என்றா? அங்கே உங்கள் சபைகளில் அதைத்தான் முழுவதுமாக நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்! எப்படி சிகரேட் புகைப்பது என்றா? எப்படி எங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்வது என்று இன்னும் மற்றவைகளையுமா போதிக்கப்போகிறீர்கள். அதை நீங்கள் செய்யப்போகிறீர்கள் என்றால், அது எங்களுக்குத் தேவையில்லை” என்றார்கள். “நீங்கள் ஏதோ ஒரு புதிய வேதத்தத்துவத்தையோ அல்லது எதோ ஒன்றுடன் நீங்கள் இங்கே வருவீர்களானால், வார்த்தையில் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு போதிக்க முயற்சிப்பீர்களானால், அதைக் குறித்து உங்களைக் காட்டிலும் அதிகமாக எங்களுக்கு தெரியும்” என்றார்கள். அது சரி. அவர் “வார்த்தை என்ன கூறுகிறதோ அதை நீங்கள் நிரூபித்துக்காட்ட நீங்கள் வருகிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம்” என்றார். ஆமென்! அதோ புரிகின்றதா. அவர்கள் அதற்கு தான் தாகம் கொண்டிருக்கின்றனர்.
140. என்னுடைய வார்த்தையை குறித்து கொள்ளுங்கள், உங்களுடைய வேதத்தின் பக்கங்களில் இதை எழுதிக்கொள்ளுங்கள், ஏனெனில் இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும், “நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் இந்தியாவில் இறங்கும் போது, பத்தாயிரம் பத்தாயிரம்கணக்கானவர்கள் இரட்சிக்கப் படுவதைக் குறித்து நீங்கள் கேள்விப்படப் போகிறீர்கள்”. பரிசுத்த ஆவியானவர் அதைக் கூறியிருக்கின்றார். நான் அதை என்னுடைய வேதாகமத்தில் எழுதி வைத்திருக்கின்றேன். சரியாக இங்கே பத்தாயிரக்கணக்கான வேதாகமங்களில் அது எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது, அந்த சிறு பையன் உயிரோடெழுப்பப்பட்டது போல், ஒரு தரிசனத்தினால் அவர் கூறினது போலவே. “அங்கே அவர்களில் மூன்று இலட்சம் பேர்கள் இருக்கின்றனர்.” ஆகவே நீங்கள் அது சரியா என்று பாருங்கள்! அப்படித்தான் அங்கே சுவிசேஷமானது ஓரிரவுக்குள்ளாக பிரசங்கிக்கப்படப் போகின்றது. அது இடத்திற்கு இடம் அப்படியே எங்கும் விரிந்து பரந்தகன்று செல்லும்.
141. ஆப்பிரிக்காவில், ஒரே ஒரு பீட அழைப்பில் தேவனை ஏற்றுக்கொண்ட அந்த முப்பதாயிரம் பேரிடம், “உங்கள் கரங்களை உயர்த்தி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” ஏதோ ஒரு அமெரிக்க மிஷனரி இங்கே வந்து சபைகளில் மொழிகளை நீங்கள் கற்றுக் கொள்ளத்தக்கதாக உங்களுக்கு போதிக்க நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். ஒரு மிஷனரியை அங்கே அனுப்ப, தாய்மார்கள் சலவை வேலை செய்கின்றனர், அவர்கள் அங்கே சென்று ஒரு பெரிய அருமையான காரில் சவாரி செய்து, வசதியான இடத்தில் வாழ்ந்து கொண்டு சில கைப்பிரதிகளை கொடுத்து விட்டு திரும்ப வந்து விடுகின்றனர். அது அவர்களுக்கு தேவையில்லை; அவர்கள் அதைத் தான் நிரூபித்தனர்.
142. சில இரவுகளுக்கு முன்னர் இங்கே இந்த யூத மருத்துவமனையில், ஊழியக்காரர்களுடனும் மருத்துவர்களுடனும் தெய்வீக சுகமளித்தல் என்ற பொருளின் பேரில், ஒரு கூட்டத்தில் நான், நான் பேசினேன், “நீங்கள் என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைத்தீர்கள், அந்த கர்த்தருடைய தூதன்... நான் கூறினபோது எனக்கு ஒரு தீயக்கனவு உண்டானது என்று கூறினீர்கள்,” என்று கூறினேன். நான், “நம்முடைய சொந்த சபையும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான டாலர்களை செலவு செய்து மிஷனரிகளை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. நான் அங்கே சென்ற போது, அவர்கள் சிறு மண் விக்கிரகங்களை செய்து கொண்டிந்தனர், மண் விக்கிரகங்களிலிருந்து உதவி பெற முயற்சித்து கொண்டு, தங்களை “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்துக் கொண்டிருந்தனர்” என்றேன். மேலும் நான், “ஆகவே நீங்கள் அதிதீவிர மூடபக்தி வைராக்கியம் என்று எதை அழைத்தீர்களோ அது, நம்முடைய இலட்சக்கணக்கான டாலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மிஷனரிமார்கள் கடந்த நூற்று ஐம்பது வருடங்களாக செய்துள்ளதைக் காட்டிலும் ஐந்து நிமிடங்களில் கிறிஸ்துவுக்கு அதிகமான ஆத்துமாக்களை சம்பாதித்தது” என்று கூறினேன். அவர்கள் தங்கள் வாய்களை மூடிக்கொண்டனர், அது தான்! அதோ அது இருக்கிறது. நான், அந்த மனிதரிடம், “அறிவு புகட்டிக்கொள்ள நீங்கள் ஒருக்காலும் - ஒருக்காலும் முயற்சிக்க வேண்டாம், இந்த சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு ஒரு வெள்ளை மனிதனும் கூட செல்ல முடியாத, நோய்களுள்ள, நாகரீகத்திற்கு புறம்பான தேசத்திற்கு அங்கே செல்லுங்கள்.” என்று கூறினேன்
143. டர்பன் நகர் செய்தித்தாளிலிருந்து ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன், அது “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வயதான மனிதன் கூட பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொண்டு சராசரியாக ஒரு வாரத்திற்கு ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்து கொண்டிருக்கிறார்.” அவ்விதமாகத்தான் சுவிசேஷமானது சென்று கொண்டிருக்கின்றது, சிறிது சிறிதாக, முழு உலகத்தை சுற்றிவர இன்னும் ஆறு மாதங்கள் மாத்திரமே தேவையாயுள்ளது. சரி.