143. இக்கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முயல்கிறேன். இப்பொழுது, ஆதியாகமம் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், மாம்சமான யாவரும் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்ததாக தேவன் உரைத்தார். ஆம், அது விவாகம், விவாகரத்து, மற்றெல்லாமே. "நோவாவின் காலத்தில் அவர்கள் எவ்வாறு விவாகம் செய்தனர், பெண் கொடுத்தனர்" என்று வேதம் விளக்குகிறது. அது கடைசி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும், அடையாளங்களில் ஒன்று.
144. இப்பொழுது, உலகம் செய்தது அனைத்தும் அது ஒன்றே என்றால், அது மட்டுமே கடைசி காலத்தின் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாது - எவ்வாறு அந்நிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அத்தாட்சி என்று என்னால் கூற முடியாதோ, அவ்வாறே. நோவாவின் நாட்களில் இருந்தது போன்ற விவாகமும் விவாகரத்தும் உண்டாயிருக்கும் ஒரு காலம் வரும் என்பது உண்மையே, ஆனால் அதனுடன் வேறு பல காரியங்களும் இருக்கும்; அது பல அடையாளங்களில் ஒன்றாகும்.
145. அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது பரிசுத்த ஆவியின் அடையாளங்களில் ஒன்று, ஆனால் அது பரிசுத்த ஆவியின் பிழையற்ற அடையாளம் அல்ல - பெண்களும் ஆண்களும் விவாகம் செய்து கொண்டு விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் விவாகம் செய்வது எப்படியோ அது போன்று. அது மட்டும் ஒரே அடையாளம் இல்லை. அது ஒன்று மட்டும் இருக்குமானால், அதை அவ்விதம் என்னால் அழைக்க முடியாது. பாருங்கள்? அது தேவன் என்பதாகச் செய்ய, அந்நிய பாஷை பேசுவதுடன் மற்ற காரியங்களும் கூட இருக்க வேண்டும்.