101. நல்லது, அது ஒரு நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. நான் அந்த மனுஷகுமாரன் அல்ல, ஒரு மனுஷகுமாரன். இவ்விரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இயேசு கிறிஸ்து மனுஷ குமாரன், தேவ குமாரன், தாவீதின் குமாரன்.
102. இந்த நபர் இந்த கேள்வி கேட்டதன் காரணம்; அல்லது இவ்விதமான கருத்து நிலவி வருவதன் காரணம், ஜனங்கள் என்னை ஞானதிருஷ்டிக்காரனாக (scer) எண்ணுகின்றனர். நான் ஒருபோதும் அவ்விதம்... அதன் பேரில் என்னை பயங்கரமாக திட்டுகின்ற ஒரு கேள்வி என்னிடம் உள்ளது. பாருங்கள்? ஆனால் நான் – நான் நான் - நீங்கள் நீங்கள்... இந்தக் கேள்விகளை நான் படிக்கும்போது, நான் இந்தவிதமாக ஏன் பதிலளிக்கிறேன் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். நான் ஏதாவதொன்றைச் செய்ய நிச்சயமாக வழி நடத்தப்படும் வரைக்கும்; அப்பொழுது நான் கூற வேண்டியதைக் கூறுவேன். ஆனால் அந்த நேரம் இன்னும் வரவில்லை.
103. எனவே நான் அபிஷேகிக்கப்பட்ட மனுஷகுமாரன் அல்ல. நான் அவருடைய தீர்க்கதரிசி என்று உரிமை கோருவதில்லை. அநேக முறை, இதை நான் கூறவில்லை என்று நினைக்கும் போது. இதை கூறியிருக்கிறேன். நான் கூறியுள்ளதை ஒலிநாடாவில் கேளுங்கள். சில சமயங்களில் இதை நான் கூறுகிறேன். ஏனெனில், 'தீர்க்கதரிசி' என்னும் ஆங்கிலச் சொல் 'பிரசங்கி' என்று அர்த்தம் கொண்டது. அது எல்லோருக்கும் தெரியும். அகராதியைப் பாருங்கள். தீர்க்கதரிசி என்றால் 'பிரசங்கி' என்று ஆங்கில அகராதிகூறுகிறது. ஆனால் எபிரேயு அல்ல கிரேக்க மொழியில் 'தீர்க்கதரிசி' என்றால், "ஞானதிருஷ்டிக்காரன், ஒன்றை முன் கூட்டிக் கண்டு, அதை முன்கூட்டி அறிவிப்பவன்” என்று பொருள். ஆனால் ஆங்கில அர்த்தத்தின்படி, அது 'பிரசங்கி'.
104. எனவே, என்னை உங்கள் சகோதரன் என்று அழைத்துக் கொள்வதை தவிர, மற்ற எந்த பெயராலும் என்னை அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் உங்கள் சகோதரன், நீங்கள் என்னை சகோ.பில் அல்லது சகோ. பிரன்ஹாமாகக் கருதுங்கள், அல்லது நீங்கள் அதைக் குறித்து என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அது நன்றாயிருக்கும். வேறெந்த... நீங்கள் என்ன விசுவாசிக்கின்றீர்களோ, அதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்?
105. இப்பொழுது, மற்ற கேள்வி என்ன? நான் இதில் லயித்துப் போய் விடுகிறதால், மற்றவைகளை மறந்து விடுகிறேன். கேள்விகளில் ஒன்று, நான் மனுஷகுமாரனா என்பது. மற்றது இது தான் என்று நினைக்கிறேன்... "அக்கினி ஸ்தம்பம் மனுஷகுமாரனா?" இல்லை! அக்கினி ஸ்தம்பம் என்பது அபிஷேகம் செய்யும் ஒன்று.
106. அக்கினி ஸ்தம்பம்... இது உங்களுக்கு சற்று ஆழமாக இருக்கலாம். இங்குள்ள சில வேத பண்டிதர்களுக்கு - இங்குள்ள சகோ.டாக்டர் வேய்லுக்கும், ஆர்கான்ஸாவிலிருந்து இங்கு வந்துள்ள சில போதர்களுக்கும், இங்குள்ள எனது சில நண்பர்களுக்கும் இது ஒருக்கால் தெரிந்திருக்கலாம்.
