121. அது ஒரு நல்ல கேள்வி, இல்லையா? ஆம், ஐயா... அது மிகவும், மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். நீங்கள் கவனிப்பீர்களானால், 1 கொரி 14:29ல், இதைக் குறித்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு... பாருங்கள்? இந்த கேள்வியை எழுதின நபர் தன் பெயரைக் கையொப்பமிடவில்லை; அவர் “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக" என்று மட்டும் கூறியுள்ளார். பாருங்கள்? 1 கொரி. 14:29ன்படி, சபையில் உள்ள எந்த ஒரு வரமும் முதலில் நிதானிக்கப்பட வேண்டும் என்று நாம் காண்கிறோம். பாருங்கள்? நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் பொல்லாத ஆவிகள் மெல்ல உள்ளே நுழைந்து விடும். ஏனெனில், மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோதுமையை முதிரப் பண்ண அனுப்பப்பட்ட அதே மழை, அதே தண்ணீர், களையையும் முதிரப் பண்ணுகிறது. எத்தனை பேருக்கு அது தெரியும்? அப்படியானால், அது சர்ப்பத்தின் வித்து என்பதைக் குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், எப்படி இந்தக் குமாரன் தோன்றினான் என்று. என் நேரம் முடிவதற்கு முன்பு, இதைக் குறித்த கேள்வியை இவைகளிலிருந்து பொறுக்கியெடுக்க முயன்று கொண்டிருக்கிறேன், என்னால் அதை கண்டுபிடிக்க இயலவில்லை; எனவே, சர்ப்பத்தின் வித்தாகிய அந்த குமாரன் எப்படி தோன்றினான் என்று. பாருங்கள்?
122. தேவனுக்கு ஒரு பிரமாணம் உண்டு. இப்பொழுது, இதன் பேரில், இந்த ஜீவனின் ஆவியைக் குறித்த பிரமாணத்தை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏனெனில் சாத்தான் மெல்ல உள்ளே நுழைந்து விடுவான்.
123. யாருக்காகிலும் ஏதாவதொன்று வெளிப்படுமானால், அது சபைக்கு முன்னால் கூறப்படுவதற்கு முன்பு, குறைந்தது இரண்டு மூன்று பேர்களால் நிதானிக்கப்பட வேண்டும் என்று பவுல் கூறியுள்ளான்.
124. இப்பொழுது. இதையும் நான் கூற முற்படுகிறேன். நான் என்... என் சகோதரன் இன்றிரவு இங்கில்லை என்று எண்ணுகிறேன். இக்கூட்டத்தை விட்டு சகோ. ஜூனியர் ஜாக்சன் சபைக்கு சென்ற ஒருவரைக் குறித்து, "அவர் 'செத்துப் போன பறவைகளின் மத்தியில் சென்றுவிட்டார்” என்று யாரோ ஒருவர் குறிப்பிட்டாராம். அவ்விதம் கூறுவது உங்களுக்கு வெட்கமாயில்லையா? நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவுக்குள் என் குழந்தையாக இங்கு இருப்பீர்களானால், உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். ஜூனியர் ஜாக்சன் என் சகோதரன். டான் ரட்டல் என் சகோதரன்.
125. நல்லது, அதற்கு காரணம் என்னவெனில், நான் சபையை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குக்குள் அமைத்து, வரங்களின் கிரியைகளை பெற்றுக் கொள்ள முடியுமா என்று காண நான் திரும்பி வரும்போது, அவர்களில் பாதி பேர் அந்த ஒழுங்கிலிருந்து அகன்று விட்டிருந்தனர். ஏனெனில் நீங்கள் பேசத் தொடங்கும் போது அல்லது பிரசங்கிக்கும் போது, அல்லது வேறெதாவதொன்றைச் செய்யும்போது... யாராகிலும் அந்நிய பாஷைகளில் பேசி, யாராகிலும் அதற்கு அர்த்தம் உரைக்காமல் உங்களால் பிரசங்கம் செய்ய இயலாது என்னும் நிலைக்கு அது வந்து விட்டது; அவைகளில் பாதி கூட நிறைவேறுவதில்லை.
126. இப்பொழுது, அந்நிய பாஷைகள் பேசுவதில் எனக்கு நம்பிக்கையுண்டு, அர்த்தம் உரைப்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால் அது சபைக்கு நேரடியாக உள்ள ஒன்றாக இருக்க வேண்டும், “கர்த்தர் சீக்கிரமாக வருகிறார்" அல்லது அப்படி ஏதாவதொன்றல்ல. “நீங்கள் அஞ்ஞானிகளைப் போல் வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்." என்று இயேசு கூறியுள்ளார். (மத்.6:7).
127. அது இப்படி ஏதாவதொன்றாக இருக்க வேண்டும்: “நீ போய் சகோ. இன்னாருடன் அவர் இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்தார் “என்றோ" சகோதரி இன்னாருடன், அவள் அன்றொரு நாள் இந்த குறிப்பிட்ட காரியத்தை செய்த போது, அவள் தன் கணவனுக்கு செய்த பொருத்தனையை மீறினாள். அவள் அதை சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால், பரிசுத்த ஆவியினால் அவள் அறுப்புண்டு போவாள் என்று சொல்" என்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவர்களாயிருக்கிறீர்கள்.
