“நீங்கள் இரண்டாம் விவாகத்தில் ஈடுபட்டிருந்து. அதில் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்து கொண்டவர்களாக இருப்பீர்களானால்..." இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். பாருங்கள்? ஆம், ஏற்கனவே பதில் கூறி விட்டேன். இருவருமே... நான்.
158. மக்களே, இவைகளை நான் கூற வேண்டிய சூழ்நிலை இல்லாமலிருந்தால், நலமாயிருந்திருக்கும். இந்த கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் என் நண்பர்கள் உள்ளனர், எனக்குத் தெரியும் அவர்கள். இதைக் கூறுவது என்னைக் கொன்று விடுகிறது. ஆயினும் அதை நான் கூறியே ஆக வேண்டும். பாருங்கள்? உலகமானது இத்தகைய மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது.
159. ஏதோ ஒரு ஏழை ஸ்திரீ தவறு செய்து ஒரு குடிகாரனை மணம் செய்து கொண்டு, அந்த வழியே சென்று விடுகிறாள், அல்லது ஏதோ ஒரு ஏழை மனிதன் தெருவில் திரியும் ஒரு பெண்ணை அறியாமல் மணம் புரிந்து கொண்டு, அவன் உயிரோடுள்ள வரைக்கும் அந்த பெண்ணுடன் கட்டப்பட்டிருக்கிறான். அது மிகவும் பயங்கரமான ஒரு காரியம். விவாகம் என்பது புனிதமான ஒன்று.
அநேக சமயங்களில், பாவிகளான இளைஞர்கள் இத்தகைய காரியங்களைச் செய்து விட்டு, இதெல்லாம் என்ன வென்று வியக்கின்றனர். அது... இந்த விவாகமும் விவாகரத்தும் என்பதை, அதை விளக்க வேண்டிய விதத்தில் விளக்க கர்த்தர் என்னை அனுமதிப்பாரானால், அது எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் என்று எண்ணுகிறேன். இவை யாவும்... (ஒலி நாடாவின் முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் கேள்வியின் நடுவில் துவங்குகிறது - ஆசி)