107. அக்கினி ஸ்தம்பம் என்பது தேவனிடத்திலிருந்து புறப்பட்டு சென்ற 'லோகாஸ்' (Logos). 'லோகாஸ்' என்பது உண்மையில் தேவனுடைய பரிபூரணத்தின் தன்மையாகும் (attribute). தேவன் காணக்கூடிய ரூபமான போது, அந்த மகத்தான ஆவியின் அபிஷேகம் புறப்பட்டுச் சென்றது. அது தன்னைத் தாழ்த்தி, இறங்கி வருகிறது. பிதாவாகிய தேவன், இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேலேயிருந்த 'லோகாஸ்'... அவர் பரிசுத்தமுள்ளவரானதால், அவரால் 'பாவத்தைச் சகிக்க முடியவில்லை. ஏதேனில் அதற்காக இரத்தம் செலுத்தப்பட வேண்டியதாயிருந்தது. பிறகு அந்த லோகாஸ் மாம்சமாகி, நமது மத்தியில் வாசம் பண்ணினார்; லோகாஸ் வாசம் செய்த மானிட சரீரம் பலியாக செலுத்தப்பட்டது.
108. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட போது... அதன்பிறகு தேவன் மனிதனை மீட்டுக் கொள்வதற்கென மனுஷ சாயலானார்; அது மனிதனையும் தேவனையும் ஒன்றாக இணைத்தது. பரலோகமும் பூலோகமும் தழுவி ஒன்றையொன்று முத்தம் செய்து கொண்டன. லோகாஸ் மாம்சமாகி நமது மத்தியில் வாசம். செய்த போது, தேவனும் மனிதனும் பிதாத்துவத்திலும் குமாரத்துவத்திலும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
109. இயேசு, "நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்" என்றார் (யோவான் 16:28). அது சரியா? அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, தேவனுடைய வலது கரத்தில் (பாரிசத்தில்) வீற்றிருக்க, அவருடைய சரீரம் மேலே எடுக்கப்பட்ட போது... தேவனுக்கு வலது கரம் உள்ளதாக நான் கூற முற்பட வில்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். வலது கரத்தில் என்பது "தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும்" குறிக்கிறதாயுள்ளது. அவருடைய நாமத்தினால் பரலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் பெயரிடப்பட்டு, அதற்கு கீழ்ப்படிந்துள்ளது. பூலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் அந்த நாமத்தினால் பெயரிடப்பட்டு அதற்கு கீழ்ப்படிந்துள்ளது. இயேசு கிறிஸ்து என்னும் நாமம் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமமாயுள்ளது.
110. இப்பொழுது, அவருக்குள் வாசம் செய்திருந்த தேவனுடைய ஆவியான, அபிஷேகமான, இந்த லோகாஸ், இரத்தத்தின் பரிசுத்தமாக்கும் கிருபையினால், அநேக தேவகுமாரர்களைக் கொண்டு வந்தது, அவர்களும் இந்த அதே லோகாஸினால் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளனர்.
111. இப்பொழுது, பெந்தெகொஸ்தே நாளில், அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, அக்கினிமயமான நாவுகளாகப் பிரிந்து ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அவர்களுடைய நாவுகள் அல்ல, அக்கினி மயமான நாவுகள், தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டம் மக்களின் மேல் அமர்ந்தது. அவர்கள் இந்த அக்கினி ஸ்தம்பத்தினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர். அது தேவன் தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொண்டார் என்பதைக் காண்பிக்கிறது. உங்களுக்கு புரிகிறதா? லோகாஸாகிய தேவன், தம்மை மனிதனுக்குள் பிரித்துக் கொள்ளுதல்! தேவன் ஒரு நபருக்குள் அல்ல, அவர் உலகம் முழுவதிலுமுள்ள தமது சபைக்குள் இருக்கிறார். ஆகையால்தான் இயேசு, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள்" என்றார் (யோவான் 14:12). ஜேம்ஸ் அரசனின்வேதாகமம் "பெரிய கிரியைகள்" என்றுரைக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் சரியான மொழி பெயர்ப்பு “இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளையும் செய்வீர்கள்" என்பதே. தேவன் இயேசு என்னும் ஒரு மனிதனில் அடைக்கப்பட்டு (bottled) அவரில் உட்பட்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ அவர் உலகம் பூராவிலும் வியாபித்திருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபை முழுவதிலும் அடைக்கப்பட்டு, அதில் உட்பட்டிருக்கிறார்.