128. அப்பொழுது நீங்கள் பாவத்தை உணர்த்துகிறீர்கள். அனனியாவும் சப்பீராளும் உள்ளே வந்த போது இருந்தது போன்ற சபையை நாம் பெற்றிருப்போமானால், நாம் திடமான சபையைப் பெற்றிருக்கிறோம்.
நீங்கள், "ஓ, சகோ. பிரன்ஹாமே..." என்கிறீர்கள். ஒரு ஆளிடம் நான் இதைக் கூறினபோது, அவர்; “நீங்கள் ஒரு இறுக்கமான நிலையில் எங்களை வைத்து விடுகிறீர்கள்" என்றார்.
129. நான், “என் வாழ்நாளில் நான் கண்டிராத அந்நியர்களுக்கு முன்னால் நான் இறுக்கமான நிலையில் இல்லையா? ஆனால் இதைச் செய்ய என்னை அனுப்பின என் தேவனிடம் எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் உண்டு. ஒரு முறையாவது அது தவறாயிருந்ததில்லை, அது தேவனாயுள்ள வரைக்கும் அது ஒருபோதும் தவறாயிராது” என்றேன். அது உண்மை.
130. அவ்விதமாக பாஷை பேசுதலும் மற்ற காரியங்களும் அல்ல. இந்த அந்நிய பாஷை பேசுதலும், அந்த வரங்களைப் பெற்றுள்ள மக்களும், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாயிருந்து அதில் சிரத்தை கொண்டிருந்தால், அவர்கள் ஒன்று கூடி தங்கள் அந்நிய பாஷைகளையும் அதன் அர்த்தத்தையும் அளித்து, தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு தங்கள் சொந்த ஊழியம் ஒன்றுண்டு, ஆனால் அது கூட்டங்களில் பாவிகளின் மத்தியில் இடைபட்டுக் கொண்டிருக்கும் போது அல்ல." அவர்கள் நீங்கள் கல்லாதவர்கள் என்பார்கள்" என்று வேதம் உரைக்கிறது.
131. சில சமயங்களில் அவர்கள் மிகவும் அவபக்தியுள்ளவர்களாகி விடுகின்றனர். நம்முடைய குழு அவ்விதமாக ஆகவில்லை என்றல்ல, சிறிது காலம் அவர்களை அவ்விதமே விட்டு விட்டிருக்கிறேன். “கவனித்து பாருங்கள்” என்று நான் சொன்னேன்.
132, இப்பொழுது, இந்த சகோதரரிடம் நான் (அதை அறிந்த சாட்சிகள் இங்குள்ளனர்), “அதை தனியே விட்டு விடுங்கள், சற்று கழிந்து, அது தேவனால் உண்டானதா இல்லையா என்று நாம் பார்ப்போம். அது சிட்சையை சகிக்காவிட்டால், அது வேசிப்பிள்ளை" என்றேன். அப்படித்தான் வேதம் உரைக்கிறது (எபி.12:8). சிட்சை வந்தபோது என்ன நடந்தது, நீண்ட காலம் முன்பு என்ன நடந்தது என்று நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா? பாருங்கள்? இங்குள்ள மேய்ப்பனைக் கேளுங்கள்.
அவர், "இதைக் குறித்தென்ன, அதைக் குறித்தென்ன? என்று கேட்டார்.
133. நான், “அதை தனியே விட்டு விடுங்கள். அவர்கள் குழந்தைகள். அதை நாம் நிதானிக்க முடியாது. ஆனால் அதை வார்த்தைக்கு உட்படுத்தும்போது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்" என்றேன்.
134. இப்பொழுது, அதனுடன் இணங்காமலிருக்க சகோ". ஜூனியர் ஜாக்சனுக்கு உரிமையுண்டு. அவர் விரும்புவது, தமது சபை... சபையோரின் மத்தியில் ஜனங்கள் எல்லோரும் அந்நிய பாஷை பேச விரும்புகின்றனர். அது சகோ. ஜூனியரின் தொல்லை அது அவரைப் பொறுத்தது. ஆனால் நாம் விசுவாசிப்பது போலவே ஜூனியர் ஜாக்சனும் இந்த செய்தியை விசுவாசிக்கிறார். அவர் நம்மில் ஒருவர். அங்கு போவதனால் ஒருவர் 'செத்த பறவை' ஆகி விடுவதில்லை. ஜூனியர் ஜாக்சன் தேவனுடைய மனிதன், அவரை என் முழு இருதயத்தோடும் நான் நேசிக்கிறேன். அவர் இன்றிரவு இங்கில்லை, எனவே நான் விரும்பும் விதமாக இதை வெளிப்படையாகக் கூறலாம்.
