146. இப்பொழுது, "ஆயிரம் வருட அரசாட்சியின் போது குழந்தைகள் பிறப்பார்களா?" அது என் மனதிலும் உள்ள கேள்வி, அன்றொரு நாள் அதை உங்களிடம் கூறினேன், எனக்குத் தெரியாது. அவ்விதம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த வரையில், நான் உங்களிடம் உண்மையாயிருக்கப் போகிறேன். இது வரைக்கும் எனக்கு அதைக் குறித்து தெரியாது. தேவன் எப்பொழுதாகிலும் அதை எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் உங்களிடம் கூறுவேன். காத்திருங்கள்; அது தேவனிடத்திலிருந்து வர வேண்டும். நீங்கள் என் பிள்ளைகள். நான் உங்களிடம் கூற இயலாது. அவ்விதம் இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் கூற இயலவில்லை.
147. "...அந்த காலத்தில் பூமியில் பாவம் உண்டாயிருக்குமா?" இருக்காது. பூமியில் அப்பொழுது பாவம் எதுவும் இருக்காது சாத்தான் கட்டப்பட்டிருப்பான்.
148. “அந்த காலத்தில் பூமியில் மனித சரீரங்களில் ஜனங்கள் இருப்பார்களா?”ஆம், ஐயா! நாம் நமது மகிமையின் சரீரங்களை உடையவர்களாய், பூமியில் புசித்தும், குடித்தும், வீடுகளைக் கட்டிக் கொண்டும், இப்பொழுது நாம் வாழ்ந்து வருவது போல, ஆயிரம் வருடங்கள் வாழ்வோம். அது மணவாட்டிக்கும் மணவாளனுக்கும் தேன் நிலவு காலம்.