153. நல்லது. எனக்கு அதைக் குறித்து தெரியாது. என்னால் சொல்ல இயலாது. ஆனால் நான் இவ்விதமாக உணருகிறேன். இதை நான் கூற விரும்புகிறேன். நான் ஒரு ஸ்திரீயாக இருந்து, என் கணவர் ஆரோக்கியமுள்ளவராயிருந்து, அவருக்கு ஒரு நல்ல வேலை இருந்து அவர் வேலை செய்து கொண்டிருப்பாரானால், நான் வீட்டில் தங்கி என் பிள்ளைகளைக் கவனித்து, அவர்களை வளர்த்து, கர்த்தரை நேசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். துணிகளை சலவை செய்தல் போன்ற வீட்டு வேலைகளை நான் செய்த பிறகு எனக்கு நேரம் கிடைக்குமானால், தேவனை எவ்விதம் சேவிப்பது என்பதைக் குறித்து என் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பேன்.
154. இப்பொழுது, உங்களுக்கு கடன் ஏதாகிலும் இருந்து அதை அடைப்பதற்கென உங்கள் கணவனுக்கு உதவி செய்ய முயன்றால், அவ்விதம் நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமென்று இருந்தால்... நல்லது. நீங்கள் பண்புள்ள பெண்ணாக வாழுங்கள். ஆனால் அது கடினம் என்று எண்ணுகிறேன். நன்றாக புரிந்து கொண்டுள்ள எந்த ஒரு மனிதனும் தன் மனைவி அத்தகைய கூட்டத்தினரின் மத்தியில் வேலை செய்வதை விரும்பமாட்டான். அவர்கள் அவலட்சணமான, அசுத்தமான மனிதர்கள். ஆனால் ஒரு ஸ்திரீ அந்த சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியது அவசியமானால், நான் நினைக்கிறேன், அவள். அவள் உத்தமமான கிறிஸ்தவள் என்றும், அவள் நம்பிக்கையுள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஸ்திரீ என்றும் அவளுடைய கணவன் அறிந்திருக்க வேண்டும்.
155. இப்பொழுது, அவள் வேலை செய்யக் கூடாது என்னும் விஷயம் வரும் போது, எனக்குத் தெரியாது. பாருங்கள், அதை ஆதரிக்க வேத வசனம் எதுவுமில்லை. என் கருத்தை மட்டும் நான் தெரிவிக்கிறேன். நான் நினைப்பது என்னவெனில், ஒரு ஸ்திரீ வேலை செய்ய விரும்பினால், அவளுக்கு வேலை செய்ய பிரியமானால்...
156, இப்பொழுது, ஸ்திரீகள் இப்படிப்பட்ட அலுவலர்கங்களில் வேலை செய்வதில் நான் நிச்சயம் விரோதமாக இருக்கிறேன், அங்கு இந்த வியாபாரிகள். அவர்கள் அசுத்தமான நகைச்சுவை துணுக்குகளைக் கூறுகின்றனர். அங்கு ஒரு நல்ல சுத்தமான ஸ்திரீ உட்கார்ந்திருந்து, இந்த அசுத்தமான , அவலட் சணமான காரியங்கள் அங்கு கூறப்படும் போது, அதற்கு விரோதமாக நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டுமென்பது என் கருத்தாகும்.
157. ஆனால் ஒரு ஸ்திரீ தன்னைப் பண்புள்ள பெண்ணாக காத்துக் கொண்டு, பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு துணிகள் வாங்கவும், கடனைச் செலுத்தவும், கடன் முடியும் வரைக்கும் வேலை செய்து தன் கணவனுக்கு உதவி செய்ய முயன்றால்... இப்பொழுது, இது கர்த்தர் அல்ல, ஏனெனில் இதை ஆதரிக்க எனக்கு வேத வசனம் கிடையாது. நான் கூறுவது என் சொந்த கருத்து; அத்தகைய சூழ்நிலை எதுவுமின்றி, கொஞ்சம் அதிகம் பணம் சம்பாதித்து, மது கடைகளுக்கு சென்று குடிக்கவும், புகைக்கவும், இவ்விதம் நடந்து கொள்வதற்காக அவள் வேலை செய்ய விரும்பினால், அவள் அவ்விதம் செய்யக் கூடாது என்று எண்ணுகிறேன். அவள் வீட்டில் தங்கியிருந்து, ஒரு பண்புள்ள பெண்ணாக இருந்து, வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.