135. டான் ரட்டல்... டான் இன்றிரவு இங்கில்லை என்று நினைக்கிறேன், ஏனெனில் அவர்களுக்கு தங்கள் சொந்த சபை ஒன்றுண்டு. இந்த கூடாரத்துக்கு வரும் ஒவ்வொருவரும் வெளிவந்து டான் ரட்டல் அல்லது ஜே.டி.பார்னல், அல்லது நமது சகோதரர்களாயும் தேவனுடைய ராஜ்யத்தில் உடன் குடிமக்களாயும் உள்ளவர்கள் நடத்தும் சபை ஏதொன்றுக்கும் செல்வார்களானால், நான் மிக்க மகிழ்ச்சியடைவேன், எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நான், “கர்த்தாவே, இதை நீர் மறுபடியும் நிரப்புவீராக. அதை வெளியே ஊற்றி விட்டு வேறொன்றை நிரப்புவீராக" என்பேன். அது எனக்கு பிரியமாயிருக்கும். இந்த பையன் நிரப்பப்படுவதைக் காண நான் பிரியப்படுவேன்?. அவர்கள் என் பிள்ளைகள்.
136. இப்பொழுது ஜே.டி. அல்லது மற்றவர்கள் நான் விசுவாசிப்பது போல் விசுவாசிக்க வேண்டியதில்லை; அவர்கள் அவ்விதம் செய்ய வேண்டியதில்லை. இன்று காலையில் நான் உங்களிடம் கூறினது போல், என் மனைவியுடனும் கூட நான் கருத்தொருமிப்பதில்லை, அவளும் என்னுடன் கருத்தொருமிப்பதில்லை. நான் உண்ணும் மேசைக்குச் சென்று, ஜூனியர் 'ஆப்பிள் பையும் நான் 'செர்ரி பையும் உண்கிறோம் என்றால், சகோதரனே, நாங்கள் இருவருமே 'பை' தான் உண்கிறோம். அவ்விஷயத்தில் எங்களுக்கு ஒருமைப்பாடு உண்டு, ஆனால்... நாங்கள் இருவருமே அதே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறோம். அவருடைய சபை ஒழுக்கம்...
137. பேதுருவுக்கும் பவுலுக்கும் கருத்து வேற்றுமை உண்டாயிருந்தது, அது உங்களுக்குத் தெரியும், அவர்களுடைய உபதேசங்களில் அல்ல, ஆனால் பேதுரு நடந்து கொண்ட விதத்தில். அவர்களுக்கு அந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை இருந்தது, ஆனால் அது அவர்களைப் பிரித்துவிடவில்லை. அவர்கள் சகோதரர்களாயிருந்தனர். நிச்சயமாக நமக்கும் கருத்து வேற்றுமைகள் இருக்கும்... எனக்கு அசெம்பிளீஸ் ஆப் காட் ஸ்தாபனத்துடன் கருத்து வேற்றுமை உண்டு. அவர்களுடைய முறைமைகளுடன் எனக்கு கருத்து வேற்றுமை உண்டு, ஆனால் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் உள்ள பலர் விலையேறப் பெற்றவர்கள்.
138. நான் பாப்டிஸ்டுகளோடும், பிரஸ்பிடேரியன்களோடும், அவர்களுடைய முறைமைகளுடனும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளேன், ஆனால் அவைகளில் உத்தமமான கிறிஸ்தவர்கள் உள்ளனர்.
139. இன்று பிற்பகலில் எனக்கு ஒரு தந்தி வந்தது, அதை நான் எங்கோ வைத்து விட்டேன். ஒரு சகோதரன், ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியார், மனிதர் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, மனிதன் தேவனுக்கு மரியாதை செலுத்தும் ஒரு இடத்துக்கு வர அவர் நீண்ட காலம் முயன்று கொண்டிருப்பதாக கூறினாராம்.
140. இந்த சபைக்கு வரும் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் அவரிடம் “அந்தவிதமான இடத்துக்கு உங்களை நான் கொண்டு செல்கிறேன்” என்றாராம். அவர் இங்கு வருவதற்கு மிகுந்த ஆவல் கெண்டிருந்தார், ஒரு பாப்டிஸ்டு. பாருங்கள், அவர்கள் எல்லா விடங்களிலும் சிதறியுள்ளனர். அவர்களுடைய முறைமையுடன் நான் இணங்க மாட்டேன், ஆனால் அந்த குழுவின் பேரில் நான் அன்பு கெண்டுள்ளேன். எனவே சகோதரர்களைக் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லாதீர்கள்.
141. இங்கே, இந்த வரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. எந்த ஒரு வரமும்... அதை கவனிக்க வேண்டும். சாத்தான் எந்த ஒரு வரத்தையும் பாவனை செய்ய முடியும். இந்த 'பீட்டில்ஸ்'களை பாருங்கள், அவர்கள் இப்பொழுது தெய்வீக சுகமளித்தலை பாவனை செய்யப்போகின்றனர் - அசுத்தமான, அழுக்கான, அழுகிப் போன நரகத்திலிருந்து பிறந்த இவர்கள். பாருங்கள்? சரி.