149. சகோதரனே, நான் - நீங்கள் ஒரு வேதசாஸ்திர பண்டிதர், நான் வேத சாஸ்திர பண்டிதன் அல்ல. ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். இயேசு, “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்று கூறியுள்ளார். வேறு சொற்களில் கூறுவோமானால், வேத வாக்கியங்களுடன் அதை இணைத்து பார்ப்போமானால், "மனிதனுக்கு எல்லாவிதமான பாவங்களும் மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவ தூஷணம் சொல்லுதல் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தேவ தூஷணம் சொல்லுதல் என்பது, அதை பரிகாசம் செய்தல், அதைக் குறித்து பேசி. கேலி செய்தல். அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்யும் போது, சரியானதற்கும் தவறானதற்கும் இடையே உள்ள கோட்டை நீங்கள் தாண்டி விடுகிறீர்கள்.
150. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண்பீர்களானால்... உதாரணமாக, பரிசுத்த ஆவி இங்கு இறங்கி வந்து வழக்கம் போல சிந்தனைகளைப் பகுத்தறிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது பரிசுத்த ஆவியாக இருந்து, அதை நீங்கள் விசுவாசிக்காமல், நீங்கள் வெளியே சென்று அதை கேலி செய்து, அதைக் குறித்து பேசுவீர்களானால், நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் முடிந்து விட்டீர்கள். நீங்கள் அதை செய்யக் கூடாது. நீங்கள் தேவனால் உண்டாயிருக்கவில்லை என்பதை அது அங்கேயே நிரூபித்து விடுகிறது, ஏனெனில் தேவனுடைய வித்து மனிதனில் தங்கியிருக்கும் போது, அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். வார்த்தை வெளிப்படுவதை அவன் காணும் போது, அவன் அதை விசுவாசிப்பான். அவனால் ஒன்று மட்டுமே...
151. பாருங்கள், ஒரே ஒரு பாவம் தான் உள்ளது, ஒரே ஒரு பாவம். எத்தனை பேருக்கு அது தெரியும்? அது அவிசுவாசம். அது உண்மை . விபச்சாரம் செய்தல் பாவம் அல்ல, சிகரெட்டு புகைத்தல், பொய் சொல்லுதல், சபித்தல் இவை பாவம் அல்ல. இவை அவிசுவாசத்தின் தன்மைகள் (attributes). நீங்கள் அதை செய்யும் காரணம், நீங்கள் விசுவாசி அல்ல என்பதனால். அது உண்மை. எனவே, பாருங்கள், ஒரே ஒரு பாவம் உண்டு, அதுதான் அவிசுவாசம்.“விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று" (யோவான் 3:18). அவன் என்ன செய்த போதிலும், அவன் தொடக்கத்திலேயே ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டுவிட்டான். சரி.