112. இப்பொழுது, தேவன் நம்முடன் நம்முடைய இருதயங்களில் பேசிக் கொண்டிருக்கும் இதே தருணத்தில், அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிறார், அவர் ஆசியாவில் இருக்கிறார், அவர் ஐரோப்பாவில் இருக்கிறார், அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். விசுவாசிகள் எங்கெல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் அவர் இருக்கிறார்.
113. இப்பொழுது, அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதலுக்குப் பிறகு, அவர் பரிசுத்த ஆவியாக வந்தார். பவுல் - அப்பொழுது அவன் சவுல் என்று அழைக்கப்பட்டான் தமஸ்குவுக்குப் போகும் வழியில், அவன் லோகாஸாகிய அக்கினி ஸ்தம்பத்தால் கீழே வீழ்த்தப்பட்டான். ஒரு யூதன், அதே லோகாஸ் தான் அவனுடைய ஜனங்களை வனாந்தரத்தில் வழி நடத்திச் சென்றது என்பதை அறிந்திராமல் போனால், அந்த அக்கினி ஸ்தம்பத்தை அவன் “ஆண்டவரே” என்று ஒருக்காலும் அழைத்திருக்க மாட்டான். பாருங்கள்? அது மனுஷகுமாரன் அல்ல, அது லோகாஸ்.
114. இப்பொழுது, இதை நாம் பயபக்தியோடும், அன்போடும், மரியாதையோடும் கூறுகிறோம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால், லோத்தின் காலத்திற்கு முன்பு, இல்லை, சோதோமில் லோத்தின் நாட்களில் நடந்தது போல, 'கடைசி நாட்களில் மனுஷகுமாரன் தம்மை மறுபடியும் வெளிப்படுத்துகிறார், அவர் தம்மை மறுபடியும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த கடைசி நாட்களில், இயேசுவின் மேல் தங்கியிருந்து, அங்கிருந்து மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிச் சென்ற லோகாஸ் பூமிக்கு இறங்கி வந்துள்ளது. (நான் ஏதோ ஒன்றைக் கூறப்போனேன், ஆனால் நான் ஒலிநாடாவை கவனித்தேன். நீங்கள் சொன்னாலும் அவர்கள் அதை நம்பமாட்டார்கள். அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அவர்கள்... ஜனங்கள் அதை நம்பமாட்டார்கள். அதை கூறாமல் விட்டு விடுகிறேன்- அவர் இறங்கிவந்துள்ளார், இப்பொழுது புலன் விசாரணை நியாயத்தீர்ப்பு (investigating judgement) போன்ற ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.
115: இப்பொழுது, இன்று பூமியிலுள்ள இந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் விஞ்ஞானப் புகைப்படக் கருவிகளாலும் கூட முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது. அதன் புகைப்படம் அதோ அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படம் இப்பொழுதும் அங்குள்ளதென்று நினைக்கிறேன், அது சரியா? அது அங்குள்ளதா? நமக்குள்ள மிகச் சிறந்த ஒருவரால் அது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க போலீஸ் துப்பறியும் பிரிவில் கைரேகை மற்றும் தஸ்தாவேஜுகளை ஆராயும் பகுதியின் தலைவரான ஜார்ஜ். ஜே. லேஸி என்பவர், “சங்கை. பிரன்ஹாமே, நானும் கூட அதை மனோதத்துவம் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால் ஒளி புகைப்படக் கருவியின் 'லென்ஸ்' மேல் பட்டது. அதை நான் நான்கைந்து நாட்களாக அல்ட்ரா வயலட் கதிர்களைக் கொண்டு பரிசீலனை செய்தேன், ஒளி 'லென்ஸ்' மேல் பட்டது. இந்த லென்ஸ் மனோதத்துவத்தை புகைப்படம் எடுக்காது" என்று கூறினார். இப்பொழுது அது அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு விட்டது.
116. அது செய்யும் கிரியைகளைக் கவனியுங்கள். நமது மத்தியிலுள்ள அது, ஒரு காலத்தில் பாலஸ்தீனாவில் வாழ்ந்த அதே இயேசுவை நிரூபிப்பதாய் உள்ளது. அவர் மேல் தங்கியிருந்த அதே ஆவி, ஒரு சரீரத்தின் வழியாக வந்து மறுபடியும் தலைமைக்கு (Headship) வந்து முடிகிறது. அவர் சீக்கிரமாக வந்து சரீரத்தை உரிமை கோரி பெற்றுக் கொள்வார். ஆமென்! தலையானது சரீரத்துக்கு வருகிறது. உங்களுக்கு புரிகிறதா? அது தேவ குமாரன், மனுஷ குமாரன், தாவீதின் குமாரன், இருக்கிறேன் என்பவராய், சாரோனின் ரோஜா, பள்ளத் தாக்கின் லீலி புஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கும்.
