98. அந்த அம்மணியை எனக்குத் தெரியாது. அம்மணியே நீ இங்கிருக்க நேர்ந்தால், இதுதான் உன் கோளாறு என்று நினைக்கிறேன். ஏதோ ஒன்று உனக்கு சம்பவிக்க நீ அனுமதித்ததன் காரணத்தால், அது உனக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் “வெள்ளை மணல்" தூய்மைக்கும் நீதிக்கும் எடுத்துக் காட்டாயுள்ளது. சாத்தான் ஏதோ ஒன்றை உன் மேல் சுமத்த நீ அனுமதித்துக் கொண்டிருக்கிறாய். உன் கனவு, தவறு எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ பயம் கொண்டிருக்கிறாய், இதை நீ செய்வதன் மூலம். அதைக் குறித்து யோசித்துக் கொண்டேயிருப்பதன் மூலம் உன் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் பயந்து போகும்படி செய்கிறாய். அவ்விதம் செய்வதை நிறுத்து; தேவனால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை உரிமை கோரு. நீ வெள்ளை மணலில் இருப்பதாக கண்ட சொப்பனத்தின் அர்த்தம், எல்லாமே சரியாயுள்ளது என்பதை நிரூபிக்கிறது. நீ தான் பயந்து போயிருக்கிறாய்.
99. நீ குடும்பத்திலுள்ள ஒருவர் பயந்து போகும்படி செய்தால் அது அடுத்த அங்கத்தினருக்கு, அடுத்த அங்கத்தினருக்கு பரவுகிறது. அப்பொழுது நீங்கள் அனைவரும் பயந்து விடுகிறீர்கள். குடும்பத்திலுள்ள ஒருவர் ஏதாவதொன்றைக் குறித்து கவலை கொண்டால், அது அடுத்தவருக்கு, அடுத்தவருக்கு பரவி விடுகிறது. அப்பொழுது குடும்பம் முழுவதுமே கவலைக்குள்ளாகின்றது. அது சாத்தான். குடும்பத்திலுள்ள ஒருவர் களிகூர்ந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர் அவருடன் களிகூரட்டும். எனவே குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அதைச் செய்ய முயலுங்கள்.
100. பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உதவி செய்யுங்கள். அம்மா, நீ... அப்பா, உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள். அந்த இருண்ட, அவிசுவாசமான ஆவி உங்களைப் பீடிக்க இடங்கொடாதீர்கள். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். தேவனால் அளிக்கப்பட்ட உரிமைகள் உங்களுக்கு உண்டு. “புண்ணியம் எதுவோ, புகழ்எதுவோ, அதையே சிந்தித்துக் கொண்டிருங்கள்" என்று வேதம் உரைக்கிறது. (பிலி.4:8). தவறான காரியத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள்.
சகோதரியே, அதுவே உன் தொல்லை என்று நினைக்கிறேன், அருமை சகோதரியே.
இதன் பேரில் நீண்ட நேரம் நிலைத்திருக்கக் கூடும், ஆனால் நான் வாக்களித்தபடி, இன்னும் இருபது நிமிடங்களில்... எத்தனை கேள்விகளைப் பார்க்க முடியுமோ, அவைகளைப் பார்க்க விரும்புகிறேன்... விடை திருப்தியளிக்கவில்லை என்றால், அதை மறுபடியும் மேசையின் மேல் வைத்து விடு, அதை மீண்டும் பார்ப்போம்.