117. நான் அவரல்ல; நான் அவருடைய ஊழியக்காரன். அக்கின ஸ்தம்பம் அவரல்ல; அது ஆவியின் ரூபத்தில் உள்ளது. (பாருங்கள்?) அது மனுஷகுமாரனின் மேல் தங்கியிருந்து, இப்பொழுது மனுஷகுமாரர்களை அபிஷேகிப்பதற்கென இறங்கி வந்து, தலையையும் சரீரத்தின் மற்ற பாகங்களையும் ஒன்றாக இணைப்பதற்கென, அவர் உரைத்த விதமாகவே ஒரு ஊழியத்தை திரும்பக் கொண்டு வந்துள்ளது.
118. ஏனோக்கு கட்டின அந்தக் கூர்நுனிக் கோபுரம் போல. கூர்நுனிக் கோபுரத்தின் மேல் அவர்கள் தலைக்கல் வைக்கவில்லை என்பதாக நாம் அறிகிறோம். ஏன்? தலைக்கல் இனி வரவேண்டும். கூர்நுனிக் கோபுரத்தில் உள்ள ஏழு படிகள். அதை என்றாவது ஒரு நாளில் பார்ப்போம். அது எவ்வளவு உண்மையாக பரிபூரணமாக வேதவாக்கியங்களுடன் இணைகிறது என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.
119. இப்பொழுது. உங்கள் அமெரிக்க டாலர் நோட்டை நீங்கள் கவனிப்பீர்களானால், அந்த மகத்தான தலைக்கல், ஒரு கண், “அந்த மகத்தான முத்திரை" என்று கூறுகிறது. அது வரும்.
அந்த கற்களைக் கவனியுங்கள். இங்குள்ள எவராகிலும் எகிப்திலுள்ள கூர்நுனிக் கோபுரங்களைக் காண எப்பொழுதாகிலும் சென்றதுண்டா? நல்லது. நீங்கள் கவனிப்பீர்களானால்... அங்கே, அவைகளைக் கண்டுள்ளதாக பின்னால் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சரி. அந்த கற்கள் அங்கே மிகவும் பரிபூணமாக வைக்கப்பட்டுள்ளன, அந்த உச்சியில், வளைவாக உள்ள அந்த உச்சியில், அந்த கல் வரும் போது, ஒரு பெரிய இரத்தினக்கல் அதில் மிகவும் பரிபூரணமாக பொருந்துவதாக இருக்கும்.
120. இப்பொழுது, அந்த கல் கீழேயுள்ள அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது இரண்டாம் அஸ்திபாரம் அல்லது மூன்றாம் அஸ்திபாரத்தில் பொருந்தாது. அது மேலேயுள்ள அஸ்திபாரத்தில் மட்டுமே சரியாக பொருந்தும். அப்பொழுது கட்டிடம் முழுவதுமே அந்த கல்லுடன் பொருந்தினதாய் இருக்கும். சபையானது, விசுவாசிகளின் சரீரமும். இயேசு ஒரு காலத்தில் விட்டுச் சென்ற அந்த ஊழியம் மறுபடியும் வருகிற வரையிலும் அவர் வர முடியாது... அப்பொழுது, அது எதைக் கொண்டு வருகிறதென்றால்... "அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு" என்று பவுல் எபிரெயர் 11ம் அதகாரத்தில் கூறியுள்ளான். "அவர்கள் நம்மை யல்லாமல் பூரணராகாதபடிக்கு". காலங்கள் தோறும் இருந்த லுத்தரன்களை, வெஸ்லியன்களை, இன்னும் மற்றவர்களை உயிரோடெழுப்ப அவர்களுக்கு இந்த ஊழியம் இருக்க வேண்டியது அவசியம். அது வரும்போது, கழுகுகள் கூடும் அந்த பாகம் வரும் போது...' பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்". (மத். 24:28). அதுதான் கேள்வி. ஓ, அது மிகவும் பரிபூரணமாய் உள்ளது. அந்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு விட்டதென்று நம்புகிறேன்.